டிரைவிங் லைசென்ஸ் தொலைந்து விட்டதா அல்லது சேதமடைந்து விட்டதா எளிமையாக டூப்ளிகேட் லைசென்ஸ் பெற்றுவிட முடியும்..!How to get duplicate driving license if driving license is lost

How to get duplicate driving license if driving license is lost

டிரைவிங் லைசென்ஸ் தொலைந்து விட்டதா அல்லது சேதமடைந்து விட்டதா எளிமையாக டூப்ளிகேட் லைசென்ஸ் பெற்றுவிட முடியும்..!

நம் நாட்டில் சில வகையான ஆவணங்களை பொதுமக்கள் கட்டாயம் எப்பொழுதும் வைத்திருக்க வேண்டும் ஆதார் அட்டை, பான் கார்டு, டிரைவிங் லைசன்ஸ், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, பள்ளி கல்லூரி சான்றிதழ்கள், பிறப்பு இறப்பு சான்றிதழ்கள், வீட்டு வரி ரசீது, வருமானச் சான்றிதழ், போன்ற முக்கிய ஆவணங்களை.

பொதுமக்கள் எப்பொழுதும் வைத்திருக்க வேண்டும் என மதிய மாநில அரசுகள் தெரிவிக்கிறது இதில் ஏதாவது ஒரு ஆவணம் தொலைந்து விட்டால் எப்படி பெறுவது என்பது பற்றி மக்களுக்கு முழுமையாக இன்னும் தெரியவில்லை.

டிரைவிங் லைசன்ஸ் தொலைந்து விட்டால் எப்படி பெறுவது, அதற்கு எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும், எத்தனை நாட்களில் மீண்டும் டூப்ளிகேட் டிரைவிங் லைசன்ஸ் கிடைக்கும் என்பதை பற்றி முழுமையாக இந்த கட்டுரையில் காணலாம்.

டிரைவிங் லைசென்ஸ் தொலைந்து விட்டால் என்ன செய்ய வேண்டும்

உங்களுடைய டிரைவிங் லைசன்ஸ் தொலைந்து விட்டால் நீங்கள் இணையதளம் மூலம் எளிமையாக மீண்டும் பெற்றுக்கொள்ள முடியும் அதற்கான வழிகளை மத்திய மாநில அரசுகள் ஏற்படுத்தி உள்ளது நீங்கள் (R.T.O) OFFICE அலுவலகங்களில் இணையதளம் மூலம் ஓட்டுநர் உரிமத்தை மறுபடியும் பெற்றுக்கொள்ளலாம்.

ஒரிஜினல் டிரைவிங் லைசன்ஸ் தொலைத்த நபர்கள் அல்லது சேதமடைந்த நபர்கள் அல்லது காலாவதியான லைசென்ஸ் போன்றவற்றிற்கு மீண்டும் டூப்ளிகேட் லைசென்ஸ் (R.T.O) OFFICE மூலம் எளிமையாக பெற்றுக் கொள்ளலாம்.

டூப்ளிகேட் லைசென்ஸ் பெறுவதற்கு இணையதளம் மூலம்

டூப்ளிகேட் லைசென்ஸ் பெறுவதற்கு நீங்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது உங்கள் பகுதியில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம் இணையதளம் மூலம் எப்படி விண்ணப்பிக்கலாம் என்பதை பற்றி தற்போது முழுமையாக காணலாம்.

முதலில் நீங்கள் https://parivahan.gov.in/parivahan/ என்ற மத்திய மாநில அரசின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும்.

Drivers/Learners License அதில் என்ற விருப்பத்தை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும் நீங்கள் புதிய பக்கத்திற்கு திருப்பி விடப்படுவீர்கள் புதிய பக்கத்தில் நீங்கள் வசிக்கும் மாநிலத்தை முதலில் தேர்வு செய்ய வேண்டும்.

தற்போது காண்பிக்கப்படும் புதிய பக்கத்தில் (Apply For Duplicate Licence) என்பதை நீங்கள் கிளிக் செய்து தேர்வு செய்ய வேண்டும்.

தற்போது உங்களுடைய ஆதார் அட்டை, முகவரி சான்று, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், போன்ற தேவையான ஆவணங்களை ஸ்கேன் செய்யப்பட்ட PDF COPY பதிவேற்றம் செய்ய வேண்டும் ஸ்கேன் செய்யப்பட்ட ஆவணங்கள் குறிப்பிட்ட அளவு மற்றும் formatல் இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

ரேஷன் கார்டு தொலைந்து விட்டதா இரண்டு நிமிடங்களில் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து விடலாம்..!

இப்பொழுதே கட்டணம் செலுத்த வேண்டிய முறை யுUPI or Net Banking or Internet Banking facility மூலம் கட்டணத்தை நீங்கள் செலுத்தலாம்.

இப்பொழுது வெற்றிகரமாக உங்களுடைய கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்டது அதன் பின்னர் உங்களுடைய டூப்ளிகேட் டிரைவிங் லைசன்ஸ் விண்ணப்பத்தின் நிலையை நீங்கள் தொடர்ந்து கண்காணிக்கலாம்.

நீங்கள் விண்ணப்பித்த போது உங்களுக்கு வழங்கப்பட்ட எண் அல்லது ஆதார் அட்டை எண்ணனை பயன்படுத்தி உங்கள் விண்ணப்பத்தின் நிலையை நீங்கள் சரி பார்க்கலாம்.

JOIN OUR GROUPS

WHATSAPP CLICK HERE
TELEGRAM CLICK HERE

Leave a Comment