ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி அட்டையை எவ்வாறு பெறுவது 5 லட்சம் வரை இலவச சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம்..!How to get Ayushman Bharat Pradhan Mantri card in tamil

How to get Ayushman Bharat Pradhan Mantri card in tamil

ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி அட்டையை எவ்வாறு பெறுவது 5 லட்சம் வரை இலவச சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம்..!

பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வந்துள்ள ஆயுஷ்மான் பாரத் பிரதமர் ஜான் ஆரோக்கிய யோஜனா திட்டத்தின் சிறப்பம்சங்கள் என்னவென்று உங்களுக்கு தெரியுமா..!

இந்த திட்டத்தில் இணைந்தால் 5 லட்சம் ரூபாய் வரை உங்கள் குடும்பத்திற்கு மருத்துவ காப்பீடு பெறமுடியும் இந்த திட்டத்தில் எப்படி இணைவது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

இந்தியாவில் மருத்துவ துறை என்பது மிகப்பெரிய துறை குறிப்பாக அரசு மருத்துவமனையில் ஒவ்வொரு நாளும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது அதுவும் சில கொடிய நோய்களுக்கு செலவு செய்ய முடியாமல் எத்தனையோ குடும்பங்கள் தவித்து வருகிறது.

இது போன்ற ஏழை எளிய மக்களை பாதுகாப்பதற்கு கொண்டுவரப்பட்ட திட்டம் தான் பிரதமர் ஜான் ஆரோக்கியா யோஜனா உலகில் இந்த திட்டம் மிகப்பெரியது மற்ற நாடுகளை விட இந்தியாவில் இந்த திட்டம் நன்றாக செயல்படுத்தப்படுகிறது இதன்படி ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரை இலவசமாக மருத்துவ சேவை கிடைக்கும்.

குடும்பத்தின் வரம்புகள் எவ்வளவு இருக்க வேண்டும்

குடும்பத்தின் அளவு, வயது, பாலினம், என எந்த விதமான வரம்புகளையும் இந்த திட்டத்தில் இணைக்கவில்லை ஒருவேளை கொடிய நோய்க்கு மருத்துவமனையில் தங்கி நீண்ட நாட்கள் சிகிச்சை எடுக்க வேண்டிய சூழ்நிலை இருந்தால் அந்த நோயாளிகளுக்கு சலுகைகள் கிடைக்க இந்த திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

முக்கியமாக நீரிழிவு, இருதய நோய்கள், சிறுநீரக செயலிழப்பு, கேன்சர், கல்லீரல், பிரச்சனை உள்ளிட்ட 26 நோய்களுக்கு இந்திய முழுவதிலும் 1699 மருத்துவ முறைகளுக்கு இந்த திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற்றுக் கொள்ள முடியும் கொரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளும்.

இந்த திட்டத்தில் இணைந்து கொள்ள முடியும் இந்த அட்டையை நீங்கள் வைத்திருப்பதன் மூலம் நாட்டில் பட்டியலிடப்பட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக் கொள்ள முடியும்.

நீங்கள் உங்கள் குடும்பத்திற்கு ஆயுஷ்மான் கார்டு பெற வேண்டுமானால் உங்களுடைய செல்போன் எண்ணை ஆதார் எண்ணுடன் கட்டாயம் இணைக்க வேண்டும் பிறகு ஆயுஷ்மான் பட்டியலில் உங்கள் பெயர் இருக்க வேண்டும்.

ஒருவேளை அந்த பட்டியலில் உங்களுடைய பெயர் இல்லை என்றால் உங்களுடைய ரேஷன் கார்டு அல்லது தொழிலாளர் அடையாள அட்டை கொண்டு உங்களுடைய பெயரை அந்த பட்டியலில் இணைத்துக் கொள்ளலாம்.

ஒரு வருடத்திற்கு ஒரு லட்சத்திற்கு குறைவான வருமானம் உள்ள குடும்பங்கள் மற்றும் பிற அரசின் நல திட்டங்களை பயன்படுத்துாமல் இருக்கும் நபர்கள் இந்த ஆயுஷ்மான் பாரத் அட்டைக்கு 2024 தகுதி உடையவர்கள்.

இந்த திட்டத்திற்கு எப்படி விண்ணப்பம் செய்வது

நீங்கள் ஒரு வருடத்திற்கு ஒரு லட்சத்திற்கும் குறைவான வருமானங்களில் அல்லது அரசின் பிற நலத்திட்டங்களை பயன்படுத்தாமல் இருக்கும் நபராக இருந்தால் இந்த திட்டத்தில் இணைந்து கொள்ளலாம்.

முதலில் https://nha.gov.in/என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்குச் செல்ல வேண்டும் அங்கு உங்களுடைய செல்போன் என்னை பதிவிட்டு verify சோதனை என்ற தேர்வை நீங்கள் கிளிக் செய்ய வேண்டும் இப்பொழுது உங்களுடைய செல்போன் எண்ணுக்கு (OTP) எண்ணை அதனை கேப்சாக் குறித்துடன் நிரப்பி Log in என்பதை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும்.

இப்பொழுது புதிய பயனாளர்களின் போர்டல் ஒன்று புதிதாக தோன்றும் அதில் திட்டத்தின் பெயர் (PMJAY) மாநிலம் துணை (PMJAY) திட்டம் உங்களுடைய மாவட்டம், ஆதார் மூலம் தேடி, உங்கள் ஆதார் எண்ணை உள்ளிட்டவைகளை தேடல் பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.

இப்பொழுது திரையில் உங்களுடைய ஆயுஷ்மான் அட்டை பட்டியல் தோன்றும் அதில் உங்கள் பெயர் அல்லது குடும்பத்தில் உள்ள நபர்களின் பெயரையும் நீங்கள் சரிபார்த்துக் கொள்ளலாம்.

அதன் பிறகு ஆயுஸ்மான் அட்டையை உங்கள் குடும்ப உறுப்பினர் யாருடைய பெயரில் உருவாக்க விரும்புகிறீர்கள் அவருக்கு அடுத்துள்ள (Action) என்ற தேர்வை கிளிக் செய்ய வேண்டும்.

உங்கள் பெயரில் ஆயுஷ்மான் அட்டை பெற விரும்பினால் நீங்கள் கட்டாயம் ஆதார் எண்ணுடன் உங்களுடைய தொலைபேசி எண்ணை இணைத்திருக்க வேண்டும் இப்பொழுது ஆதார் (OTP) தேர்ந்தெடுத்து E-KYC முடிக்க வேண்டும்.

இப்பொழுது திரையில் ஒரு மதிப்பெண் தோன்றும் அதில் 80 சதவிகிதத்தை விட அதிகமாக இருந்தால் உங்கள் ஆயுஸ்மான் ஆதார் அட்டை தானாகவே அங்கீகரிக்கப்பட்டு விட்டது என்று அர்த்தம் எனவே உடனடியாக கேப்சர் போட்டோ ஆப்ஷனுக்கு சென்று உங்களுடைய போட்டோவை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

புகைப்படத்தை வெற்றிகரமாக பதிவேற்றம் செய்ததும் புதிய வடிவம் ஒன்று திறக்கும் அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் நீங்கள் சரியாக பூர்த்தி செய்ய வேண்டும் அதன் பிறகு சமர்ப்பி என்ற தேர்வை கிளிக் செய்ய வேண்டும்.

பிறகு இறுதியாக ஆயுஷ்மான் ஆதார் அட்டை போர்டல்ஃபுல் நுழைந்து ஆயுஷ்மான் ஆதார் அட்டை நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

JOIN OUR GROUPS

WHATSAPP CLICK HERE
TELEGRAM CLICK HERE

Leave a Comment