How to delete name in tn ration card can be done in two minutes
ரேஷன் கார்டில் பெயரை நீக்குவது எப்படி இரண்டு நிமிடங்களில் செய்துவிடலாம்..!
உங்களுடைய ரேஷன் கார்டில் ஏதாவது திருத்தம் செய்ய வேண்டும் என்றால் வீட்டில் இருந்து நீங்களே எளிமையாக செய்து கொள்ளலாம் இதற்காக நீங்கள் அரசு அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை மக்கள் கணினி மையத்திற்கும் செல்ல வேண்டிய அவசியம் இல்லை.
குடும்ப உறுப்பினர்களின் பெயர் சேர்த்தல், நீக்குதல், குடும்ப தலைவரின் புகைப்படம் மாற்றுதல், பெயர் மாற்றுதல், ரேஷன் கார்டை ஒரு கடையிலிருந்து மற்றொரு கடைக்கு மாற்றுதல், முகவரி மாற்றுதல், இப்படி பல்வேறு திருத்தம் செய்ய வேண்டிய பணிகள் அவ்வப்போது இருக்கிறது, இதனைப் பற்றி தெரிந்து கொண்டால் எளிமையாக நீங்களே செய்து கொள்ளலாம்.
ரேஷன் கார்டு என்பது மாநில அரசால் வழங்கப்படும் மிக முக்கியமான அதிகாரப்பூர்வமான ஆவணம் மாநில அரசு மற்றும் மத்திய அரசு வழங்கும் மானியங்கள், கடன் உதவிகள் மற்றும் புதிய திட்டங்களுக்கு ரேஷன் கார்டு அடிப்படையில் மட்டுமே பயனாளர்கள் சேர்க்கிறார்கள்.
தமிழக அரசு வழங்கும் மகளிர் உரிமைத்தொகை திட்டமும் ரேஷன் கார்டு அடிப்படையில் செயல்படுத்தப்படுகிறது இவ்வளவு முக்கியமான ரேஷன் கார்டில் அவ்வப்போது திருத்தங்கள் செய்ய வேண்டிய சூழ்நிலைகள் இருக்கிறது, இதற்காக நீங்கள் எங்கேயும் போகத் தேவையில்லை நீங்களே வீட்டில் இருந்து அதனை செய்து கொள்ளலாம்.
ரேஷன் கார்டில் பெயர் நீக்குவது எப்படி
இதற்கு முதலில் நீங்கள் https://www.tnpds.gov.in/ என்கின்ற தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும் அங்கு நீங்கள் ரேஷன் கார்டில் ஏற்கனவே வழங்கிய தொலைபேசி எண் கீழே இருக்கக்கூடிய கேப்சாவை உள்ளீடு செய்தால் உங்களுடைய ரேஷன் அட்டை பக்கம் இணையதளத்தில் திறக்கும்.
அந்தப் பக்கத்திற்கு சென்று புதிய உறுப்பினர் சேர்ப்பதற்கான விருப்பத்தை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் அதன் பிறகு தான் உறுப்பினர் பெயர் நீக்குதல் அல்லது சேர்த்தல் குறித்த தகவல்களை தெரிந்து அதற்கான உண்மையான ஆவணங்களை இணையதளத்தில் பதிவேற்றினால் மட்டுமே பெயர் சேர்த்தல் நீக்குதல் போன்றவற்றை அரசு அலுவலர்கள் செய்வார்கள்.
நீங்கள் இணையதளத்தில் வெற்றிகரமாக பதிவேற்றம் செய்துவிட்டால் உங்களுக்கு ஒரு ரெஜிஸ்டர் எண் வழங்கப்படும் அதை வைத்து தான் உங்களுடைய கோரிக்கையின் நிலை என்ன என்பதை நீங்கள் மறுபடியும் தெரிந்து கொள்ள முடியும்.
TNPSC தேர்வுக்கான பொது அறிவு நதிகள் பாயும் மாநிலங்கள் பட்டியல்கள்..!
பிள்ளைகளுக்கு திருமணம் நடைபெற்று இருந்தால் அதற்கான பத்திரிக்கை பதிவேற்றம் செய்து இருக்க வேண்டும் இவை அனைத்தும் சரியாக இருந்தால் விண்ணப்பங்கள் முறையாக அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்டு ரேஷன் கார்டில் பெயர் நீக்கம் செய்யப்படும்.
பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்கவேண்டும் பொறுத்து ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை அன்று வட்டங்கள் வாரியாக மக்கள் குறைதீர்க்கும் முகம் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி ஒவ்வொரு வட்டாட்சியர் அலுவலகத்திலும் குறைதீர்க்கும் கூட்டங்களில் கலந்து கொண்டு உங்களுடைய குறைகளை ரேஷன் கார்டு பற்றி தெரிவிக்கலாம்.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |