Ramadoss said should be no age limit for TNPSC Group 2 exam
TNPSC Group-2 தேர்வுகளுக்கு வயது வரம்பு நிர்ணயிப்பது சமூக நீதிக்கு எதிரானது உடனடியாக திரும்பப் பெற வேண்டும்..!
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு குறித்து ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது, குரூப் 2 தேர்வு வருகின்ற செப்டம்பர் மாதம் 14ஆம் தேதி தமிழக முழுவதும் நடத்தப்படுகிறது இதில் 2327 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது 61 வகையான பணிகளுக்கு தேர்வு நடைபெறுகிறது.
பாமக நிறுவன தலைவர் ராமதாஸ் TNPSC Group-2 தேர்வு குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார் அது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது அதாவது குரூப்-2,2A பணியிடங்களுக்கு இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு வயது வரம்பு நிர்ணயிக்கப்படுவதில்லை.
அவர்கள் குறைந்தபட்சம் ஓராண்டு வரை பணி செய்யலாம் அதாவது 59 வயது வரை இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க முடியும், ஆனால் தற்போது 2024 ஆம் ஆண்டுக்கான அறிவிப்பில் குரூப்-2,2A அறிவிக்கப்பட்ட 13 பணியிடங்களுக்கு வணிகவரி அதிகாரி, வனவர், சார்பதிவாளர், நன்னடத்தை அலுவலர், ஆகிய பணியிடங்களுக்கு வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பது அதிர்ச்சி அளிக்கிறது.
அதிகபட்சமாக 37 வயது என்று அறிவிக்கப்பட்டுள்ளது ஒட்டுமொத்த பணியிடங்கள் 2327 அதில் 446 பணியிடங்களுக்கு வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது இந்த குரூப் 2 தேர்வு பொருத்தவரை தமிழகத்தில் கடுமையான போட்டி இருக்கும் இளைஞர்கள் அதிகமாக விண்ணப்பம் செய்வார்கள் அதனால் இந்த பணிகளை பெற இளைஞர்களிடையே அதிக ஆர்வம் உள்ளது.
திடீரென்று வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் இட ஒதுக்கீட்டு பிரிவில் 37 வயதை கடந்த எவரும் இந்த பணியிடத்திற்கு தற்போது விண்ணப்பிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது, அரசு போட்டி தேர்வுகளுக்காக தங்களை இரண்டு மூன்று ஆண்டுகளாக தயார்படுத்தி தேர்வுக்கு காத்திருக்கும் இளைஞர்களுக்கு இது மிகப் பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கு முன்பு 2026 ஆம் ஆண்டு குரூப்-2,2A பணிகளுக்கு அறிவிப்பு 23.02.2022 அன்று வெளியிடப்பட்டது அதில் குரூப்-2,2A பணிகளுக்கு இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு நிர்ணயிக்கப்படவில்லை என்பதை தமிழக அரசு உணர்ந்து கொள்ள வேண்டும்.
அதன் பிறகு இரு ஆண்டுகள் கழித்து தற்போது குரூப்-2,2A தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது,அந்த அறிவிப்பில் புதிதாக வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது ஏன் என்ற கேள்வியை அவர் எழுப்பி உள்ளார்.
அதிகாரப்பூர்வ அறிக்கையில் இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு குறித்து 4.1.2.2 பிரிவு தெளிவாக இல்லை 4.1.2.2 பிரிவில் இடம் பெற்ற விவரங்கள் சரியான தகவல்களை வெளியிடவில்லை என்று தோன்றுகிறது.
அரசியல் சட்ட அமைப்பான தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிடும் அதிகாரப்பூர்வ அறிக்கையில் இந்த அளவுக்கு குளறுபடிகள் நடந்துள்ளது என்பதை தெளிவாக தெரிவிக்கிறது.
அரசு பணியாளர் தேர்வாணையத்தில் குரூப்-2,2A பணிகளுக்கு அதிகபட்ச வயது வரம்பு நிர்ணயிக்கும் முடிவை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும், இட ஒதுக்கீடு பிரிவினர்களுக்கு வயது வரம்பு குறித்த விவரங்கள் தெளிவான அறிக்கையில் வெளியிட வேண்டும் என மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |