ரேஷன் கார்டு தொலைந்து விட்டதா இரண்டு நிமிடங்களில் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து விடலாம்..!How to get a new Ration Card if lost in Tamil Nadu

How to get a new Ration Card if lost in Tamil Nadu

ரேஷன் கார்டு தொலைந்து விட்டதா இரண்டு நிமிடங்களில் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து விடலாம்..!

தமிழகத்தில் ரேஷன் கார்டு என்பது மிக முக்கியமானது இந்த ரேஷன் கார்டை வைத்து தான் அரசாங்கம் உங்களுக்கு வழங்கக்கூடிய அனைத்து விதமான உதவிகளும் கிடைக்கும் குறிப்பாக திமுக அரசு வழங்கி வரும் மகளிர் உரிமைத் தொகை பணம்.

ரேஷன் கார்டு அடிப்படையில் கிடைக்கிறது மேலும் தமிழக அரசு வழங்கும் இலவச வீட்டு மனை பட்டா, இல்லம், மத்திய அரசு வழங்கும் பிரதான் மந்திரி இல்லம், போன்ற அனைத்து வகையான திட்டங்களுக்கும் ரேஷன் கார்டு அடிப்படையாக இருக்கிறது.

தமிழகத்தில் நியாய விலை கடைகளில் வழங்கப்படும் உணவுப் பொருட்களின் விலையும் குறைவு குறிப்பாக அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது, கோதுமை, சர்க்கரை, பருப்பு, மண்ணெண்ணெய், உள்ளிட்ட பொருட்கள் குறைந்த விலையில் வழங்கப்படுகிறது.

மிக முக்கியமானது திடீரென்று உங்களுடைய ரேஷன் கார்டு தொலைந்து விட்டால் நீங்கள் பதட்டப்பட தேவையில்லை மறுபடியும் அதை எளிமையாக பெற்று விட முடியும், அதற்கு தமிழக அரசு சில வழிமுறைகளை ஏற்படுத்தி உள்ளது, நீங்கள் இணையதளம் மூலம் விண்ணப்பித்து புதிய ரேஷன் கார்டை பெற்று விடலாம்.

தொலைந்து போன ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி

https://www.tnpds.gov.in/ என்ற தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு நீங்கள் செல்ல வேண்டும், அங்கு நீங்கள் ஏற்கனவே உங்கள் ரேசன் அட்டைக்கு கொடுத்த தொலைபேசி எண்ணை உள்ளீடு செய்து.

கீழே இருக்கக்கூடிய கேப்சாவை சரியாக பதிவு செய்தால் உங்களுடைய தொலைபேசி எண்ணுக்கு OTP வரும் அதை சரியாக பதிவு செய்து login செய்தால் உங்களுடைய ரேஷன் அட்டை சம்பந்தமான அனைத்தும் திரையில் தோன்றும்.

இப்பொழுது TNPDS ஸ்மார்ட் கார்டு பதிவிறக்கம் மற்றும் அச்சிடுவதற்கான பக்கம் திரையில் தோன்றும் இதில் கேட்கப்படும் அனைத்து விவரங்களையும் நீங்கள் பூர்த்தி செய்ய வேண்டும்.

ரேஷன் கார்டில் குடும்பத் தலைவரின் பெயரை இரண்டே நிமிடத்தில் எளிமையாக மாற்றி விடலாம்..!

அந்த காப்பியை PDF சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும் அல்லது பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் இந்த காப்பியை பிரிண்ட் எடுத்து உங்களுடைய ரேஷன் அட்டைக்கு உட்பட்ட பகுதிக்கு இருக்கும் உணவு வழங்கல் அலுவலகத்திற்கு சென்று இந்த நகலை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

உங்களுக்கு மீண்டும் புதிய ரேஷன் கார்டு வழங்கப்படும் இதற்கு சில நாட்கள் எடுத்துக் கொள்ளப்படும் அதாவது இரண்டு முதல் மூன்று மாதங்கள் கூட எடுத்துக் கொள்ளப்படும், மேலும் இது தவிர கூடுதலாக 1800 425 5901 என்ற இலவச தொலைபேசி எண்ணை நீங்கள் தொடர்பு கொண்டு உங்களுடைய புகாரை தெரிவிக்கலாம்.

JOIN OUR GROUPS

WHATSAPP CLICK HERE
TELEGRAM CLICK HERE

Leave a Comment