தமிழ்நாட்டில் அனைத்து ரேஷன் கடையிலும் கண் கருவிழி பதிவு செய்யும் முறை நடைமுறைக்கு வந்துவிட்டதாக அறிவிப்பு..!Eye iris registration system came into force in TN ration shop

Eye iris registration system came into force in TN ration shop

தமிழ்நாட்டில் அனைத்து ரேஷன் கடையிலும் கண் கருவிழி பதிவு செய்யும் முறை நடைமுறைக்கு வந்துவிட்டதாக அறிவிப்பு..!

தமிழக ரேஷன் கடையில் தற்போது மக்களுக்கு வழங்கப்படும் உணவு பொருட்கள் கைரேகை பதிவின் அடிப்படையில் வழங்கப்படுகிறது இதில் தான் தற்போது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது பொதுமக்களால்.

கைரேகை பதிவு சில நேரங்களில் சரியாக வேலை செய்வதில்லை குறிப்பாக முதியவர்கள் கைரேகை பதிவு சரியாக பயன்படுத்த முடிவதில்லை கைரேகை பதிவு சரியாக சில நேரங்களில் வேலை செய்யாமல் இருப்பதால் சில நபர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குவதும் மறுக்கப்படுகிறது என்று குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது.

இதற்கு புதிய தீர்வு காண்பதற்கு தமிழக அரசு கண் கருவிழி பதிவு செய்யும் முறையை சோதனை செய்தது கடந்த சில நாட்களாக குறிப்பிட்ட ரேஷன் கடையில் தற்போது அதில் உள்ள நிறைகுறைகள் பூர்த்தி செய்யப்பட்டு.

தமிழகத்தில் தற்போது கிட்டத்தட்ட 90% ரேஷன் கடையில் கண் கருவிழி பதிவு செய்யும் முறை நடைமுறைக்கு வந்துள்ளது என்று உணவு துறை அமைச்சர் சக்கரபாணி அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

உணவு பொருட்கள் பாதுகாப்பதற்கு முக்கியமான நடவடிக்கை

இந்தியாவில் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் ரேஷன் கடையில் வழங்கப்படும் உணவு பொருட்கள் சுத்தமாகவும் சரியாகவும் இருக்க வேண்டும் என உத்தரவு வழங்கி உள்ளது முக்கியமாக கோதுமை, அரிசி, பருப்பு, சர்க்கரை, உள்ளிட்ட பொருட்களை பாக்கெட்களில்.

விற்பனை செய்யலாம் எனவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது மேலும் வழங்கப்படும் உணவுப் பொருட்கள் எடைகளில் மாற்றங்கள் இருக்கக் கூடாது எனவும் நுகர்வோர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழக ரேஷன் உணவு பொருட்கள் கடத்தப்பட்டு வெளி மாநிலங்களில் விற்பனை செய்யப்பட்டு வருவது குறித்து புகார்கள் வருகிறது அதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது மாநில எல்லைகளில் தீவிர கண்காணிப்பு செய்யவும் மறைமுகமாக உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

தமிழக ரேஷன் கடையில் வழங்கப்படும் உணவுப் பொருட்களில் பூச்சிகள், புழுக்கள், வண்டுகள், கரையான்கள்,போன்றவை இருக்கக்கூடாது சுத்தமாக இருக்க வேண்டும் பருப்பு மற்றும் பாமாயில் தட்டுப்பாடு இல்லாமல் ஒவ்வொரு மாதமும் மக்களுக்கு சரியாக வழங்க வேண்டும்.

பாமாயில் வழங்கும் நுகர்வோர்கள் அதனுடைய எடையை சரியாக கண்காணிக்க வேண்டும் மக்களுக்கு வழங்கப்படும் போது எடைகளில் ஏதாவது மாற்றங்கள் இருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் புதல்வன் என்ற திட்டம் மூலம் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்குவது..!

கைரேகை பதிவு என்பது உணவு பொருட்களை பாதுகாப்பதற்கு தமிழக அரசு அறிவித்துள்ளது கைகளில் அடிபட்டால் அல்லது முதியவர்களால் சில நேரங்களில் இளைஞர்களால் கூட கைரேகை பதிவுகளால் சரியாக உணவு பொருட்கள் வாங்க முடிவதில்லை.

தற்போது கண் கருவிழி பதிவு செய்யும் முறை கொண்டுவரப்பட்டுள்ளது இதன் மூலம் இனி பிரச்சனைகளும் உணவுப் பொருட்கள் வழங்கும் போது ஏற்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.

JOIN OUR GROUPS

WHATSAPP CLICK HERE
TELEGRAM CLICK HERE

Leave a Comment