ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்த நபர்கள் தயாராக இருங்கள் அடுத்த மாதம் முதல் புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணிகள் தொடங்குகிறது..!New ration cards will be issued in Tamil Nadu from August

New ration cards will be issued in Tamil Nadu from August

ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்த நபர்கள் தயாராக இருங்கள் அடுத்த மாதம் முதல் புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணிகள் தொடங்குகிறது..!

தமிழகத்தில் ரேஷன் அட்டைக்கு விண்ணப்பம் செய்தவர்களின் எண்ணிக்கை 2.8 லட்சமாக இருக்கிறது நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் தமிழகத்தில் விக்கிரவாண்டி போன்ற சட்டமன்றத்திற்கான இடைத்தேல் காரணமாக கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து புதிய ரேஷன் கார்டுகள் விண்ணப்பம் செய்தவர்களுக்கு வழங்கவில்லை.

இது எப்பொழுது வழங்கப்படும் என்று தொடர்ந்து விண்ணப்பம் செய்த நபர்கள் அரசை வலியுறுத்தி வந்தார்கள் தற்போது தமிழக அரசு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது விண்ணப்பம் செய்துள்ள அனைத்து நபர்களுக்கும்.

பரிசீலனை செய்து ஆவணங்கள் சரியாக இருந்தால் அடுத்த மாதம் முதல் படிப்படியாக புதிய ரேஷன் அட்டை வழங்கும் பணி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரேஷன் கடையில் புதிதாக வழங்கப்படும் பொருள்

தமிழக ரேஷன் கடையில் பருப்பு, அரிசி, மண்ணெண்ணெய், கோதுமை, உப்பு, டீ தூள், பாமாயில், சர்க்கரை, போன்ற அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகிறது இந்தியாவில் தமிழக ரேஷன் கடையில் மட்டுமே இது போன்ற அனைத்து வகையான பொருட்கள் வழங்கப்படுவதால் மற்ற மாநிலங்களும் இதே திட்டத்தை.

அவர்களுடைய மாநிலத்தில் செயல்படுத்தி வருகிறார்கள் கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஆளும் திமுக அரசு வெற்றி பெற்றால் ரேஷன் கடையில் தேங்காய் எண்ணெய் வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டது தற்போது அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக ரேஷன் கடை ஊழியர்கள் தெரிவித்துள்ளார்கள்.

மிக விரைவில் தேங்காய் எண்ணெய் தமிழகத்தில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து மானிய அடிப்படையில் ரேஷன் கடையில் குறைந்த விலையில் வழங்கப்படுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அறிவிக்கப்படாத தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

அனைத்து பொருட்களும் துல்லியமாக இருக்க வேண்டும்

தமிழகத்தில் தற்போது ரேஷன் கடையில் மின்னணு முறையில் எடை அளவிடும் கருவி பயன்படுத்தப்பட்டு வருகிறது இதனால் மக்களுக்கு சரியான அளவில் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

TNPSC மற்றும் தமிழக மக்கள் கடுமையான அதிர்ச்சியில் உள்ளார்கள்..!

தற்போது நுகர்வோர்களிடமிருந்து வாங்கப்படும் பொருட்கள் அனைத்தும் கட்டாயம் சரியாக இருக்க வேண்டும் என நுகர்வோர்களுக்கு தமிழக அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது நீங்கள் வழங்கும் பொருட்கள் பாக்கெட்களில் அடைத்து வழங்கப்பட வேண்டும்.

ஒரு முறை நீங்கள் சரியாக சோதனை செய்து வழங்கப்பட வேண்டும் மக்களுக்கு ரேஷன் கடையில் வழங்கப்படும் போது மின்னணு அளவில் சோதனை செய்யும் போது ஏதாவது அளவீட்டில் குறைகள் இருந்தால் நிச்சயம் சரியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.

JOIN OUR GROUPS

WHATSAPP CLICK HERE
TELEGRAM CLICK HERE

Leave a Comment