விஜயின் மாநாட்டிற்கு இடம் கொடுக்க மறுக்கும் உரிமையாளர்கள் உச்சகட்ட ஆத்திரத்தில்..!Owners refuse to give venue to actor Vijay party convention

Owners refuse to give venue to actor Vijay party convention

விஜயின் மாநாட்டிற்கு இடம் கொடுக்க மறுக்கும் உரிமையாளர்கள் உச்சகட்ட ஆத்திரத்தில்..!

நடிகர் விஜய் தமிழ்நாடு வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார் கட்சி பற்றிய அறிவிப்பை கடந்த பிப்ரவரி 2ம் தேதி வெளியிட்டார் அதன் பிறகு கட்சி பற்றி கொள்கையும், கொடி, சின்னம், கட்சியின் உறுப்பினர்கள் பற்றிய தகவல்கள் வெளியிடப்படவில்லை.

தமிழ்நாட்டில் பிரம்மாண்டமான மாநாடு நடத்தி அதில் வெளியிடப்படும் என தெரிகிறது இதற்காக பல்வேறு இடங்களில் இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது குறிப்பாக மதுரை, திருச்சி, சேலம், கோவை, சென்னை, காஞ்சிபுரம், உள்ளிட்ட இடங்களை தேர்வு செய்தார்கள்.

ஆனால் இங்கு தான் தற்போது புதிய சிக்கல்கள் உருவாகி உள்ளது காலையில் மகிழ்ச்சியுடன் சம்மதம் தெரிவிக்கும் உரிமையாளர்கள் மாலையில் மாற்றி பேசுகிறார்கள்.

ஏன் மாநாட்டிற்கு இடம் கிடைக்கவில்லை

மாநாடு நடைபெறுவதால் குறைந்தது 10 லட்சம் நபர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று விஜய் உறுதியுடன் இருக்கிறார் இதற்காக பிரம்மாண்டமான இடத்தை தேர்வு செய்ய அவர் திட்டமிட்டுள்ளார் அவருடைய கட்சி நபர்கள் இடத்தை தேர்வு செய்து உரிமையாளர்களிடம் அனுமதி வாங்கி விடுகிறார்கள்.

ஆனால் சில மணி நேரங்களில் அந்த உரிமையாளர்கள் எங்களால் அனுமதி வழங்க முடியாது பிரபலமான கட்சி எங்களை மிரட்டுகிறது எங்களை விட்டு விடுங்கள் என்று தெரிவித்து விடுகிறார்கள் இது போன்ற பல்வேறு இடங்களை தேர்வு செய்வதும்.

பிறகு உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது இந்த தகவல் நேரடியாக விஜய்க்கு சென்றதாக தெரிவிக்கிறார்கள் இதை அறிந்ததும் விஜய் உச்சகட்ட ஆத்திரத்திற்கு சென்று உள்ளார் எப்படியாவது மாநாட்டை நடத்தி விட வேண்டும் 10 லட்சம் நபர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என விஜய் உறுதியுடன் இருக்கிறாராம்.

மாநாடு நடைபெறுவதால் பிரம்மாண்டமான இடம் தேவை வாகனம் நிறுத்துவதற்கு, உணவு சமைப்பதற்கு, கழிப்பிடம், இப்படி மாநாடு போக்குவரத்து சரியாக இருக்க வேண்டும், விவசாய நிலங்கள் பாதிக்கப்படக்கூடாது அப்படி பல்வேறு காரணங்கள் அடிப்படையில் மாநாட்டிற்கான இடம் தேர்வு செய்யப்பட வேண்டும்.

நில உரிமையாளர்கள் இப்பொழுது மறுப்பு தெரிவித்து வருகிறார்கள் காவல்துறை அனுமதி கொடுப்பார்களா என்பது கேள்விக்குறி அதையும் கடந்து நீதிமன்றத்திற்கு சென்றால் அங்கும் அனுமதி கிடைக்குமா என்பது விஜய்க்கு சிக்கலாக இருக்கிறது.

ஏனென்றால் இப்பொழுது இருக்கக்கூடிய அரசியல் நெருக்கடியில் திமுக நிச்சயம் இந்த மாநாட்டை நடத்த அனுமதிக்காது தற்போது சவுக்கு சங்கரும் இன்னும் இரண்டு மாதங்களில் சிறையில் இருந்து வெளியில் வந்து விடுவார் அதன் பிறகு திமுகவிற்கு தினமும் குடைச்சல் கொடுக்க ஆரம்பித்து விடுவார்.

சவுக்கு சங்கர் ஏற்கனவே வீடியோவில் தெரிவித்துள்ளார் என்னை திமுக கைது செய்து சிறையில் அடைத்தால் வெளியில் வந்து புதிதாக ஒரு அமைப்பை உருவாக்கி திமுகவுக்கு எதிராக கடுமையாக போராடுவேன் என தெரிவித்துள்ளார்.

TNPSC குரூப் 2 தேர்வுக்கான அரசியல் அறிவியல் முக்கியமான வினா விடைகள்..!

சவுக்கு சங்கர் வெளியில் வந்தால் நிச்சயம் ஒரு புதிய அமைப்பை உருவாக்கி விடுவார் அதுவும் திமுகவிற்கு கடுமையான நெருக்கடியாக இருக்கும் அதிமுகவும் ஒரு பக்கம் கடுமையான நெருக்கடியை கொடுக்கிறது இப்படி இருக்கும் சூழ்நிலையில் விஜய் 10 லட்சம் நபர்களை ஒரே இடத்தில் அழைத்து.

மாநாடு நடத்துவது என்பது திமுகவிற்கு உச்சகட்ட அழுத்தத்தை ஏற்படும் இதனை நிச்சயம் தடுத்து வேண்டும் என்ற முனைப்பில் திமுக இருக்கிறது இறுதியில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது வரும் காலம்தான் முடிவு செய்யும்.

JOIN OUR GROUPS

WHATSAPP CLICK HERE
TELEGRAM CLICK HERE

Leave a Comment