How to get New Ration Card 2024 in Tamil Nadu
20 நாளில் புதிய ரேஷன் கார்டு பெறுவது எப்படி அதற்கு தேவையான ஆவணங்கள் என்ன..!
தமிழகத்தில் தற்போது ரேஷன் கார்டுக்கு விண்ணப்பம் செய்பவர்களின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளது, திமுக அரசு கொண்டுவந்துள்ள மகளிர் கலைஞர் உரிமைத் தொகை திட்டம் செயல்படுத்தப்பட்ட பிறகு கூட்டுக் குடும்பமாக இருந்த நபர்கள் தனி குடித்தனமாக புதிய ரேஷன் கார்டு வாங்குவதற்கு அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.
ஏனென்றால் ஏழை எளிய மக்கள் என்றால் மாதம் தோறும் 1000/- ரூபாய் வழங்கப்படும் என திமுக அரசு அறிவித்துள்ளது அதற்கேற்றார் போல் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 1000/- ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.
திடீரென்று பல மடங்கு புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பம் செய்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்து விட்டது, தற்போது நிலுவையில் 2 லட்சம் ரேஷன் கார்டு விண்ணப்பம் பெறப்பட்டு அவர்களுக்கு இன்னும் வழங்காமல் இருக்கிறது.
இதற்கு காரணம் நாடாளுமன்றத் தேர்தல் தொடங்கிவிட்டது அதன்பிறகு விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வந்து விட்டதால் தமிழக அரசால் 2 லட்சம் ரேஷன் கார்டுகளை உடனடியாக மக்களுக்கு வழங்க முடியவில்லை.
புதிய ரேஷன் கார்டு பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்
புதிதாக திருமணம் நடைபெற்ற தம்பதிகள் எளிமையாக புதிய ரேஷன் கார்டு பெற்று விடலாம் அதாவது அவர்கள் பெயர் ஏற்கனவே அவர்களுடைய குடும்ப ரேஷன் கார்டில் இருக்கும் அதனை நீக்க வேண்டும் முதலில் அதற்கு திருமண பத்திரிக்கை போன்ற ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
அதன் பிறகு தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கம் மூலம் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம் அல்லது நேரடியாக தாலுக்கா அலுவலகத்திற்கு சென்று புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம்.
இதற்கு தேவையான ஆவணங்கள் என்ன?
நீங்கள் இணையதளம் அல்லது உங்களுடைய தொலைபேசியில் இருந்து புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பம் செய்யலாம் குடும்பத்தலைவர் யார் அவரின் புகைப்படம் 5MB குறைவாக வைத்துக் கொள்ள வேண்டும் அதன்பிறகு யாரெல்லாம் புதிய ரேஷன் கார்டில் சேர்கிறார்களோ.
அவர்களின் ரேஷன் கார்டு சொந்த வீடாக இருந்தால் வீட்டு வரி ரசீது, வாடகை வீட்டில் இருந்தால் வாடகை ஒப்பந்தம், போன்ற ஆவணங்கள் கட்டாயம் தேவை வாடகை ஒப்பந்தம் எங்கு பெற வேண்டும் இந்த வாடகை ஒப்பந்த பத்திரம் என்பது மக்கள் கணினி மையங்கள் அல்லது பத்திரம் எழுத அலுவலகங்களில் கிடைக்கிறது.
உங்கள் விவரங்களை கொடுத்து 20 ரூபாய் பத்திரத்தில் பிரிண்ட் செய்து கொள்ளலாம்,இதில் வீட்டு உரிமையாளரிடம் கையொப்பம் பெற்று மற்றும் சாட்சி கையெழுத்து புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம்.
சரியான ஆவணங்களை நீங்கள் கட்டாயம் கொடுக்க வேண்டும்
சமீபத்தில் ரேஷன் அட்டைக்கு விண்ணப்பிக்கும் அனைவருக்கும் 20 நாட்களுக்குள் ஸ்மார்ட் ரேஷன் கார்டு கிடைக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது முதலில் https://tnpds.gov.in/ என்கின்ற இணையதளத்தை ஓபன் செய்து கொள்ளுங்கள் அதில் மின்னணு அட்டை சேவைகள் என்பதன் கீழ் மின்னணு அட்டை விண்ணப்பிக்க என்பதை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.
அது அடுத்த பக்கத்தில் புதிதாக new page தொடங்கும் அதில் புதிய அட்டைக்கான விண்ணப்பத் என்பதை கிளிக் செய்யவும் அதன்பிறகு என்ற பாக்ஸின் கீழ் ஆங்கிலத்தில் தமிழிலும் பெயரை சரியாக பதிவிட வேண்டும்.
இங்கு பெயரை பதிவிடும் போது நீங்கள் கவனமாக இருக்க வேண்டும் ஆதார் அட்டை, பான் கார்டு, வங்கி கணக்கு புத்தகம், டிரைவிங் லைசென்ஸ், பள்ளி கல்லூரிகளில் இருக்கின்ற உங்களுடைய பெயரை சரியாக பதிவிட வேண்டும் எழுத்துப்பிழை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
புகைப்படம் எப்படி பதிவேற்றம் செய்வது
அதன் பிறகு மற்ற விவரங்களை நீங்கள் சரியாக கொடுக்க வேண்டும் குறிப்பாக முகவரி, மாவட்டம், தாலுகா, கிராமம், அஞ்சல் குறியீடு, உங்களுடைய தொலைபேசி எண், இமெயில் ஐடி, என பலவற்றையும் நீங்கள் சரியாக உள்ளீடு வேண்டும் அதோடு விண்ணப்பத்தில் குடும்ப தலைவருக்கான போட்டோ என்ற இடத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
அதிகபட்சமாக 5 MBக்குள் இருக்க வேண்டும் அட்டை தேர்வு என்ற பாக்சில் என்ன அட்டை வேண்டும் என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும், அதன் பிறகு இருப்பிட சான்று என்ற இடத்தில் உங்களிடம் உள்ள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை நீங்கள் கட்டாயம் பதிவேற்ற வேண்டும் இதற்கு வீட்டு வரி ரசீது, தண்ணீர் ரசீதுபோன்றவற்றை கொடுக்கலாம்.
குழந்தைகளின் பெயர் இணைப்பு
ரேஷன் அட்டையில் தற்போது குழந்தைகளின் பெயர் இணைப்பதற்கு அவர்களுடைய பிறப்புச் சான்றிதழ் ஆதார் அட்டை இரண்டும் கட்டாயம் தேவை ஆதார் அட்டை இல்லாமல் குழந்தைகளின் பெயரை ரேஷன் அட்டையில் சேர்க்க முடியாது என தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
குறிப்பு எண் எழுதி வைத்துக் கொள்ளுங்கள்
இணையதளத்தில் அனைத்து விவரங்களும் சரியாக பதிவேற்றம் செய்யப்பட்ட பிறகு அதில் குறிப்பு எண் வரும் அதனை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள் இதனை வைத்து தான் உங்கள் ரேஷன் கார்டு எந்த கட்டத்தில் உள்ளது என்பதை பார்க்க முடியும் இதனை கொடுத்த பிறகு உங்களது ஆதார் கார்டு போட்டோ விண்ணப்பம் உள்ளிட்டவற்றை தாலுக்கா அலுவலகத்தில் TSO-வில் கொடுக்க வேண்டும்.
ரேஷன் கார்டு தொலைந்து விட்டதா இரண்டு நிமிடங்களில் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து விடலாம்..!
அப்போதுதான் விரைவில் உங்களுடைய விண்ணப்பம் பரிசீலனை செய்யப்படும் நீங்கள் விண்ணப்பித்த பிறகு புற ஆவண சரிபார்ப்பு துறை சரி பார்த்த பிறகு தாலுகா வழங்குதல் அதிகாரியின் ஒப்புதல் என பல வழிமுறைகள் இருக்கிறது.
அதன் பிறகு உங்களுக்கு புதிய ரேஷன் கார்டு கிடைக்கும் இதற்கு முன்னதாக ஒன்று முதல் மூன்று மாதங்கள் வரை தேவைப்படும் ஆனால் தற்போது 20 நாட்களில் ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கப்படுகிறது.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |