Medical Engineering Candidates can apply for TNPSC Group 2 Exam
TNPSC புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது மருத்துவம் பொறியியல் படித்தவர்கள் Group-2 தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்..!
கடந்த வியாழக்கிழமை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் இருந்து புதிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது அதில் குரூப் 2 தேர்வுக்கு மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பு முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் என அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.
TNPSC Group 2 தேர்வு வருகின்ற செப்டம்பர் மாதம் 14ஆம் தேதி தேர்வு தமிழக முழுவதிலும் நடைபெறுகிறது, தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 2327 காலி பணியிடங்களை நேரடியாக நிரப்பும் வகையில்.
TNPSC Group 2 மூலம் தேர்வு நடைபெற உள்ளது கலை அறிவியல், வணிகம் சார்ந்த, பட்டப் படிப்புகள் தகுதியானவை என குறிப்பிடப்பட்டிருந்தது ஆனால் இப்பொழுது டிஎன்பிஎஸ்சி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதாவது பொறியியல் மற்றும் மருத்துவம் உள்ளிட்ட தொழில் சார் பட்டப்படிப்பு முடித்தவர்களும் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் TNPSC ஒரு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
TNPSC Group 2 Exam Application
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கான விண்ணப்பம் கடந்த ஜூன் மாதம் 20ஆம் தேதி தொடங்கியது ஜூலை மாதம் 19ஆம் தேதி வரை இணையதளத்தில் விண்ணப்பம் செய்யலாம் இதற்கான கல்வி தகுதி, வயதுவரம்பு, தேர்வு நடைபெறும் முறை, உள்ளிட்ட அனைத்து தகவல்களும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பில் 19ஆம் தேதி வெளியிடப்பட்டது அதில் கல்வி தகுதி என்பது கலை அறிவியல், வணிகம் சார்ந்த பட்டப்படிப்புகள், தகுதியானவை என குறிப்பிடப்பட்டிருந்தது அதற்கு பிறகு சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளது.
தொழில் சார்ந்த படிப்புகளுக்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கவில்லை என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தை நோக்கி பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டுள்ளது தற்போது அதற்கு TNPSC அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
ரேஷன் கார்டில் குடும்பத் தலைவரின் பெயரை இரண்டே நிமிடத்தில் எளிமையாக மாற்றி விடலாம்..!
தொழில் சார்ந்த படிப்புகளில் பட்டப்படிப்பு முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் என ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதால் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பு முடித்து வேலை தேடும் இளைஞர்களும் அல்லது ஏற்கனவே தனியார் துறையில் இருக்கும் இளைஞர்களும்.
இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது குறிப்பாக தொழில் சார்ந்த படிப்புகளில் பட்டம் பெற்ற இளைஞர்கள் அதிகமாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் தேர்ச்சி பெறுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |