How to Calculate TNPSC Group 4 Cutoff Marks
TNPSC Group-4 Cut off Marks எப்படி கணக்கிடப்படுகிறது..!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தற்போதைய குரூப் 4 தேர்வு நடந்த முடிந்துள்ளது, இந்த தேர்வின் முடிவு 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்வுக்கு 20 லட்சத்திற்கும் மேற்பட்ட நபர்கள் விண்ணப்பம் செய்தார்கள், 15 லட்சத்திற்கும் மேற்பட்ட நபர்கள் தேர்வு எழுதினார்கள், இதன்பிறகு தேர்வு குறித்து பல்வேறு சர்ச்சைகளும் தெரியவந்தது ஆனால் தற்போது.
தேர்வுஎழுதிய நபர்கள் எவ்வளவு கட் ஆப் மதிப்பெண் எடுத்தால் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று இணையதளத்தில் அதிகமாக தேடுகிறார்கள் ஜூன் 9ஆம் தேதி 6,244 காலிபணியிடங்களுக்கு இந்த தேர்வு நடைபெற்றது.
தேர்வு முடிவுகள் வெளியிட்ட பிறகு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குறைந்தபட்ச கட் ஆப் மதிப்பெண் எவ்வளவு என்பதை PDF வடிவில் வெளியிடும் அதன் அடிப்படையில் உங்களுடைய கட் ஆப் மதிப்பெண் எவ்வளவு இருக்கிறது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
மேலும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இந்த தேர்வில் யார் அதிக கட் ஆப் மதிப்பெண்கள் பெற்றுள்ளார்கள் என்று அவர்களுடைய பெயர்களை வரிசைப்படுத்தும் அதன் அடிப்படையில் அவர்களை ஆவணங்கள் சரிபார்க்க அழைக்கும்.
தற்போது நடந்து முடிந்த தேர்வுக்கு இன்னும் அதிகாரப்பூர்வமாக கட் ஆப் மதிப்பெண்கள் வெளியிடப்படவில்லை கட் ஆப் மதிப்பெண் குறித்து இன்னும் எந்த அதிகாரப்பூர்வமான தகவல்களும் வெளியிடப்படவில்லை.
How to Calculate Cutoff Marks
Number of Applicants: கட் ஆப் மதிப்பெண்கள் தேர்வு எழுதும் நபர்களின் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் மாறுபடும், தேர்வு எழுதுபவர்களின் மொத்த எண்ணிக்கையும் கட் ஆப் மதிப்பெண்களை தீர்மானிக்கிறது, குறைந்த எண்ணிக்கையில் தேர்வு எழுதுபவர்களின் எண்ணிக்கை இருந்தால் இங்கு கட் ஆப் மதிப்பெண்கள் குறைவாக இருக்கும்.
Vacancies: காலிப்பணியிடங்களில் எண்ணிக்கை அடிப்படையில் கட் ஆப் மதிப்பெண்கள் (Cut off marks) தீர்மானிக்கப்படுகிறது, அதிக எண்ணிக்கையிலான காலிப்பணியிடங்கள் இருந்தால் கட் ஆப் மதிப்பெண்கள் (Cut off marks) குறைவாக இருக்கும், மேலும் இது நேர் மாறாகவும் இருக்கும் குறிப்பாக காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை பொறுத்து கட் ஆப் மதிப்பெண்கள் (Cut off marks) தீர்மானிக்கப்படுகிறது.
Difficulty Level: கேட்கப்படும் வினாக்கள் அடிப்படையில் கட் ஆப் மதிப்பெண்கள் தீர்மானிக்கப்படுகிறது TNPSC Group-4 கட் ஆப் மதிப்பெண்கள் கேள்வியின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது வினாக்கள் எளிமையாகவும் அல்லது கடினமாகவும் இருந்தால் அதற்கு ஏற்ப கட் ஆப் மதிப்பெண்கள் இருக்கும்.
Candidate Performance: TNPSC Group-4 தேர்வலர்கள் (PRELIMS) தேர்வில் பெற்ற மதிப்பெண்களும் கட் ஆப் மதிப்பெண்களை தீர்மானிக்கிறது,அதிக எண்ணிக்கையில் ஆன விண்ணப்பதாரர்கள் தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்தால் கட் ஆப் மதிப்பெண்கள் அதிகரிக்கும்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப் 4 தேர்வில் Pass Mark எவ்வளவு..!
மேலே கூறப்பட்டுள்ள நான்கு காரணங்கள் அடிப்படையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கட் ஆப் மதிப்பெண்களை தீர்மானிக்கிறது, நீங்கள் 300 மார்க்கு குறைந்தது 175 மார்க் எடுத்தால் நிச்சயம் அரசு வேலை கிடைக்கும்.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |