மாதம் தோறும் 5 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வேலை வாய்ப்பு பயிற்சி மோடியின் கனவு திட்டம் தொடக்கம் இளைஞர்களை விண்ணப்பித்து பயன்பெறுங்கள்..!PM Internship Scheme is an employment program full details

PM Internship Scheme is an employment program full details

மாதம் தோறும் 5 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வேலை வாய்ப்பு பயிற்சி மோடியின் கனவு திட்டம் தொடக்கம் இளைஞர்களை விண்ணப்பித்து பயன்பெறுங்கள்..!

நாட்டில் வேலை வாய்ப்பு மற்றும் சிறு தொழில் போன்றவற்றை அதிகரிப்பதற்கு மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது இதன் பலனாக புதிய வேலைவாய்ப்புகளும் இளைஞர்கள் தொழில் தொடங்கவும் ஆர்வம் காட்டுகிறார்கள்.

கடந்த 10 ஆண்டுகளாக நாட்டில் சிறு தொழில் வளர்ச்சி என்பது உச்சகட்டத்தில் இருக்கிறது தற்போது மோடி ஆட்சியின் கீழ் புதிய திட்டம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது அதாவது ஒவ்வொரு வருடமும் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட இளைஞர்களை தேர்ந்தெடுத்து மிகப்பெரிய நிறுவனங்களில்.

அவர்களை பயிற்சிக்கு அனுப்பி அதற்கு ஊக்கத்தொகையும் கொடுக்க மோடி அரசு முடிவு செய்துள்ளது இதனால் ஒவ்வொரு வருடமும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் புதிய தொழில் அல்லது புதிய வேலைவாய்ப்பு சம்பந்தமான பயிற்சிகளை பெறுகிறார்கள்.

மாதம் 5,000/- ரூபாய் என வருடத்திற்கு 60,000/- ரூபாயை மத்திய அரசு ஒவ்வொரு இளைஞருக்கும் ஒதுக்குகிறது இந்த திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்கள் தொழில் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்.

நாட்டில் வேலையில்லாத திண்டாட்டத்தை குறைக்கும் வகையில் படித்த இளைஞர்களுக்கு சரியான வழிகாட்டி சரியான பயிற்சி என்பது கட்டாயம் தேவை மிகப்பெரிய முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதற்கு குறைந்தபட்சம் பணி அனுபவம் தேவை என அந்த நிறுவனங்கள் கேட்கிறது,இதனை நீக்கும் வகையில் மோடி அரசு இந்த செயல் திட்டத்தை தொடங்க உள்ளது.

மோடியின் கனவு திட்டம் என்ன

இந்த நிலையில் தான் நாட்டில் வேலை வாய்ப்பு இல்லாத திட்டத்தை குறைக்கும் விதமாக வேலைக்கு பயிற்சி வழங்கும் விதமாகவும் புதிய திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது பயிற்சி வழங்க நாடு முழுவதும் மிகப்பெரிய 500 முன்னணி நிறுவனங்களை மத்திய அரசு தேர்வு செய்து.

அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் முடித்து விட்டது இந்த நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப் பயிற்சி பெறுவதற்கு இளைஞர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் தேர்வு செய்யப்படும் இளைஞர்களுக்கு மாதம் 5,000/- ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும்.

ஒரு ஆண்டிற்கு 60 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் ஒவ்வொரு வருடமும் 1.25 லட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு இதில் மத்திய அரசு 4500 சம்பந்தப்பட்ட நிறுவனம் 500 ரூபாயும் வழங்கும்.

தகுதி உள்ள இளைஞர்கள் வருகின்ற 12ஆம் தேதி முதல் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் பதிவு செய்த விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பரிசீலனை செய்து நவம்பர் 27ஆம் தேதிக்குள் தேர்வு செய்த பட்டியலை வெளியிடும்.

அதன் பிறகு பயிற்சிகள் டிசம்பர் 2ம் தேதி தொடங்கும் சோதனை அடிப்படையில் இந்த திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது 2024-2025 நிதி ஆண்டில் 1.25 லட்சம் நபர்களுக்கு இன்டர்ன்ஷிப் வழங்க முடிவு செய்துள்ளது.

திட்டத்தில் இணைவது எப்படி அதற்கான தகுதி என்ன

விண்ணப்பம் செய்யும் இளைஞர்களுக்கு குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 24 வயதுக்குள் இருக்க வேண்டும்

இவர்கள் இதுவரை வேறு எந்த நிறுவனத்திலும் முழு நேர ஊழியராக இருந்திருக்கக் கூடாது

குடும்பத்தில் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர் யாரேனும் இருந்தால் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க முடியாது

ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் படித்தவர்களும் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க முடியாது

டிப்ளமோ முடித்திருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதி பெற்றவர்கள் கலை அறிவியல் பிரிவில் (BSC,BA,BBA,B.Pharm,BCom,) உள்ளிட்ட பட்டப்படிப்பு முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

குடும்பத்தின் ஆண்டு வருமானம் 8 லட்சத்தை கடந்திருக்கக் கூடாது

முதுநிலை பட்டதாரிகள் தொழில் பயிற்சி திட்டத்தில் கலந்து கொள்ள முடியாது.

விண்ணப்பிப்பது எப்படி அதிகாரப்பூர்வை இணையதளம் என்ன

விருப்பமும் தகுதி உடைய விண்ணப்பதாரர்கள் http://www.pminternship.mca.gov.in/ என்கின்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் பிரதமர் மோடியின் கனவு திட்டமான இந்த தொழில் பயிற்சி திட்டத்தின் கீழ் அடுத்த 5 ஆண்டுகளில் சுமார் ஒரு கோடி அதிகமாக நபர்களுக்கு தொழில் பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் 2024 இல் சிறந்த 10 சுகாதார காப்பீட்டு நிறுவனங்களின் பட்டியல்..!

கடந்த 3ம் தேதி இந்த திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது இந்த தொழில் பயிற்சி அளிக்கும் திட்டத்தில் மகேந்திரா குழுமம், டாடா, மாருதி சுசுகி, அதானி குழுமம், ஐ சி ஐ சி ஐ, ஹிந்துஸ்தான் லீவர், சாம்சங், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்துள்ளன.

JOIN OUR GROUPS

WHATSAPP CLICK HERE
TELEGRAM CLICK HERE

Leave a Comment