சென்னையில் மெரினா கடற்கரையில் நிகழ்ந்த விமான சாகச நிகழ்ச்சியில் 5 நபர்கள் உயிரிழப்பு..!During the flight adventure that took place at the Marina beach

During the flight adventure that took place at the Marina beach

சென்னையில் மெரினா கடற்கரையில் நிகழ்ந்த விமான சாகச நிகழ்ச்சியில் 5 நபர்கள் உயிரிழப்பு என்பது தமிழ்நாட்டை உலுக்கி உள்ளது இதில் முக்கியமாக கார்த்திகேயன் மரணம் என்பது மிகக் கொடுமையானது.

7000 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்கள் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது ஆனால் ஒரு காவல்துறை நபர் கூட இவரை கண்டு கொள்ளவில்லை என்பது அதிர்ச்சிகரமான செய்தியாக இருக்கிறது.

நிகழ்ச்சிகளை பார்த்துவிட்டு இரண்டு சக்கர வாகனத்தில் திரும்பிய போது ஓமந்தூர் மருத்துவமனை அருகே பெருங்களத்தூரை சேர்ந்த சீனிவாசன் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக மயக்கம் அடைந்துள்ளார் சீனிவாசன் பலியாகி உள்ளார்.

இந்த நிலையில் விமானப்படையின் வான் சாகச நிகழ்ச்சியை பார்வையிட வந்தவர்களில் 230 நபர்களுக்கு நீர்ச்சத்துக் குறைபாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது 40 ஆம்புலன்ஸ்கள் மூலம் 93 நபர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்,இவர்களில் 4 நபர்கள் உயிரிழந்து உள்ளார்கள்.

கார்த்திகேயன் மரணம் என்பது கொடுமையானது

மெரினாவில் நிகழ்ச்சிகளை காண்பதற்கு குடும்பத்துடன் இவர் வந்துள்ளார் இவரது மனைவி குழந்தையை மெரினாவில் உள்ள பேருந்து நிலையத்தில் விட்டு விட்டு அங்கிருந்து இரண்டு சக்கர வாகனத்தை நிறுத்துவதற்கு பார்க்கின் பகுதிக்கு சென்றுள்ளார்.

2 மணி நேரமும் வரவில்லை அவர் பார்க்கிங் அருகே நீர்ச்சத்து குறைபாடு காரணமாக மூச்சு திணறி கண்கள் பாதி மூடிய நிலையில் வாந்தி எடுத்து மயங்கி கீழே விழுந்துள்ளார் இவரைப் பார்த்த மற்ற நபர்கள் போதையில் இருந்துள்ளார் என நினைத்துக் கொண்டு கடந்து சென்றுள்ளார்கள்.

ஒரு நபர் கூட இவரை மீட்கவில்லை காவல்துறை நபர்களும் இவரை கண்டு கொள்ளவில்லை 2 மணி நேரத்திற்கு பிறகு அவருடைய மனைவி அந்த இடத்திற்கு சென்றுள்ளார் அங்கு சென்று பார்த்தபோது அவர் மயங்கி கிடக்கும் கிடந்துள்ளார்.

ஆம்புலன்ஸுக்கு கால்செய்துள்ளார்கள் 3 மணி நேரத்திற்கு பிறகு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடிந்தது அவரை ஒரு காவல்துறை கூட காப்பாற்றவில்லை என்பது வேதனைக்குரிய செயல் சென்னை நிகழ்ச்சியின் மொத்தமே அரசின் தவறுகளால் நடந்த உயிரிழப்புகள்.

விஜய்க்கு 30 கேள்விகளை கேட்கும் காவல்துறை இதற்கு என்ன பதில் சொல்ல முடியும்?

நடிகர் விஜய் தனது அரசியலின் முதல் மாநாடு நடத்துவதற்கு காவல்துறையிடம் அனுமதி கேட்கும் போது காவல்துறை 30க்கு மேற்பட்ட நிபந்தனைகளை விதிக்கிறது ஆனால் ஆளும் திமுக அரசு நடத்தும் எந்த நிகழ்ச்சிக்கும் இதுபோன்ற நிபந்தனையில் விதிக்கப்படுவதில்லை தற்போது 13 லட்சம் நபர்கள் ஒரே இடத்தில் கூடுகிறார்கள் என்றால்.

திமுக ஆட்சியில் நீங்கள் சந்தோஷமாக இருக்கிறீர்களா நீங்கள் பலன் பெற்ற திட்டங்கள் என்ன…!

காவல்துறை எத்தகைய கட்டுப்பாட்டை விதித்திருக்க வேண்டும் என்பது எதிர்க்கட்சிகளின் கேள்வி திமுக அரசின் மெத்தனப்போக்கில் இந்த 5 நபர்கள் உயிரிழப்புக்கு என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகிறது.

JOIN OUR GROUPS

WHATSAPP CLICK HERE
TELEGRAM CLICK HERE

Leave a Comment