பாஸ்போர்ட் பெறுவது எப்படி என்னென்ன ஆவணங்கள் தேவை எங்கே விண்ணப்பம் செய்வது எத்தனை நாட்களில் பாஸ்போர்ட் கிடைக்கும்..!How to get a passport and what documents are required in tamil

How to get a passport and what documents are required in tamil

பாஸ்போர்ட் பெறுவது எப்படி என்னென்ன ஆவணங்கள் தேவை எங்கே விண்ணப்பம் செய்வது எத்தனை நாட்களில் பாஸ்போர்ட் கிடைக்கும்..!

பாஸ்போர்ட் (கடவுச்சீட்டு) மிக முக்கியமான ஆவணம் நீங்கள் ஒரு நாட்டில் இருந்து வேறு ஒரு நாட்டிற்கு செல்ல வேண்டுமென்றால் இந்த ஆவணம் இல்லாமல் செல்ல முடியாது.

நம் நாட்டில் இருந்து அரபு நாடுகளுக்கும், அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, சிங்கப்பூர், மலேசியா,ஜெர்மனி, உள்ளிட்ட பிற நாடுகளுக்கு அதிகமாக மக்கள் குடிபெயர்க்கிறார்கள் ஒவ்வொரு நபருக்கும் கட்டாயம் பாஸ்போர்ட் தேவை.

பாஸ்போர்ட் வழங்குவதில் பல்வேறு நடைமுறை மாற்றங்கள்

இதற்கு முன்பு பாஸ்போர்ட் வழங்குவதற்கு பல்வேறு நடைமுறைகள் இருந்தது இதனால் பாஸ்போர்ட் வழங்குவது காலதாமதம் ஏற்பட்டது அதாவது காகித முறையில் ஆவணங்களை சரிபார்ப்பதால் அதிக கால தாமதம் ஏற்பட்டது.

தற்போது காகிதம் இல்லாத முறையில் பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது அதாவது Passport Seva Kendra என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது இந்த இணையதளம் மூலம் உங்களுடைய ஆவணங்களை பதிவேற்றம் செய்தால் பாஸ்போர்ட் எளிமையாக பெற்று விடலாம்.

இணையதளத்தில் நீங்கள் விண்ணப்பம் செய்யும் செயல்முறையும் பாஸ்போர்ட் எடுக்க என்ன விதிமுறை மற்றும் வழிமுறைகளை இப்போது பார்ப்போம், நாட்டில் 4 விதமான பாஸ்போர்ட்கள் வழங்கப்படுகிறது.

பாஸ்போர்ட் சாதாரண குடிமக்களுக்கும் (ordinary passport) பாஸ்போர்ட்

அரசாங்க ஊழியர்களுக்கும் பாஸ்போர்ட் (official passport)

முதல்வர் பிரதமர் போன்ற உயர்மட்ட தலைவர்களுக்கும் பாஸ்போர்ட் (Diplomatic Passport)

வியாபார நிமிர்த்தமாக அடிக்கடி வெளிநாடு செல்பவர்களுக்கு (Jumbo Passport) வழங்கப்படுகிறது

பாஸ்போர்ட் வழங்குவதில் இரண்டு நடைமுறைகள் உள்ளது

ஒன்று ordinary passport  மற்றொன்று Tatkal passport வழங்கி விட்டால் 10 வருடங்களுக்கு அதனை பயன்படுத்தலாம் மீண்டும் 10 வருடங்கள் கழித்து அதில் உங்களுடைய முகவரி எதாவது மாற்றம் இருந்தால் அதை மாற்றிக் எல்லாம் அல்லது புதிய பாஸ்போர்ட் பெற்றுக் கொள்ளலாம்,இது புதுப்பிக்க 15 நாட்கள் தேவைப்படும்.

பாஸ்போர்ட் விண்ணப்பம் செய்வதற்கு தேவையான ஆவணங்கள் இருப்பிடச் சான்றிதழ் ஏதாவது இரண்டு

ரேஷன் கார்டு

பான் கார்டு

வாக்காளர் அடையாள அட்டை

டிரைவிங் லைசென்ஸ்

வங்கி கணக்கு புத்தகம் கடந்த வருடமாக வங்கியில் பணம் எடுத்தல் போன்றவற்றை பதிவு செய்திருக்க வேண்டும் (Bank Statement)

தொலைபேசி ரசீது

எரிவாயு இணைப்பதற்கான ரசீது

பிறப்புச் சான்றிதழ் ஏதாவது ஒன்று

விண்ணப்பதாரர் 26.01.1989 அன்றைக்கு பிறந்த அல்லது அதற்குப் பிறகு பிறந்தவராக இருந்தால் மட்டும் நகராட்சி ஆணையரால் அல்லது பிறப்பு/இறப்பு பதிவாளர் அலுவலகத்தில் கொடுக்கும் பிறப்பு/இறப்பு சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்படும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பள்ளி கல்வி சான்றிதழ்

உங்களுடைய ஆதார் அட்டையில் கண்டிப்பாக இதை செய்ய வேண்டும் காலக்கெடுவை நீட்டித்த மத்திய அரசு..!

பாஸ்போர்ட் வாங்குவதற்கு எவ்வளவு கட்டணம்

புதிய பாஸ்போர்ட் மற்றும் பாஸ்போர்ட் புதுப்பிக்க 1500 ரூபாய் சாதாரண முறை

காணாமல் போனால் அல்லது சேதம் அடைந்தால் ரூபாய் 1500 (பாஸ்போர்ட் காலாவதியாகி இருந்தால்) If the passport is expired

காணாமல் போனால் அல்லது சேதம் அடைந்தால் 3000 காலாவதியாகவில்லை எனில் (If not expired)

60 பக்கங்கள் வேண்டுமெனில் 500 ரூபாய்

தட்கல் முறையில் 2000 சேர்த்து வழங்க வேண்டும்

JOIN OUR GROUPS

WHATSAPP CLICK HERE
TELEGRAM CLICK HERE

Leave a Comment