கள்ளக்குறிச்சி கள்ள சாராயம் வழக்கு சிபிஐக்கு மாற்றம்..!Kallakurichi bootleg liquor case transferred to CBI

Kallakurichi bootleg liquor case transferred to CBI

கள்ளக்குறிச்சி கள்ள சாராயம் வழக்கு சிபிஐக்கு மாற்றம்..!

ஒவ்வொரு நாளும் திராவிட மாடல அரசு நீதிமன்றத்தில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறது இன்று கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் வழக்கு சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என அதிமுக பாமக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த வழக்கறிஞர்கள் வழக்கு பதிவு செய்தார்கள் வழக்கு விசாரணையை விசாரிக்க தொடங்கிய நீதிமன்றம்.

இந்த கள்ளச்சாராய மரணத்தில் 69 நபர்கள் உயிரிழந்து உள்ளார்கள் நிச்சயம் அந்த பகுதியில் கள்ளச்சாராயம் நடமாடுவது காவல்துறைக்கு தெரியாமல் இருந்திருக்காது இது அரசின் நிர்வாக திறமையற்றதை குறிக்கிறது.

இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றுகிறோம் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது இந்த வழக்குகளை நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் பாலாஜி அடங்கிய அமர்வு விசாரித்தது அப்போது அதிமுக வழக்கறிஞர் மாநில செயலாளர் ஐ எஸ் இன்பதுரை தரப்பில்.

கடந்த 2023 ஆம் ஆண்டில் மரக்காணத்தில் இதேபோல் விசாசாராயம் குடித்து 30 நபர்கள் பலியாகினார்கள் அதன் தொடர்ச்சியாக கள்ளக்குறிச்சி தொகுதி எம்எல்ஏவும் மக்கள் காவல்துறையிடம் புகார் அளித்தார் எம்எல்ஏ சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

இருப்பினும் திராவிட மாடல் அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை தங்கு தடையின்றி சாராய விற்பனை நடந்து வருகிறது கர்ணாபுரம் பகுதியில் 500 மக்கள் வசித்து வரும் நிலையில் 300 நபர்கள் கள்ளச்சாராயத்தை அருந்தியுள்ளதாகவும்.

அண்டை மாநிலமான புதுச்சேரியில் இருந்து எத்தனால் கொண்டுவரப்பட்டுள்ளதாக விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தினார்கள்.

அதேபோல் பாமக தரப்பில் கோ பாலு ஆண்டுதோறும் இது போல் தொடர்வதால் அரிதான வழக்காக கருதி இந்த வழக்கை சிறப்பு புலனாய்வு குழு அல்லது சிபிஐய்க்கும் வழக்கை மாற்ற வேண்டும் அரசு போலீஸ் அதிகாரிகளை இடைநீக்கம் செய்துள்ளது.

இதிலிருந்து காவல்துறை கள்ளச்சாராய வியாபாரிகளுக்கு இடையில் தொடர்புள்ளது என தெளிவாக தெரிகிறது ஆனால் சுதந்திரமான அமைப்பு விசாரணை நடத்த வேண்டும் இந்த வாதங்களுக்கு பதிலளித்த தமிழக அரசு தரப்பில்.

எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்க ஆலோசனை வழங்க ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது கள்ளச்சாராய சம்பவத்தை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

காவல் கண்காணிப்பாளரும் மதுவிலக்கு பிரிவு அதிகாரிகளும் பணியிடம் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள் வழக்கு விசாரணை விசாரிக்க சிபிசிஐடி டிஎஸ்பி தலைமையில் 50 நபர்கள் அடங்கிய 16 தனி படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட 24 நபரில் 11 நபர்கள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள் புலன் விசாரணை முடிந்தது இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது சிபிஐக்கு மாற்றுவதால் எந்த பயனும் இல்லை.

உள்ளூர் அரசியல்வாதி போலீசார் உடந்தையாக இருந்துள்ளார்கள் என்பதற்காக எந்த ஆதாரங்களும் இல்லை என திராவிடம் மாடல் அரசு முன்வைத்தது அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில்.

இன்று நீதிபதி கிருஷ்ணகுமார் பாலாஜி அமர்வு இந்த வழக்கில் தீர்ப்பளித்தது அதில் சமுதாயத்தில் எந்த மாதிரியான பிரச்சனைகள் தீங்குகள் மதுவால் ஏற்படும் என்பதற்கு கள்ளக்குறிச்சி கள்ள சாராய சம்பவம் மிக முக்கியமானது.

தஞ்சை மாவட்டத்தில் அரசு பள்ளியில் ஆசிரியர் குத்திக்கொலை..!

மாநில காவல்துறையினர் கண்டும் காணாமல் இருந்துள்ளது இந்த சம்பவம் தெளிவாக குறிக்கிறது திராவிட மாடல் அரசு நிர்வாக திறமையற்றதாக இருக்கிறது அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு திரும்ப பெற்றது தவறு என குறிப்பிட்டு.

சிபிசிஐடி விசாரணை ஆவணங்கள் அனைத்தையும் சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் தவறு செய்த அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கியுள்ளது.

JOIN OUR GROUPS

WHATSAPP CLICK HERE
TELEGRAM CLICK HERE

Leave a Comment