Important in Chemistry for TNPSC Group 4 Exam 2024
TNPSC குரூப் 4 தேர்வுக்கான வேதியியல் பாடப்பகுதியில் முக்கியமான வினாக்கள்..!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் தேர்வுகளில் அதிக கட் ஆப் மதிப்பெண்கள் பெறுவதற்கு வேதியலில் இந்த பகுதி மிக முக்கியமானது தொடர்ந்து தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள்.
அதிக கட் ஆப் மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே வேலைவாய்ப்பு பெற முடியும் இந்த ஆண்டு தொடர்ச்சியான வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டு கொண்டே இருக்கிறது அடுத்த ஆண்டும் வேலை வாய்ப்பு குறித்து அறிவிப்புகள் வெளியிடப்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.
2026 ஆம் ஆண்டு தொடங்குவதற்குள் பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது, இந்த ஆண்டு குரூப் 4 தேர்வு நடந்து முடிந்து விட்டது அடுத்த ஆண்டுதான் மறுபடியும் இந்த தேர்வு குறித்து அறிவிப்புகள் வெளியிடப்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் தேர்வுக்கு விண்ணப்பம் செய்யும் நபர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கிறது அதே போன்று தேர்வு எழுதும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது நீங்கள் இந்த தேர்வில் எளிமையாக வெற்றி பெற்று விடலாம்.
ஆனால் அதிக கட்அப் மதிப்பெண்கள் பெறுவது மிக கடினம் முக்கியமாக இயற்பியல், வேதியல், கணிதம், விலங்கியல், தாவரவியல், போன்ற பகுதிகளை நீங்கள் 6ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மற்றும் கல்லூரிகளிலும் படித்து இருப்பீர்கள்.
இந்த பகுதிகளில் இருந்து தான் கேள்விகள் கேட்கப்படுகிறது மிக எளிமையாக இருக்கும் ஆனால் உங்களால் விடை அளிக்கும் போது சற்று குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கும் முக்கியமாக சமச்சீர் பாட புத்தகத்தில்.
இருந்து தான் 90% கேள்விகள் கேட்கப்படுகிறது இதற்கு நீங்கள் அந்த பாட புத்தகங்களை நன்றாக படித்தால் போதும் விடை அளித்து விடலாம் வேதியலில் தவிர்க்க முடியாத சில பகுதிகள் இருக்கிறது அதை பற்றி முழுமையாக கட்டுரையில் காணலாம்.
வேதியலில் சில முக்கியமான வினா விடைகள்
சல்பியூரிக் அமிலம்
வேதிப்பொருட்களின் அரசன் என அழைக்கப்படுகிறது
நீர் நீக்கியாக பயன்படுகிறது
சலவை சோப்புகள், வண்ணப்பூச்சுகள், உரங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படுகிறது
ஹைட்ரோ குளோரிக் அமிலம்
கழிவறை தூய்மைப்படுத்தும் பொருள்
சிட்ரிக் அமிலம்
உணவு பொருட்களை பதப்படுத்த
நுரை பொங்கும் உப்புக்கள் தயாரிக்க
நைட்ரிக் அமிலம்
அம்மோனியா நைட்ரேட் தயாரிக்க
சாயம் மருந்துகள் வண்ணப்பூச்சுகள் தயாரிக்க
ஆக்சாலிக் அமிலம்
கரை நீக்க மர பொருட்கள்
கார்பானிக் அமிலம்
காற்று அடைக்கப்பட்ட பானங்களில்
அசிடிட்டிக் அமிலம்
உணவு பொருட்கள் கெட்டுப் போகாமல் இருக்க
பென்சாயிக் அமிலம்
ஊறுகாய் போன்ற உணவு பொருட்கள் கெட்டுப் போகாமல் இருக்க
வயிற்றில் சுரக்கும் Hcl
உணவு பொருட்களின் செரிமானம்
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |