Important orders issued by Deeds Minister to the Registrar Officer
சார்பதிவாளர் அலுவலர்களுக்கு பத்திரப்பதிவு அமைச்சர் மூர்த்தி வெளியிட்ட முக்கிய உத்தரவு..!
நிலம் வீடு அலுவலகம் போன்ற சொத்துக்களை வாங்கும் விரும்பும் நபர்கள் சட்டப்படி அந்த சொத்துக்கள் அனைத்தும் சரியாக இருக்கிறதா அந்த சொத்திற்கு யாராவது உரிமையாளர் மறைமுகமாக இருக்கிறார்களா அதில் ஏதாவது வில்லங்கம் இருக்கிறதா என்பதை கவனிக்க வேண்டும்.
இது பற்றிய அனைத்து விவரங்களையும் அறிந்து கொள்வதற்கு நீங்கள் வில்லங்க சான்றிதழை பதிவிறக்கம் செய்து வழக்கறிஞர் அல்லது கிராம நிர்வாக அலுவலர் அல்லது சார் பதிவாளர் அலுவலர்களிடம் காண்பித்து.
அதில் ஏதாவது வில்லங்கம் இருக்கிறதா என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்,நீங்கள் வாங்கும் வீடு அல்லது விவசாய நிலத்தின் உரிமையாளர் யார் என்று உறுதிப்படுத்தும் ஆவணம் தான் வில்லங்கச் சான்றிதழ்.
.இந்த வீடு அல்லது விவசாய நிலம் இதற்கு முன்பு யாரிடம் இருந்தது இதற்கு எத்தனை உரிமையாளர்கள் இருந்திருக்கிறார்கள் தற்போது அதனுடைய உரிமையாளர் யார் அதில் ஏதாவது வில்லங்கம் இருக்கிறதா என்பதை முழுமையாக பதிவு செய்யப்பட்டிருக்கும்.
கட்டாயம் நீங்கள் சரி பார்க்க வேண்டும்
இதனை நீங்கள் முழுமையாக தெரிந்து கொள்வதன் மூலம் நீங்கள் வாங்கும் வீடு அல்லது விவசாய நிலங்களில் எந்த பிரச்சனையும் இல்லை என்பதை உறுதி செய்ய முடியும் இதற்காகவே வில்லங்கச் சான்றிதழ் மிக அவசியமாக இருக்கிறது.
அசையா சொத்தின் மீது வங்கி மற்றும் நிதி சேவை நிறுவனங்களில் கடன் பெற வேண்டும் என்றால் இந்த வில்லங்கச் சான்றிதழ் மிக முக்கியமாக தேவைப்படுகிறது எனவே வில்லங்கச் சான்றிதழை எளிதாகவும் உடனே பெறவும் தமிழக அரசு பல்வேறு வசதிகளை செய்துள்ளது இணையதளத்தில் எப்பொழுது வேண்டுமானாலும் வில்லங்கச் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பத்திரப்பதிவு முடிந்த மறுநாளே வில்லங்கச் சான்றிதழ் விவரங்களை இணையதளத்தில் சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் அறிந்து கொள்ள தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது மேலும் பத்திரப்பதிவு செய்த நபரின் செல்போன் எனக்கு குறுஞ்செய்தி மூலம் ஒரு லிங்க் அனுப்பப்படும்.
அந்த லிங்கில் வில்லங்கச் சான்றிதழ் விவரங்களை எளிதாக அறிந்து கொள்ளலாம் மேலும் உங்களுடைய வில்லங்கச் சான்றிதழில் ஏதாவது பிழைகள் இருந்தால் இதனை திருத்தவும் வசதிகள் இருக்கிறது இதன் அடிப்படையில் சார் பதிவாளர் அலுவலகத்தில் இருந்து வரைவு திருத்த விவரங்கள்.
மாவட்ட பணியாளர் அலுவலகத்திற்கு செல்லும் அங்கு தான் இந்த பிழைகள் திருத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது கண்டிப்பாக சார் பதிவாளர் அலுவலர்கள் காலதாமதம் செய்யக் கூடாது என அமைச்சர் மூர்த்தி கட்டளையிட்டுள்ளார்.
தமிழ்ப் புதல்வன் 1000 திட்டம் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்குகிறது..!
நிர்ணயிக்கப்பட்ட வருவாயை அடையவும் அரசின் வருவாயே அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை சார் பதிவாளர் அலுவலர்கள் மற்றும் வருவாய் துறையினர் உடனடியாக எடுக்க வேண்டும்.
பத்திரப்பதிவுக்கு வரும் பொதுமக்களுக்கு ஆவண பதிவு முடிந்ததும் எந்த விதமான குறைபாடு இல்லாத ஆவணங்கள் பத்திரப்பதிவு நாள் அன்று திரும்ப அளிக்க வேண்டும் சார் பதிவாளர்களால் பரிசீலனை மற்றும் இதர காரணங்களுக்காக நிலுவை வைக்கப்பட்ட ஆவணங்கள்.
சீராய்வு செய்யப்பட்டதில் நிலுவை ஆவணங்களின் எண்ணிக்கை கட்டாயம் குறைக்க வேண்டும் பொது மக்களுக்கு வழங்கப்படும் வில்லங்கச் சான்றிதழ் நகல்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் உடனடியாக வழங்க வேண்டும்.
நிர்வாக மாவட்ட பதிவாளர்கள் தொடர் கண்காணிப்பு செய்து சுனக்கம் ஏற்பட்டால் விரைவாக சேவை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர் பத்திரப்பதிவு சார்பதிவாளர்களுக்கு உத்தரவு வழங்கியுள்ளார்.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |