How many marks you score in TNPSC Group 4 exam will get govt job
நடந்த முடிந்த TNPSC Group-4 தேர்வில் எவ்வளவு மதிப்பெண் எடுத்தால் அரசு வேலை வாய்ப்பு கிடைக்கும்..!
இந்த முறை நடைபெற்ற குரூப் 4 தேர்வில் எத்தனை மதிப்பெண்களுக்கு மேல் எடுப்பவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் வெளி வருகிறது.
தமிழ்நாடு அரசின் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசு பணி தேர்வாணையம் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது தற்போது இந்த ஆண்டு கடந்த ஜூன் 9ம் தேதி குரூப் 4 தேர்வு தமிழகம் முழுவதும் 7247 தேர்வு மையங்களில் நடந்து முடிந்தது.
மொத்தம் 6244 காலி பணியிடங்களுக்கு 20 லட்சத்திற்கு அதிகமான இளைஞர்கள் விண்ணப்பம் செய்தார்கள் அதில் 15.8 லட்சம் நபர்கள் மட்டுமே தேர்வு எழுதி உள்ளார்கள்.
கட்டாயம் தமிழ் தாளில் தகுதி பெற வேண்டும்
இந்தத் தேர்வில் பங்கேற்ற இளைஞர்கள் பகுதி-1ல் கட்டாய தமிழ் தகுதி தேர்வு மற்றும் மதிப்பு தேர்வில் கேட்கப்பட்ட அனைத்து வினாக்களும் எளிமையாக இருந்ததாகவும் பகுதி 2-ல் கேட்கப்பட்ட பொது அறிவு மற்றும் திறனறிவினாக்கள் சற்று குழப்பம் வகையில் இருந்ததாகவும் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட்டுள்ளார்கள்.
இந்த வருடம் நடைபெற்ற TNPSC Group-4 தேர்வில் பணிவாய்ப்பை பெற தேர்வாளர்கள் எடுக்க வேண்டிய மதிப்பெண்கள் இந்த முறை கேட்கப்பட்ட வினாத்தாள்கள் விதம் குறித்து தேர்வாளர்களின் சந்தேகங்களுக்கு.
சமூக வலைத்தளங்களில் பல்வேறு நபர்கள் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள் இந்த வருடம் கேட்கப்பட்ட வினாக்களில் சில வினாக்கள் தேர்வாளர்களை குழப்பம் வகையில் இருந்ததாகவும்.
பொது தமிழ் மட்டுமில்லாத சிறப்பு தமிழில் இருந்தும் கேள்விகள் அதிகமாக கேட்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்கள் மேலும் இந்த ஆண்டு புதிதாக (invalidity mark) முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
முந்தைய தேர்வில் கணிதத்தில் 25 கேள்விகள் கேட்கப்பட்ட நிலையில் இந்த முறை 29 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது அப்படி பார்க்கும் பொழுது பாடத்திட்டத்தை தாண்டி அதிகமான தகவல்களை தேர்வாளர்கள் படித்து தெரிந்து வைத்திருந்தால் மட்டுமே அனைத்து வினாக்களுக்கும் சரியாக பதில் அளிக்க முடியும் என்பது தெரிய வருகிறது.
அனைத்து வகையான போட்டித் தேர்வுகளுக்கும் அதிகமான முறை மாதிரி தேர்வுகள் எழுதி பார்க்கும் நபரால் மட்டுமே குரூப் 4 தேர்வில் வெற்றிவாய்ப்பு பெறமுடியும் தொடர்ந்து தேர்வுக்கு தயாராகும் மாணவ மாணவிகள் மாதிரி தேர்வுகளை எழுதி பழகி.
அதில் அதிக மதிப்பெண் பெறவேண்டும் அப்பொழுதுதான் தேர்வில் சிறுசிறு தடுமாற்றங்களையும் தவறுகளையும் நிவர்த்தி பண்ண முடியும் மேலும் தேர்வில் குழப்பம் அடையாமல் பதட்டம் அடையாமல் தன்னம்பிக்கையாக தேர்வுகளை எழுத முடியும்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அடிக்கடி பாடத்திட்டங்களில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது, தொடர்ந்து இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவ மாணவிகளுக்கு இது சவாலாக உள்ளது.
தொடர்ந்து பாடத்திட்டங்களை மாற்றவதால் தேர்வாளர்கள் ஏற்கனவே படித்ததை தாண்டி அதிகப்படியான பாடங்களை புதிதாக படிக்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படுகிறது பழைய பாடப்புத்தகங்கள் மற்றும் புதிய பாடத்திட்டங்களை இரண்டையும் இணைத்து மாணவர்கள் சேர்ந்து படிக்க வேண்டிய நிலைக்கு ஆளாகுவதால்.
மன அழுத்தத்திற்கு, கூடுதல் சுமையும் ஏற்படுகிறது மாணவர்களுக்கு இந்த ஆண்டு நடைபெற்ற குரூப் 4 தேர்வில் குறைந்தபட்சம் 175 மதிப்பெண்களுக்கு மேல் எடுப்பவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்புகள் உள்ளது என்று சமூக வலைத்தளங்களில் தேர்வுகளை எழுதிய மாணவர்கள் தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
தட்டச்சர் பணி போன்றவற்றிற்கு 160 மதிப்பெண்கள் எடுத்தால் போதுமானதாக இருக்கும்,தற்பொழுது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வுக்கு நகர்ப்புறங்களை விட கிராமப்புறம் மாணவ மாணவிகள் அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள்.
கிராமப்புற மாணவர்கள் அரசு வேலைவாய்ப்பை பெறுவதற்கு அதிக ஆர்வம் காட்டுகிறார்கள் இவர்களுக்கு தமிழ்நாடு அரசு இலவச பயிற்சி வகுப்புகளை அந்தந்த மாவட்டங்களில் நடத்துவதை அதிகப்படுத்த வேண்டும் என மாணவிகள் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிடுகிறார்கள்.
தற்போது நடைபெற்ற முடிந்த குரூப்-4 தேர்வு முடிவுகள் வருகின்ற 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியிடப்படும் பிப்ரவரி மாதம் சான்றிதழ்கள் சரிபார்ப்பு நடைபெறும், மார்ச் மாதம் அரசு வேலை வாய்ப்புக்கான அழைப்பிதழ் கடிதம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |