How to change mobile number in Ration card in tamilnadu
உங்களுடைய ரேஷன் கார்டில் தொலைபேசி எண்ணை மாற்றுவது எப்படி..!
மத்திய மாநில அரசுகள் நாட்டில் உள்ள குடிமக்களுக்கு பல்வேறு விதமான அடையாள ஆவணங்களை வழங்கியுள்ளது, இந்த அடையாள ஆவணங்களில் அவ்வப்போது திருத்தம் செய்ய வேண்டிய சூழ்நிலைகள் இருக்கிறது.
குறிப்பாக தொலைபேசி எண், முகவரி, பெயர் திருத்தம், பிறந்த தேதி, உள்ளிட்ட பல்வேறு திருத்தங்கள் செய்ய வேண்டிய சூழ்நிலை இன்றைய காலகட்டங்களில் ஏற்படுகிறது இதில் ரேஷன் கார்டு மிக முக்கியமானது.
ரேஷன் கார்டை வைத்துத்தான் மத்திய மாநில அரசுகள் உங்களுடைய பொருளாதார நிலைமையை கணக்கிட்டு உங்களுக்கு மானியம் இலவசம் போன்றவற்றை வழங்கி வருகிறது, தமிழ்நாட்டில் ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும் கட்டாயம் தொலைபேசி எண் இணைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரேஷன் கார்டில் தொலைபேசி எண் இணைப்பது எப்படி..!
நீங்களாகவே அல்லது மக்கள் கணினி மையம் மூலம் அல்லது உங்களுடைய ரேஷன் கடை மூலம் உங்களுடைய ரேஷன் கார்டில் உள்ள தொலைபேசி எண்ணை மாற்ற முடியாது அல்லது புதிதாக தொலைபேசி எண்ணை சேர்க்க முடியாது.
1967 என்கின்ற ரேஷன் கார்டு தொடர்பான உதவி எண்ணுக்கு நீங்கள் அழைத்து உங்களுடைய தொலைபேசி எண் மாற்றுவது தொடர்பாக நீங்கள் தெரிவிக்கலாம்.
அதேபோல் ஒவ்வொரு தாலுக்கா அலுவலகத்திலும் தனியாக ரேஷன் கார்டு தொடர்பான உதவி மையம் செயல்பட்டு வருகிறது அங்கு நீங்கள் நேரடியாக சென்று உங்களுடைய தொலைபேசி எண்ணை மாற்றிக் கொள்ளலாம் அல்லது புதிதாக தொலைபேசி எண்ணை ரேஷன் கார்டில் இணைத்துக் கொள்ளலாம்.
அங்கு செல்வதற்கு முன் நீங்கள் உங்கள் ரேஷன் கார்டில் உள்ள குடும்ப தலைவரின் ஆதார் எண், ரேஷன் கார்டு மற்றும் Ration card Xerox இவைகளை கட்டாயம் எடுத்துச் செல்ல வேண்டும் அரசு அதிகாரியிடம் தொலைபேசி எண் மாற்றம் செய்வது தொடர்பாக நீங்கள் கேட்டறிந்தால் அல்லது புதிதாக தொலைபேசி எண் இணைப்பது தொடர்பாக நீங்கள் கேட்டு அறிந்தால்.
நீங்கள் புதிய முகவரிக்கு மாறுகிறீர்களா? உங்களுடைய ரேஷன் கார்டில் முகவரி மாற்றம் செய்வது எப்படி..!
அவர்கள் அதற்கான விண்ணப்பத்தை கொடுப்பார்கள் அதனை நீங்கள் சரியாக பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும் அதன் பிறகு உங்களுடைய தொலைபேசி எண்ணை அரசு அதிகாரிகள் ரேஷன் கார்டில் மாற்றுவார்கள் அல்லது புதிதாக தொலைபேசி எண்ணை இணைத்துவிடுவார்கள் அதற்கான குறுஞ்செய்தி உங்களுடைய தொலைபேசி எண்ணுக்கு அனுப்பப்படும்.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |