Notification issued by Collector regarding rain in Nilgiris
மிக கனமழை நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது நீலகிரிக்கு போகிறீர்களா? மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!
தென்மேற்கு பருவமழை ஒரு மாத காலதாமதமாக தொடங்கியது இருந்தாலும் கடுமையான மழைப்பொழிவு இருக்கிறது கேரளா கர்நாடகா போன்ற மாநிலங்கள் மழை வெள்ளத்தில் மிதக்கிறது குறிப்பாக கேரளா இந்த ஆண்டு அதிகமாகவே பாதிக்கப்பட்டுள்ளது என்று சொல்லலாம்.
தற்பது கேரளாவில் இருக்கக்கூடிய சில மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது இந்திய வானிலை ஆய்வு மையத்தால், கேரளாவில் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 247 நபர்கள் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளிவந்துள்ளது இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளார்கள் மேலும் அனைத்து விதமான உதவிகளும் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மீட்பு பணிக்காக கோவை வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்திலிருந்து ராணுவ வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளார்கள் நீலகிரி மாவட்டம் மலை சார்ந்த மாவட்டம் கேரளா மாநிலத்தை ஒட்டிய மாவட்டம் தற்போதும் அங்கும் கன மழை பொழிந்து வருகிறது பல்வேறு இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
வயநாடு, நீலகிரி, மாஞ்சோலை, போன்றவை மலைப்பகுதியில் அமைந்துள்ள தொடர்ச்சியான நிலப்பரப்பு இங்கும் கடுமையான நிலச்சரிவு ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நீலகிரி மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள அறிக்கை
தென்மேற்கு காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழகத்தில் கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் சில இடங்களிலும் இதர உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசான மழை பொழிவு இருக்கும்.
இதில் நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டம் மலைப்பகுதிகளில் மிக கன மழை பெய்யும் தேனி திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டம் மலைப்பகுதிகளில் அதிக கன மழை பெய்வதற்கு வாய்ப்புகள் உள்ளது, அதேபோல் நாளை மறுநாள் நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டம் மலைப்பகுதிகளில் ஒரு இடங்களில் கன மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய சூழ்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது இதனால் அங்கு தேசிய பேரிடர் மீட்பு படையினர் விரைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்ட மக்கள் மற்றும் அங்கு சுற்றுலா செல்லும் மக்களை பாதுகாப்பதற்காக ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் தீவிரமாக செய்து வருகிறது நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பாவ்யா முக்கிய அறிவிப்புகளை வழங்கியுள்ளார்.
ரேஷன் கார்டு பெறுவதற்கு விண்ணப்பம் செய்கிறீர்களா தமிழக அரசு வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி..!
அதன்படி அடுத்த மூன்று நாட்கள் நீலகிரி மாவட்டத்தில் சில இடங்களில் அதிக மழைப்பொழிவு ஏற்படும் இதனால் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது சுற்றுலா பயணிகள் சுற்றுலாவுக்கு வர வேண்டாம்.
பொதுமக்களும் தாழ்வான பகுதிகளில் மற்றும் நிலச்சரிவு ஏற்படுவதற்கு வாய்ப்புள்ள பகுதிகளில் இருக்க வேண்டாம் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |