TNPSC Group 4 தேர்வில் கிராம நிர்வாக அலுவலர் (VAO) வேலை கிடைப்பதற்கு எவ்வளவு மதிப்பெண் எடுக்க வேண்டும்..!How Much Marks Need in TNPSC Group 4 Exam to Get VAO Job

How Much Marks Need in TNPSC Group 4 Exam to Get VAO Job

TNPSC Group 4 தேர்வில் கிராம நிர்வாக அலுவலர் (VAO) வேலை கிடைப்பதற்கு எவ்வளவு மதிப்பெண் எடுக்க வேண்டும்..!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் எவ்வளவு கட் ஆப் மதிப்பெண்கள் பெற்றால் கிராம நிர்வாக அலுவலர் வேலை கிடைக்கும் என்ற கேள்வியை சமூக வலைத்தளங்களில் இளைஞர்கள் முன் வைக்கிறார்கள்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஜூன் 9ஆம் தேதி நடைபெற்றது இந்த தேர்வில் கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) பணியிடத்திற்கு 108 காலி பணியிடங்கள் இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு நடந்த முடிந்த பிறகு தேர்வு குறித்து பல்வேறு விதமான சர்ச்சைகள் வெளிவந்தது குறிப்பாக தேர்வில் சில வினாக்கள் குழப்பம் வகையில் இருந்ததாக தேர்வாளர்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்துள்ளார்கள்.

தற்போது இந்த தேர்வுக்கான விடைத்தாள் (Answer key) தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது, இதில் ஏதாவது ஆட்சேபம் தேர்வாளர்களுக்கு இருந்தால் 25ஆம் தேதிக்குள் தங்களுடைய கருத்துக்களை ஆதாரத்துடன் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்வுக்கான முடிவு 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது, எவ்வளவு கட் ஆப் மதிப்பெண் பெற்றால் தேர்ச்சி பெற முடியும் என்று தோராயமாக தனியார் பயிற்சி மையங்கள் கட் ஆப் மதிப்பெண்களை வெளியிட்டார்கள்.

ஆனால் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இன்னும் அது குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை இந்த தேர்வில் அதிக கட் ஆப் மதிப்பெண் (178 மதிப்பெண்களுக்கு மேலாக இருக்க வேண்டும் இது தோராயமான கட் ஆப் மதிப்பெண்) பெற்று முதலில் கலந்தாய்வுக்கு செல்லும் தேர்வாளர்கள் அவர்களுடைய தேர்வு.

TNPSC Group-4 தேர்வில் வெற்றி பெற இந்த பாடத்திட்டங்களை நன்றாக படித்துக் கொள்ளுங்கள்..!

கிராம நிர்வாக அலுவலர் பதவியாக இருக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எழுதக்கூடிய நபர்கள் 90 சதவீதம் கிராம நிர்வாக அலுவலர் பதவி கிடைக்க வேண்டும் என்ற இலக்கோடு தேர்வு எழுதுகிறார்கள்.

இந்த பதவி எளிமையானது சிறிது காலம் பணி அனுபவத்திற்கு பிறகு வருவாய் துறைக்கு பதவி உயர்வு கிடைக்கும் ஒரு பஞ்சாயத்தின் முழு கட்டுப்பாடும் கிராம நிர்வாக அலுவலரிடம் வந்து விடும்.

JOIN OUR GROUPS

WHATSAPP CLICK HERE
TELEGRAM CLICK HERE

Leave a Comment