How to change address in TN ration card
நீங்கள் புதிய முகவரிக்கு மாறுகிறீர்களா? உங்களுடைய ரேஷன் கார்டில் முகவரி மாற்றம் செய்வது எப்படி..!
வேலை சம்பந்தமாக அல்லது குழந்தைகளின் கல்வி சம்பந்தமாக ஒரு மாவட்டத்தில் இருந்து வேறு ஒரு மாவட்டத்திற்கு மாறவேண்டிய சூழ்நிலை இன்றைய காலகட்டங்களில் இருப்பதால் பல குடும்பங்கள் தினமும் புலம்பெயர்கிறார்கள்.
தமிழகத்தில் நீங்கள் ஒரு மாவட்டத்தில் இருந்து வேறு ஒரு மாவட்டத்திற்கு எளிமையாக உங்கள் ரேஷன் கார்டு மாற்றிக் கொள்ளலாம் அதற்கு தமிழக அரசு இணையதள மூலம் செய்து கொள்வதற்கான வழிமுறைகளை ஏற்படுத்தி உள்ளது.
முகவரி மாற்றத்திற்கு தேவையான ஆவணங்கள்
பான் கார்டு
அசல் ரேஷன் கார்டு
விண்ணப்ப படிவம்
புகைப்படம்
இருப்பிடச் சான்றிதழ்
ஆதார் அட்டை
வாக்காளர் அடையாள அட்டை
ஓட்டுனர் உரிமம்
பாஸ்போர்ட்
ரேஷன் கார்டில் முகவரி மாற்றம் செய்வது எப்படி
நீங்கள் தமிழக அரசின் https://tnpds.gov.in/ என்கின்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு முதலில் செல்ல வேண்டும் நீங்கள் ரேஷன் கார்டில் கொடுத்துள்ள தொலைபேசி எண் அதில் கேட்கும் கேட்சாவை சரியாக பூர்த்தி செய்ய வேண்டும்.
அதன் பிறகு உங்களுடைய தொலைபேசி எண்ணுக்கு (OTP) வரும் அதை நீங்கள் டைப் செய்த பிறகு திரையில் இப்போதைய உங்களுடைய ரேஷன் அட்டை பக்கம் திறக்கும்.
தற்போது மின்னணு அட்டை தொடர்பான சேவைகள் என்ற பிரிவில் முகவரி மாற்றம் செய்ய என்ற தேர்வு இருக்கும் அதனை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.
அதன்பிறகு முகவரி மாற்றத்திற்கு தேவையான அனைத்து விபரங்களையும் நீங்கள் சரியாக பூர்த்தி செய்ய வேண்டும், மேலும் கேட்கக்கூடிய அனைத்து ஆவணங்களின் தொகுப்பையும் தேர்ந்தெடுத்து சரியாக பதிவேற்றம் செய்ய வேண்டும்.
நான் விதிமுறைகளை ஏற்றுக் கொள்கிறேன் என்பதற்கான தேர்வு பெட்டியை நீங்கள் டிக் செய்ய வேண்டும், இணையதளத்தில் விண்ணப்பிக்க சமர்ப்பி என்கின்ற பட்டனை நீங்கள் கிளிக் செய்ய வேண்டும்.
விண்ணப்பதாரர் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்திற்கான ஒப்புதலை (எண்) பெற்றுவிடுவார் தயவு செய்து அதை எதிர்கால குறிப்புக்காக நீங்கள் எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.
20 நாளில் புதிய ரேஷன் கார்டு பெறுவது எப்படி அதற்கு தேவையான ஆவணங்கள் என்ன..!
இந்த விண்ணப்பம் அந்தந்த துறையால் செயல்படுத்தப்படுகிறது, விண்ணப்பதாரர் தொலைபேசி மூலம் அதற்கான குறுஞ்செய்தியை பெற்று விடுவார்.
விண்ணப்பதாரர் பெறப்பட்ட ஒப்பகையை பயன்படுத்தி இணையதளத்தில் உங்கள் ரேஷன் கார்டு முகவரி மாற்றம் (status) நிலையை தெரிந்து கொள்ளலாம்.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |