Follow these steps to crack TNPSC Exam
டிஎன்பிஎஸ்சி தேர்வில் வெற்றி பெறுவதற்கு இந்த வழிமுறைகளை பின்பற்றினால்..!
1990 முதல் 2000 ஆண்டு வரை தமிழகத்தில் அரசு பணியில் சேர்வதற்கு கல்வித் தகுதி மற்றும் தகுதி வாய்ந்த இளைஞர்கள் இல்லை ஆனால் 2000 ஆண்டுக்கு பிறகு இதனுடைய மாற்றம் என்பது தலைகீழாக மாறிவிட்டது.
அரசு பணி என்பது பாதுகாப்பான பணி, அலைச்சல் இல்லை, தொந்தரவுகள் இல்லை, வாரத்திற்கு இரண்டு நாள் விடுமுறை, ஒவ்வொரு வருடமும் சம்பள உயர்வு, பதவி உயர்வு, சரியாக 1ம் தேதி சம்பளம் வழங்கப்படும் சில அரசு பதவிகளில் ஓய்வு பெற்ற பிறகு சாகும் வரை மாதம் உதவித்தொகை என அரசு பணிக்கு பல்வேறு சலுகைகள் இருக்கிறது.
தற்போது அரசு பணியில் சேர்வதற்கு தமிழகத்தில் உள்ள மாணவர்களிடையே அதிகமான ஆர்வம் ஏற்பட்டுள்ளது ஒரு பணியிடத்திற்கு சராசரியாக 350 நபர்கள் போட்டியிடுகிறார்கள் குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நடைபெறுகிறது.
இந்த தேர்வுக்கான கல்வி தகுதி குறைந்தபட்சம் 10ம் வகுப்பு என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது ஆனால் PHD மற்றும் பட்டய படிப்பு படித்தவர்கள் முதல் பொறியியல் படித்தவர்கள் வரை இந்த தேர்வை எழுதி வெற்றி பெற்று அரசு பணியில் சேர்கிறார்கள்.
இந்த TNPSC குரூப் 4 தேர்வுக்கு ஒவ்வொரு வருடமும் குறைந்தபட்சம் 20 லட்சம் நபர்கள் விண்ணப்பம் செய்கிறார்கள், அதில் 15 லட்சத்திற்கும் அதிகமான நபர்கள் தேர்ந்து எழுதுகிறார்கள் இதனை சராசரியாக கணக்கிட்டால் ஒரு பணியிடத்திற்கு 350 நபர்கள் போட்டியிடுகிறார்கள் என தெரிய வந்துள்ளது.
இவ்வளவு போட்டியாளர்கள் நிறைந்த தேர்வில் வெற்றி பெற்று அரசு பணியில் சேர்வது என்பது மிகக் கடினம் சில வழிமுறைகளை நீங்கள் பின்பற்றினால் நிச்சயம் வெற்றி பெறலாம்.
டிஎன்பிசி தேர்வில் வெற்றி பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்
நீங்கள் இந்த தேர்வுக்கு தயாராகுகிறீர்கள் எனில் முதலில் ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் தமிழக அரசு குறிப்பிட்ட கால இடைவெளிக்கு ஒருமுறை இந்த தேர்வுக்கான பாடத்திட்டத்தில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது.
அதனை நீங்கள் சரியாக கண்காணித்து புதிய பாடத்திட்டங்களுக்கு ஏற்ப நீங்கள் தயாராக வேண்டும் 01ம் வகுப்பு முதல் 11 ஆம் வகுப்பு வரை உள்ள பாடத்திட்டங்களில் நீங்கள் சரியானவற்றை தேர்ந்தெடுத்து நன்றாக படிக்க வேண்டும்.
ஆனால் சில தேர்வு மையங்களில் 6ம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரை உள்ள பாடங்களை படித்தால் போதும் என்று தெரிவிப்பார்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வில் ஒரு தேர்வில் யானை பிளிறுகிறது என்ற ஒரு கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கான பதில் ஒன்றாம் வகுப்பில் இருக்கிறது, மூன்றாம் வகுப்பில் இருக்கிறது, ஆனால் ஆறாம் வகுப்பிலிருந்து பதினோராம் வகுப்பில் வரை இதற்கான பதிலும் கேள்வியும் இல்லை இதனை தேர்வாளர்கள் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்.
நீங்கள் ஒன்றாம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரை உள்ள பாடத்திட்டங்களில் முக்கியமாக தமிழ், கணிதம், அறிவியல், பொது அறிவு போன்றவற்றில் கவனம் செலுத்தி நன்றாக படிக்க வேண்டும்.
ஒவ்வொரு வருடமும் தேர்வில் மாற்றங்கள்
தேர்வு முடிந்த பிறகு தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள், பாடத்திட்டங்கள், தவறான கேள்விகள், சலுகை மதிப்பெண்கள், கருணை மதிப்பெண்கள், தேர்வில் குளறுபடிகள்,வினாத்தாள் கசிவு, தேர்வில் பாடத்திட்டம் மாற்றம், இப்படி பல்வேறு சர்ச்சைகள் வெளிவருகிறது.
இதனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஒவ்வொரு வருடமும் தேர்வு முடிந்த பிறகு அதில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு அடுத்து வரும் தேர்வில் பல்வேறு மாற்றங்களை செய்கிறது, இதனை தேர்வாளர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்
தனியார் மையத்திற்கு சென்று படிக்கலாமா
அரசும் பயிற்சி வகுப்புகளை ஒவ்வொரு மாவட்டத்திலும் நடத்துகிறது ஆனால் இதில் சில நிபந்தனைகள் இருக்கிறது அதாவது தகுதியான ஏழை எளிய மாணவர்கள் மட்டுமே இதில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் தனியார் மையங்களில் 50 ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்ச ரூபாய் வரை கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது.
அதற்கேற்றார் போல் அங்கு பயிற்சி வகுப்புகள் இருக்கும் அங்கேயே தங்கி 6 மாதம் முதல் ஒரு வருடம் வரை படிக்க வேண்டும் அவர்களுடைய பயிற்சி என்பது கடினமாக இருக்கும் முக்கியமாக தனியார் மையங்களில் மாதிரி தேர்வுகள் ஒவ்வொரு வாரமும் நடத்தப்படும்.
இணையதளத்தில் தேட வேண்டாம்
இந்த தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் இணையதளத்தில் பாடத்திட்டங்களை தேடவேண்டாம் கேள்விகளை தேடவேண்டாம் இணையதளத்தில் பதிவேற்றப்படும் பாடத்திட்டங்கள் கேள்விகள் இந்த வருடம் நடைபெறும் தேர்வுக்கு உகந்ததா என்பதை சரியாக யாராலும் கணிக்க முடியாது.
இணையதளத்தில் பதிவேற்றப்படும் அனைத்தும் உண்மை இல்லை என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் நீங்கள் அரசு நடத்தும் பயிற்சி மையங்களில் இணைந்து தேர்வுக்கு தயாரானால் அங்கு வழங்கப்படும் பாடத்திட்டங்கள் அனைத்தும் சரியாக இருக்கும்.
TNPSC Group-4 Answer Key எப்போது அதிகாரப்பூர்வமாக அரசு வெளியிடும் என்ற தகவல் கற்பது கசிந்துள்ளது…!
மாதிரி தேர்வுகள் சரியாக இருக்கும், ஆசிரியர்களின் குறிப்புகள் சரியாக இருக்கும், இதேபோன்று தனியார் மையங்களில் நீங்கள் பயிற்சி எடுத்தாலும் அனைத்தும் சரியாக இருக்கும் ஆனால் இணையதளத்தில் தேடி அங்கு கிடைக்கும் பாடத்திட்டம் கேள்வித்தாள் போன்றவற்றை படித்து.
நீங்கள் மாதிரி தேர்வு நீங்களே எழுதினால் நிச்சயம் அது சற்று கடினம், உங்களுக்கு சரியான வழிகாட்டி இருந்தால் மட்டுமே இந்த தேர்வில் உங்களால் வெற்றி பெற முடியும்.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |