Physics Previous Question to Score High in TNPSC Exam July 13
TNPSC தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கு இயற்பியலில் முந்தைய வினா விடைகள்..!
நீங்கள் போட்டி தேர்வில் வெற்றி பெற்றாலும் அதிகமான கட் ஆப் மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே நீங்கள் அரசு வேலைவாய்ப்பை பெற முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
தேர்வில் வெற்றி பெறுவதற்கு 60% மதிப்பெண்கள் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் நிர்ணயித்துள்ளது ஆனால் சில மாணவர்கள் 90% மதிப்பெண்கள் பெற்று வேலை வாய்ப்பு பெறுகிறார்கள்.
இங்கு 0.1 என்ற முறையில் கூட பல்வேறு வேலை வாய்ப்புகள் இங்கு இழக்கப்படுகிறது, அதனால் நீங்கள் அதிக மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே தேர்வில் வெற்றி பெற முடியும் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கு தமிழ் தாள் மற்றும் பொதுதாள் இரண்டிலும் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும்.
தமிழ் தாளில் நீங்கள் 90 மதிப்பெண்கள் எளிமையாக பெற்ற விடலாம் ஆனால் 95 மதிப்பெண்கள் பெறுவதற்கு நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும் ஆனால் பொது அறிவு, நடப்பு நிகழ்வுகள், இயற்பியல், வேதியல், விலங்கியல், தாவரவியல், கணிதம், உள்ளிட்டவைகள் அனைத்தும் சேர்ந்து 75 கேள்விகள்.
TNPSC பொருளாதார பாடப்பிரிவின் இந்த பகுதியில் மிக முக்கியமானது தேர்வில் வெற்றி பெறுவதற்கு..!
திறனறிவு 25 கேள்விகள் போன்றவை இருக்கிறது, இயற்பியலில் கருவிகள் கண்டுபிடிப்புகள் முக்கியமானது அதனை பற்றி இந்த கட்டுரையில் முழுமையாக காணலாம்.
இயற்பியலில் கருவிகளும் பயன்பாடுகளும்
அல்டிமீட்டர் (Altimeter) – குத்து உயரங்களை அளக்க உதவும் திரவம் இல்லாத கருவி
அம்மீட்டர் (Ammeter) – மின்னோட்டத்தின் வலிமையை அளக்க உதவுகிறது
அனிமோமீட்டர் (Anemometer) – காற்றின் வேகம் மற்றும் திசையை அறிய உதவுகிறது
ஆடியோமீட்டர் (Audiometer) – கேளோலி அளவில் திறனை அளக்க உதவுகிறது
பாரோமீட்டர் (Barometer) – வளிமண்டல அழுத்தத்தை அளக்க உதவுகிறது
தொலைநோக்கிகள் (Binoculars) – தொலைதூரப் பொருளைக் காண உதவுகிறது
கலோரி மீட்டர் (Calorimeter) – வெம்மையளவில்
குரோனாமீட்டர் (Chronometer) – காலத்தை அளக்கும் மிக நுட்பமான கருவி
கிளினிக்கல் தெர்மோமீட்டர் (Clinical thermometer) – மனித உடல் வெப்பத்தை அளக்க உதவும்
கலரி மீட்டர் (Colorimeter) – வண்ணங்களின் தீவிரத்தை ஒப்பு நோக்க உதவுகிறது
பரிமாற்றி (Commutator) – மின்னோட்டத் திசையை மாற்ற உதவுகிறது
டைனமோ மீட்டர் (Dynamo meter) – மின் திறனை அளக்க உதவுகிறது
எலக்ட்ரோஸ்கோப் (Electroscope) – மின் காட்டி வெப்பநிலையை அளக்க உதவுகிறது
கால்வனாமீட்டர் (Galvanometer) – மின்னோட்டத்தை மிக நுண்மையான அளக்க உதவுகிறது
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |