People parked their cars on the Chennai flyover
5 நாட்களுக்கு 5,000/- ரூபாய் அபராதம் கட்ட தயார் கார்களை மேம்பாலத்தில் இருந்து எடுக்க மாட்டோம் அடம் பிடிக்கும் பொதுமக்கள்..!
சென்னையில் நாளை மற்றும் நாளை மறுநாள் சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது வடகிழக்கு பருவமழைக்கு இதனால் பொதுமக்கள் வைத்திருக்கும் கார்களை சென்னை மேம்பாலங்களில் நிறுத்த தொடங்கியுள்ளார்கள்.
காவல்துறை எவ்வளவு முயன்றும் மக்களை கட்டுப்படுத்த முடியவில்லை ஒரு நாளைக்கு 1,000/- ரூபாய் அபராதம் என்றாலும் பரவாயில்லை 5 நாட்களுக்கு 5,000/- ரூபாய் என்றாலும் நாங்கள் கட்டுவி விடுகிறோம் ஆனால் கார்களை மட்டும் எடுக்க மாட்டோம்.
எங்களை வற்புறுத்த வேண்டாம் என நேரடியாகவே மக்கள் தமிழக அரசிற்கும் சென்னை காவல்துறைக்கும் தங்களுடைய மனக்குமுறலை தெரிவிக்கிறார்கள் ஏனென்றால் கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கத்தால் கார் முழுவதும் நீரில் மூழ்கி அதனை மறுபடியும் சரி செய்வதற்கு.
குறைந்தபட்சம் 50 ஆயிரம் ரூபாய் முதல் 2 லட்சம் ரூபாய் வரை செலவு செய்ய வேண்டிய சூழ்நிலை இருந்தது சில கார்களை சீர் செய்ய முடியாமல் வந்த விலைக்கு விற்பனை செய்து விட்டோம் இதனால் கடுமையான நஷ்டம் ஏற்பட்டது.
இந்த வருடம் அப்படி நடந்து விடக்கூடாது என்பதால் கார்களை மேம்பாலம் மீது நிறுத்துகிறோம் 5 நாட்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் என்றாலும் பரவாயில்லை சிறிய தொகை தான் அபராதம் கட்டி விடுகிறோம்.
ஆனால் பெரிய தொகை இதனால் சேமிக்கப்படும் என பொதுமக்கள் நேரடியாகவே தெரிவிக்கிறார்கள் தமிழக அரசும் சென்னை காவல் துறையும் என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்குகிறது மக்களை கட்டாயப்படுத்தி கார்களை எடுக்க வைத்தால்.
தேர்தல் நேரத்தில் நிச்சயம் இதனுடைய பாதிப்பு எதிரொலிக்கவும் என்பதை தமிழக அரசு உணர்ந்து விட்டது வேறு வழி இன்றி அபராத தொகையை வாங்கிக் கொள்ளவும் இரவில் இந்த கார்களுக்கு பாதுகாப்பு வழங்கவும் தமிழக அரசு மறைமுகமான தகவலை காவல்துறைக்கு வழங்கி உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.
சென்னையில் உள்ள அனைத்து மேம்பாலங்களிலும் மீது தற்போது வரிசையாக கார்கள் கிலோமீட்டர் கணக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது முடிந்தவரை மக்கள் இன்று இரவு டிபார்ட்மெண்ட் ஸ்டோர் களில் அதிகப்படியான பொருட்களை வாங்க தொடங்கினார்கள் அதிகப்படியான மக்கள் சென்னை விட்டு வெளியேறவும் முயற்சி செய்து வருகிறார்கள்.
திராவிட மாடல் அரசை நம்பவில்லை மக்களிடத்தில் நம்பிக்கை இழந்துவிட்டது திமுக..!
நாளை மழை தொடங்கினால் எத்தனை நாட்கள் மழைப்பொழிவுகள் தொடர்ச்சியாக இருக்கும் என்பதை யாராலும் கணிக்க முடியாது மேலும் மின்சார துண்டிப்பு இருக்கும் தொலைதொடர்பு சாணங்கள் துண்டிப்பு நிச்சயம் இருப்பதால்.
முடிந்தவரை சென்னை விட்டு வெளியேறுவதற்கு விருப்பம் கொண்டுள்ளார்கள் வேறு வழி இன்றி அங்கே இருக்க வேண்டிய சூழ்நிலை இருந்தால் முதலில் தங்களுடைய கார்கள் பத்திரமாக இருக்க வேண்டும் என்பதில் மக்கள் கவனமுடன் இருக்கிறார்கள்.
உணவு குடிநீர் போன்றவை தமிழகத்தில் உள்ள கட்சியினர் வழங்கி விடுவார்கள் ஆனால் கார்கள் என்றால் மிகப்பெரிய தொகை செலவு செய்ய வேண்டிய சூழ்நிலை இருக்கிறது என்று மக்கள் நேரடியாகவே தெரிவிக்கிறார்கள்.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |