List of lakes that provide drinking water to the people of Chennai
சென்னை மக்களுக்கு குடித் தண்ணீர் எங்கிருந்து வருகிறது? எத்தனை ஏரிகள் சென்னைக்கு தண்ணீர் வழங்குகிறது..!
சென்னை இந்தியாவில் தவிர்க்க முடியாத மிக முக்கியமான நகரம் குறுகிய இடத்தில் 2 கோடி மக்கள் வசிக்கிறார்கள் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், போன்ற மாவட்டங்களில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளது.
குறிப்பாக பன்னாட்டு தொழிற்சாலைகள் இங்கு ஏராளமாக உள்ளது சென்னை மக்களுக்கு குடித் தண்ணீர் ஏரிகள் மூலம் வழங்கப்படுகிறது குறிப்பாக 5 ஏரிகளில் நீர் பாதுகாக்கப்பட்டு சுத்திகரிக்கப்பட்டு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
சமீப காலமாக இந்த ஏரிகளில் ஏற்படும் அதிகப்படியான வெள்ளப்பெருக்கு காரணமாக சென்னை நகரம் மிகவும் அதிகமாக பாதிக்கப்படுகிறது தற்போது 2024 ஆம் ஆண்டு சென்னையில் நிச்சயம் 2 புயல்கள் தாக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது.
இந்த இரண்டு புயல்களும் சென்னை,டெல்டா மாவட்டங்கள் மற்றும் வட தமிழகத்தில் உள் நுழைவதற்கு வாய்ப்புகள் அதிகம் என தெரிவிக்கிறார்கள் இதனால் இந்த ஆண்டும் சென்னை நிச்சயம் பாதிக்கப்படுமா என்றால் உறுதியாக பாதிக்கப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது.
2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கத்தால் 100க்கணக்கான மக்கள் உயிரிழந்தார்கள் அதற்கு செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி திடீரென்று எந்த ஒரு முன் அறிவிப்பும் இன்றி அதிகப்படியான தண்ணீர் திறந்து விடப்பட்டது முக்கிய காரணம்.
கடந்த 2023 ஆம் ஆண்டும் சென்னையில் உள்ள அனைத்து ஏரிகளும் நிரம்பியது ஏரிகளின் உபரி நீரை சென்னை வழியாக கடலில் வந்தடைவதற்கு மட்டுமே நீர் வழித்தடங்கள் இருக்கிறது இந்த ஏரிகளில் இருக்கும் உபரி நீரை மற்ற மாவட்டங்களில் உள்ள கிராமப்புறங்களுக்கு.
திருப்பி விடுவதற்கு போதுமான நீர் வழித்தடங்கள் இல்லை இதனால் ஒவ்வொரு வருடமும் கடுமையான மழை நேரத்தில் சென்னை நிச்சயம் பாதிக்கப்படுகிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
2024 ஆம் ஆண்டு ஏரிகளின் நிலவரம் என்ன
சென்னைக்கு 5 முக்கிய ஏரிகளில் இருந்து குடிநீர் வழங்கப்படுகிறது செம்பரம்பாக்கம், புழல், சோழவரம், பூண்டி, கண்ணன் கோட்டை, தேர்வாயன் கண்டிகை ஆகிய 5 ஏரிகளும் மிக முக்கியமானவை தற்போது வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட கூடுதலாக 16 சதவீதம் இப்பொழுது பொழிந்துள்ளது இதனால் ஏரிகளில் நீர் இருப்பு வேகமாக நிரம்பி வருகிறது.
வடக்கிழக்கு பருவமழை தீவிரமான காலம் என்றால் நவம்பர் 15 முதல் டிசம்பர் 15 வரை மிகத் தீவிரமாக இருக்கும் வடகிழக்கு பருவமழை இது போன்ற காலகட்டங்களில் இந்த ஏரிகள் முழுமையாக நிரம்பினால் நேரடியாக சென்னை வழியாகத்தான் மழை நீர் கடலை சென்று அடையும், சென்னையில் கனமழை என்றதும் தங்களை தயார்படுத்திக் கொள்ள தொடங்கி விட்டார்கள்.
சென்னையில் உள்ள மக்களின் நிலைமை என்ன?
நிச்சயம் புயல் சென்னையை தாக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது இதனால் சென்னையில் உள்ள மேம்பாலான்களின் மீது மக்கள் தங்களுடைய கார்களை நிறுத்த தொடங்கி விட்டார்கள் இதற்கு காவல்துறை 1,000/- ரூபாய் முதல் 5,000/- ரூபாய் வரை அபராதம் விதிக்கிறது.
இருந்தாலும் பரவாயில்லை வாகனம் பழுதாகினால் குறைந்தபட்சம் 50 1,000/- ரூபாய் செலவு செய்ய வேண்டிய சூழ்நிலை இருக்கிறது இதனால் ஆயிரம் ரூபாய் அல்லது 5,000/- ரூபாய் கட்டுவது எங்களுக்கு குறைந்த பணம் என்று பொதுமக்கள் நேரடியாக தங்களுடைய கருத்துக்களை தெரிவிக்கிறார்கள்.
இதனால் சென்னை காவல் துறையும் மற்றும் மாநகராட்சியும் மக்களை கட்டுப்படுத்த முடியவில்லை மக்கள் தங்களுடைய வாகனங்களை பாதுகாக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறார்கள் இதனை புரிந்து கொண்ட காவல் துறையை மற்றும் சென்னை மாநகராட்சி.
மேம்பாலங்களின் மீது மக்கள் தங்களுடைய வாகனங்கள் நிறுத்துவதை எதிர்க்கவில்லை தடுக்கவில்லை இது அரசாங்கத்திற்கு வேறு வழி இல்லை ஏனென்றால் ஒவ்வொரு வருடமும்.
மக்கள் 50 ஆயிரம் ரூபாய் முதல் 1 லட்ச ரூபாய் வரை தங்களுடைய வாகனங்களுக்கு செலவு செய்ய வேண்டிய சூழ்நிலை இருக்கிறது இதனால் பொருளாதார ரீதியாகவும் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
2024 ஆம் ஆண்டு சென்னையில் மழை நிலவரம்..!
2023 ஆம் ஆண்டு அதிகப்படியான மழைப்பொழிவு காரணமாக சென்னை கடுமையாக பாதிக்கப்பட்டது கூடுதலாக 123% மழை பொழிவு இருந்தது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது தற்போது 2024 ஆம் அக்டோபர் 19ஆம் தேதி இதுவரை வடகிழக்கு பருவமழை.
கூடுதலாக 16 சதவீதம் மழைப்பொழிவு இருக்கிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது வடகிழக்கு பருவமழை தீவிரமான நாட்கள் இனி வரும் நாட்களாக இருக்கும் என்பதால் நிச்சயம் இந்த ஆண்டும் சென்னை மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் என்பதில் மாற்று கருத்து இல்லை.
நீங்கள் சென்னையில் இருக்கக்கூடிய நபராக இருந்தால் முடிந்தவரை உங்களுடைய சொந்த கிராமத்திற்கு சென்று விடுங்கள் அங்கு நிலைமை சீரான பிறகு மீண்டும் உங்களுடைய சொந்த பணிக்கு திரும்பலாம் ஏனென்றால் மழைக்காலங்களில் சென்னையில் இருப்பது உயிருக்கு ஆபத்து.
மின்சாரம் நிச்சயம் துண்டிக்கப்படும், குடிநீர் கிடைக்காது, எரிவாயு சிலிண்டர் கிடைப்பதும் கடினம், அதைவிட சிறுநீர் கழிப்பது, மலம் கழிப்பது மிக மிக கடினம் ஏனென்றால் அந்த வழியாக மழை நீர் நேரடியாக உங்களுடைய அலுவலகம் அல்லது வீட்டிற்குள் வருகிறது.
இடி மின்னல் இருக்கும் போது இந்த 4 தவறுகளை செய்யாதீர்கள் பாதுகாப்பாக இருப்பது எப்படி..!
முடிந்தவரை நீங்கள் உங்களுடைய சொந்த ஊருக்கு செல்வது மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும் நீங்கள் மென்பொருள் நிறுவனங்களில் வேலை செய்யக்கூடிய நபராக இருந்தால்.
வீட்டில் இருந்து வேலை செய்கிறேன் என தெரிவித்து விட்டு சென்றுவிடலாம் கர்ப்பிணி பெண்கள் குழந்தைகள் நிச்சயம் வெளியேற வேண்டிய சூழ்நிலை இருக்கிறது.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |