Petrol bomb hurled at policeman in Sirkhazi
சீர்காழி அருகே வீட்டின் முன்பு நின்று இருந்த சப் இன்ஸ்பெக்டர் மீது 3 பெட்ரோல் குண்டு வீச்சு என்ன நடந்தது..!
தற்போது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு என்பது முற்றிலும் நிலை குலைந்து விட்டது இங்கு அரசியல் கட்சி தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை இப்படி இருக்கும் சூழ்நிலையில் காவல்துறை மீது தொடர்ந்து 3 பெட்ரோல் குண்டு வீச்சு நடைபெற்ற சம்பவம் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திமுக எப்பொழுது ஆட்சிக்கு வருகிறதோ அப்பொழுதெல்லாம் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு நடைபெறுகிறது போதைப் பொருள் கடத்தல் தொடர்கிறது, கொலைகள், கஞ்சா, இப்படி தமிழக முழுவதிலும் பல்வேறு குற்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்ற நடைபெற்ற வருகிறது இதனை பற்றி திமுக அமைச்சர்களிடம் கேள்வி எழுப்பினால்.
முன் விரோதம் காரணமாக கொலைகள் நடைபெறுவதை தடுக்க முடியாது அதற்கு அரசாங்கம் என்ன செய்ய முடியும் என்று ஆணவமாக பதில் அளிக்கிறார், சமூக வலைத்தளங்களில் திமுகவை பற்றி விமர்சனம் செய்தால் திமுகவின் ஐடிவின் உடனடியாக தலையிட்டு விமர்சனம் செய்யும் நபரை காவல்துறையில் கைது செய்ய வேண்டும் என உத்தரவிடுகிறது.
இப்படி தமிழகத்தில் கொடுங்கோள் ஆட்சி நடைபெற்று வருகிறது இப்படி இருக்கும் சூழ்நிலையில் பொதுமக்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் காவல்துறை மீது தற்போது தாக்குதல் நடைபெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சீர்காழியில் என்ன நடந்தது
சீர்காழி அருகே உள்ள திருவெண்காடு பகுதியில் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள திருவெண்காடு காவல் நிலையத்தில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் கணேசன் இன்று இரவு சுமார் வீட்டில் முன்பு நின்று கொண்டிருந்தார் அப்போது திடீரென மர்ம நபர் ஒருவர் 3 பெட்ரோல் குண்டுகளை தொடர்ந்து வீசி உள்ளார்.
இதில் காவல் உதவி ஆய்வாளர் கணேசன் கால்கள் மற்றும் கைகளில் தீக்காயம் ஏற்பட்டுள்ளது கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு மயிலாடுதுறை மாவட்டம் பொறையாரில் பெட்ரோல் குண்டு வீசி ஒரு நபர் கொல்லப்பட்டார்.
இந்த சூழ்நிலையில் தற்போது காவல்துறை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது இது தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முதல் கட்ட விசாரணையில் முன் விரோதம் காரணமாக பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளார்கள் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.
தற்போது காவல்துறைக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உருவாகிவிட்டது பொதுமக்களுக்கு எப்படி பாதுகாப்பு உருவாகும் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |