தமிழக ரேஷன் கடையில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்கள் பட்டியல்கள்..!List of food items sold in Tamil Nadu ration shops

List of food items sold in Tamil Nadu ration shops

தமிழக ரேஷன் கடையில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்கள் பட்டியல்கள்..!

ரேஷன் கார்டு என்பது மிக முக்கியமானது இதன் அடிப்படையில் தான் உங்களுக்கு நாட்டில் உள்ள அனைத்து விதமான சலுகைகளும் இலவசங்களும் வழங்கப்படுகிறது, இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்தில் ஏற்ப ரேஷன் கடைகளில் பொருட்களின் விற்பனை என்பது மாறுபடுகிறது.

தமிழகத்தில் மொத்தம் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் இருக்கிறது அதில் 9900 கடைகள் பகுதி நேர கடைகளாக செயல்பட்டு வருகிறது மீதமுள்ள கடைகள் முழு நேர கடைகளாக இயங்கி வருகிறது.

தமிழக ரேஷன் கடையில் என்ன பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது உங்கள் குடும்பத்திற்கு தேவையான ஒரு மாதத்திற்கு அந்தப் பொருட்கள் எவ்வளவு கிடைக்கும் என்பதை பற்றி முழுமையாக இந்த கட்டுரையில் காணலாம்.

ரேஷன் கடைகளில் வழங்கப்படும் உணவுப் பொருட்களின் பட்டியல்கள்..!

அரிசி அனைத்து ரேஷன் கார்டு வகைகளுக்கும் இலவசமாக வழங்கப்படுகிறது

சர்க்கரை, பாமாயில், உப்பு, கோதுமை, பருப்பு, டீ தூள், சோப்பு, மண்ணெண்ணெய்,போன்றவைகள் மிகக் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

சர்க்கரை 1 கிலோ

பாமாயில் 1 லிட்டர்

கோதுமை 2 கிலோ முதல் 4 கிலோ வரை

உப்பு 1 பாக்கெட்

பருப்பு1 கிலோ

டீ தூள் 1 பாக்கெட்

சோப்பு 1 அல்லது 2

மண்ணெண்ணெய் சமையல் எரிவாயு பயன்படுத்தும் ரேஷன் அட்டை குடும்பங்களுக்கு வழங்கப்படாது மற்ற அட்டைகளுக்கு குறைந்தபட்சம் 1 லிட்டர்.

நீங்கள் புதிய முகவரிக்கு மாறுகிறீர்களா? உங்களுடைய ரேஷன் கார்டில் முகவரி மாற்றம் செய்வது எப்படி..!

தமிழகத்தில் மொத்தம் 5 வகையான ரேஷன் கார்டுகள் வழங்கப்படுகிறது, அந்த கார்டின் தன்மைக்கேற்ப மற்றும் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில் பொருட்கள் வழங்கப்படுகிறது.

JOIN OUR GROUPS

WHATSAPP CLICK HERE
TELEGRAM CLICK HERE

Leave a Comment