GPS முறையில் உட்பிரிவு பட்டாக்களை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது இதன் மூலம் விரைவாக பட்டா வழங்க முடியும்..!Govt of TN has decided to issue subdivision Patta through GPS system

Govt of TN has decided to issue subdivision Patta through GPS system

GPS முறையில் உட்பிரிவு பட்டாக்களை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது இதன் மூலம் விரைவாக பட்டா வழங்க முடியும்..!

தமிழகத்தில் பத்திர பதிவு முறையில் தொடர்ந்து பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது ஒவ்வொரு வாரமும் இது பற்றிய புதிய அறிவிப்புகள் வெளிவந்து கொண்டே இருக்கிறது தற்போது (GPS) முறையில் உட்பிரிவு பட்டா வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இதற்காக ராணிப்பேட்டை, விருதுநகர், பெரம்பலூர், நாமக்கல் மாவட்டங்களில் சோதனை பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது இவை வெற்றி பெற்றால் மிக விரைவில் தமிழக முழுவதிலும் (GPS) முறையில் பட்டா வழங்கும் முறை கொண்டுவரப்படும்.

இதன்மூலம் மிகத் துல்லியமாக ஒருவருடைய நிலம் எங்கு உள்ளது என்பதை கண்டுபிடிக்க முடியும் மேலும் போலியான பத்திரப்பதிவு தடுக்கப்படும் தமிழக பத்திரப்பதிவு துறை வெளியிட்டுள்ள மிக முக்கியமான செய்திகளை இங்கு காணலாம்.

தமிழகத்தில் நிலம் பத்திரப்பதிவு செய்தவுடன் பட்டா பெற்றுக் கொள்வதற்கு மக்கள் கடுமையான சிரமங்களை சில நேரங்களில் சந்தித்து வருகிறார்கள் இவைகளை எளிமையாக செய்வதற்கு தமிழக பத்திர பதிவுத்துறை பல்வேறு அதிரடியான புதிய மாற்றங்களை கொண்டு வருகிறது.

உட்பிரிவு இல்லாத நிலங்களுக்கு தானியங்கி முறையில் பட்டா பெயர் மாற்றம் செய்யும் திட்டமும் அமல்படுத்தப்பட்டுள்ளது பத்திரப்பதிவு முடிந்தவுடன் ஒரு வாரத்திற்குள்ளே சம்பந்தப்பட்ட நபருக்கு பட்டா கிடைக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு அதிரடியான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

GPS முறையில் பட்டா எப்படி வழங்கப்படுகிறது

நிலத்தின் ஒரு பகுதியை விற்பனை செய்யும் நபர் விற்பனை செய்வதற்கு முன்பு சர்வேயர் மூலம் அளந்து உட்பிரிவு செய்ய வேண்டும் பத்திரப்பதிவு முடிந்ததும் தானியங்கி முறையில் பட்ட பெயர் மாற்றம் கொள்ளவும் இது உதவும்.

இந்த திட்டத்தை முறையாக செயல்படுத்துவதில் தற்போது பல்வேறு சிக்கல்கள் இருக்கிறது கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர்கள், நிலையில் பல்வேறு தலையீடுகள் ஏற்படுவதாக தெரிவிக்கிறார்கள்.

அதனால் புதிதாக வழங்கப்படும் பட்டாவில் நிலம் குறித்து துல்லியமான விவரங்களை குறிப்பிட வருவாய் துறை தற்போது முடிவு செய்துள்ளது அதாவது சர்வே எண்ணுக்கு உட்பட்ட நிலங்களை நில அளவையார் அளந்து அதனுடைய 4 எல்லைகளையும் முறையாக அடையாளப்படுத்திய பிறகு, நில அளவை வரைபடம் தயாரிக்கப்படும்.

உங்களுக்கு 2 ஏக்கர் நிலம் இருந்தாலும் உங்களுக்கு பட்டா வழங்கப்படும் பத்திரப்பதிவு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!

அந்த உட்பிரிவின் நான்கு பக்கத்திலும் உள்ள சர்வே எண்கள் அல்லது உட்பிரி விவரங்கள் துல்லியமாக கட்டாயம் குறிப்பிடப்பட வேண்டும் இந்த நடைமுறையை முழுவதும் கணினி மையமாகும் வகையில் அந்த நிலத்தின் ஜிபிஎஸ் எனப்படும் புவிசார் தகவல்கள் தற்போது சேர்க்கப்படும்.

இது எப்படி என்றால் அட்சரேகை, தீர்க்க ரேகையில் இருந்து அந்த நிலம் எவ்வளவு தொலைவில் அமைந்துள்ளது என்ற துல்லியமான விவரங்கள் இருக்கும், எப்பொழுது அங்கு நில அளவை செய்யப்பட்டது என்பது உள்ளிட்ட அனைத்து தகவல்களும் டிஜிட்டல் மையம் முறையில் பதிவேற்றம் செய்யப்படும்.

JOIN OUR GROUPS

WHATSAPP CLICK HERE
TELEGRAM CLICK HERE

Leave a Comment