Savukku Shankar will be freed from the thugs law
சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் கைது செய்தது தவறு சென்னை உயர் நீதிமன்றம் வெளியிட்ட கருத்து..!
திமுக எப்பொழுதும் ஒரு தனி மனிதனைப் பார்த்து பயப்படக்கூடிய கட்சி எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்தபோது கலைஞரால் 12 வருடங்கள் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை செல்வி ஜெயலலிதா அவர்கள் உயிருடன் இருக்கும் வரை அதிமுகவை அவர்களால் அசைத்துக் கூட பார்க்க முடியவில்லை.
தற்போது சவுக்கு சங்கரை பார்த்து திமுக பயப்படுகிறது இவர் எப்படியும் வெளியில் சுதந்திரமாக இருக்கக் கூடாது என தொடர்ந்து இவர் மீது வழக்கு பதிவு செய்கிறது எத்தனை வழக்கு பதிவு செய்தாலும் ஜாமினில் வெளிவந்து விடுகிறார்.
பெண் காவல்துறை நபர்களை அவதூறாக பேசியதின் காரணமாக கடந்த மே மாதம் 4ம் தேதி தேனியில் கைது செய்யப்பட்டார் அதன் பிறகு இவர் மீது தொடர்ந்து 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது குண்டர் சட்டமும் பதிவு செய்யப்பட்டது.
உடன்பிறப்புகள் 2026 வரை சவுக்கு சங்கர் சிறையில் இருப்பார் என சமூக வலைத்தளங்களில் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்தார்கள் ஆனால் அவர்களுடைய மகிழ்ச்சி அதிக நாட்கள் நீடிக்க வில்லை சரியாக 3 மாதம் நடைபெறுகிறது சவுக்கு சங்கர் சிறைக்கு சென்று.
தற்போது ஏறக்குறைய அனைத்து வழக்குகளிலும் இருந்து ஜாமீன் பெற்று விட்டார் குண்டர் சட்டத்திற்கும் உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது தற்போது சென்னை உயர்நீதிமன்றம் குண்டர் சட்டத்தில் சவுக்கு சங்கரை கைது செய்தது தவறு என கருத்து தெரிவித்து.
வழக்கு விசாரணை தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது எப்படியும் இன்னும் 20 நாட்களில் இதற்கு தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் குறிப்பாக உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது என்றால்.
அந்த வழக்கு சவுக்கு சங்கருக்கு சாதகமாக அமையும் தற்போது சென்னை உயர்நீதிமன்றமும் இதே கருத்தை தெரிவித்துள்ளதால் தீர்ப்பில் சவுக்கு சங்கருக்கு சாதகமாக இருப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
17 வழக்குகளில் 10 வழக்குகளுக்கு மேல் ஜாமீன் பெற்று விட்டார் 5 வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது இப்படி இருக்கும் சூழ்நிலையில் இறுதியாக இவர் மீது புதிதாக ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
முத்துராமலிங்கத் தேவர் ஐயாவை தவறாக பேசி இருக்கிறார் என வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது இதிலும் அதிகமாக ஒரு மாதம் இவரை சிறையில் வைக்க முடியும்.
அதன் பிறகு சிறையில் வைப்பதற்கு வாய்ப்புகள் இல்லை இப்படி இருக்கும் சூழ்நிலையில் சரியாக செப்டம்பர் 30ம் தேதிக்குள் சவுக்கு சங்கர், சிறையில் இருந்து வெளியில் வருவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
கடும் அச்சத்தில் திமுக
சவுக்கு சங்கர் இந்த முறை சிறையில் இருந்து வெளியில் வந்தால் நிச்சயம் திமுகவிற்கு எதிராக மிகப்பெரிய ஒரு இயக்கத்தை தொடங்கி விடுவார் என்பது அனைவரும் அறிந்த விஷயம் அப்படி தொடங்கினால் தினமும் திமுகவிற்கு குடைச்சலை கொடுக்க ஆரம்பித்து விடுவார்.
ஏற்கனவே நாம் தமிழர் கட்சி கடும் கோபத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றி மேடையில் அதே பாடலை பாடி என்னை கைது செய் உன்னால் முடிந்தால் என நேரடியாக சவால் விடுகிறார்கள்.
தற்போது அதிமுகவும் உச்சகட்டத்தில் திமுகவை எதிர்த்து வருகிறது விஜயும் திமுகவை எதிர்ப்பதற்கு தயாராக இருக்கிறார் பாமகவும் நேரடியாக திமுகவிற்கு சவால் விடுகிறது.
தொடர்ந்து தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு என்பது உச்சகட்டத்தில் இருக்கிறது இன்று சேலம் மாவட்டம் எடப்பாடி காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.
சவுக்கு சங்கர் வழக்கில் என்ன நடந்தது
சவுக்கு சங்கர் கருத்து கண்டனத்துக்குரியது என தெரிவித்த நீதிபதிகள் இதற்காக அவர் மீது வழக்கு பதிவு செய்து அவருக்கு தண்டனை பெற்று தரலாம் ஆனால் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டது தவறு என குறிப்பிட்டுள்ளார்கள்.
சில திரைப்படங்களில் காவல்துறை வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகள் குறித்து தவறாக விமர்சனம் முன் வைக்கப்படுகிறது அப்படி என்றால் அனைவரும் மீதும் நடவடிக்கை எடுக்கலாமே என நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளார்கள்.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட தடுப்பு காவல் சட்டத்தை தற்போது நாம் பயன்படுத்தினால் அது நம்மை ஆங்கில ஆட்சி களத்திற்கு கொண்டு செல்லும் எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் இந்த மனு மீதான தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளார்கள்.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |