DMK won’t even win 15 constituencies in 2026 assembly elections
2026 சட்டமன்ற தேர்தலில் திமுக 15 தொகுதிகளில் கூட வெற்றி பெறாது..!
எத்தனை டிவி சேனல்களையும், பத்திரிகைகளையும், youtube களையும்,விலை கொடுத்து வாங்கினாலும் திமுகவின் தோல்வி 2026 உறுதி 15 தொகுதிகளில் கூட வெற்றி பெறாது.
2026 ஆம் ஆண்டு நடைபெறுகின்ற சட்டசபை தேர்தல் தமிழக வரலாற்றில் மிக முக்கியமான தேர்தல் ஏனென்றால் எதிர்க்கட்சிகள் பிரிந்து இருக்கிறது திமுகவுடன் கூட்டணியில் இருக்கும் கட்சிகள் மகிழ்ச்சியாக இல்லை.
பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறார்கள் தற்போது தமிழகம் கடனால் தத்தளிக்கிறது நிர்வாக திறமையற்ற அரசால் அரசின் இயந்திரம் அவ்வப்போது நிற்கிறது முக்கியமாக மக்களுக்கு விலைவாசி உயர்வு என்பது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்த அதிமுக மக்களுக்கு அவ்வப்போது மகிழ்ச்சியான திட்டங்களை கொண்டு வந்தது குறிப்பாக மக்களை ஊக்கப்படுத்தியது விலைவாசியை கட்டுப்பாட்டுக்குள் வைத்தது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்றியது.
முக்கியமாக தமிழகத்தின் தீவிர பிரச்சனையாக இருக்கும் ஆறுகள் பிரச்சினைக்கு குரல் கொடுத்தது சட்டம் ஒழுங்கு சீர்கேடு நன்றாக இருந்தது போதைப்பொருள் நடமாட்டம் குறைக்கப்பட்டு இருந்தது முக்கியமாக அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைத்தது.
இருந்தாலும் 2021 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் நடைபெற்றது தற்போது ரேஷன் கடையில் கூட முக்கியமான அத்தியாவசிய பொருட்கள் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை கிடைக்கிறது சில நேரங்களில் கிடைப்பதில்லை.
அறிவிக்கப்படாத மின்வெட்டு தமிழகம் முழுவதும் இருக்கிறது 10 ஆண்டுகள் ஆட்சி செய்த அதிமுக ஆட்சிக்காலத்தில் மாதத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு மாதத்திற்கு ஒருமுறை குறிப்பிட்ட பகுதிகளில் 5 மணி நேரம் அல்லது 4 மணி நேரம் மின்வெட்டு மட்டுமே இருக்கும்.
ஆனால் தமிழக முழுவதும் பராமரிப்பு பணி என்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வெட்டு இருக்கிறது கேட்டால் பராமரிப்பு பணி ஆனால் கிராமப்புறங்களில் காலை 7 மணி முதல் 10 மணி வரை மின்வெட்டு இருக்கிறது.
மதியம் வேலைகளும் மின்வெட்டு இருக்கிறது நகர்புறங்களில் பராமரிப்பு பணி என்று மின்வெட்டு இருக்கிறது ஆனால் அதிமுக ஆட்சிக் காலத்தில் மின்வெட்டு இல்லை.
திமுக அரசுக்கு நிர்வாகம் என்றால் என்ன என்று தெரியவில்லை..!
ஆளும் திமுக அரசு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நிர்வாகம் என்னவென்று தெரியவில்லை உதயநிதி ஸ்டாலினுக்கும் நிர்வாகத்தை பற்றி தெரியவில்லை இங்கு சட்டம் ஒழுங்கு சீர்கேடு உச்சகட்டத்தில் இருக்கிறது.
முக்கியமாக அனைத்து துறை மக்களும் தங்களுடைய கோரிக்கைக்கு குரல் கொடுக்கிறார்கள் ஆனால் அரசு அதனை கண்டு கொள்ளவில்லை விவசாயிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் 2026 ஆம் ஆண்டு திமுகவிற்கு வாக்களிக்கும் மன நிலையில் நாங்கள் இல்லை என்று தெரிவிக்கிறார்கள்.
ஏனென்றால் காவேரி, முல்லை, பெரியார், போன்ற பிரச்சனைகள் இருக்கிறது அதிமுக அரசு குடிமரத்து பணி என்று கொண்டு வந்து அனைத்து ஏரி,குட்டைகளை, தூர் வாரியது திமுக அரசு நான்காண்டுகள் நடைபெற்ற சூழ்நிலையில் இதுவரை கிராமப்புறங்களில்.
நிர் சேகரிப்பு திட்டம் குறித்து எந்த ஒரு நடைமுறையும் கொண்டு வரவில்லை மேலும் கிராமப்புறங்களில் அடிப்படை வசதி கூட சிரமம் ஏற்படுகிறது.
குறிப்பாக மின்விளக்கு, சிறிய குடிநீர் தொட்டி, கை பம்ப், உள்ளிட்டவை பழுதானால் அதனை மறுபடியும் சரி செய்வதற்கு வெகு நாட்கள் ஆகிறது என மக்கள் தங்களுடைய குறைகளை தெரிவிக்கிறார்கள்.
நீர் வழித்தடங்கள், நீர் பிடிப்பு பகுதிகள், ஏரிகள், குளங்கள், குட்டைகள், போன்றவைகள் தாவரங்களால் அடைப்பட்டு இருக்கிறது அதனை தூர்வார வேண்டும் என கோரிக்கை வைக்கிறார்கள் ஆனால் மேலே அதிகாரத்தில் இருப்பவர்கள்.
கீழே என்ன நடக்கிறது என்பதை கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள் இது உண்மையான தகவல் கிராமப்புறங்களில் நீர் பிடிப்பு பகுதிகளை சென்று பாருங்கள் எப்படி இருக்கிறது என்று இப்படி இருக்கும் சூழ்நிலையில்.
2026 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்திற்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் என்பதை எதிர்க்கட்சிகளுக்கு மற்றும் ஆளும் கட்சியில் கூட்டணியில் இருக்கும் திருமாவளவன் உள்ளிட்ட அனைவரும் நன்றாக உணர்ந்து கொண்டார்கள்.
தொல் திருமாவளவன் மகிழ்ச்சியாக இல்லை கூட்டணி சகித்துக் கொண்டு நாட்களை நகரத்துகிறார் 2026 ஆம் ஆண்டு இவர்களுடன் கூட்டணி வைத்தால் அதன் பிறகு விசிக என்ற கட்சியும் இருக்காது தமிழகத்திற்கு பல்வேறு கெடுதல் ஏற்படும் என்பதையும் அவர் உணர்ந்து கொண்டார்.
தற்போது திமுகவை அகற்றினால் மட்டுமே தமிழ்நாடு மீண்டும் செழிப்புடன் இருக்கும் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கும் என்பதை எல்லாரும் உணர்ந்து கொண்டார்கள்.
இந்த சிறிய வெள்ளத்திற்கு திமுகவை சென்னை மக்கள் நம்பவில்லை..!
சென்னை மக்கள் எப்படி திமுக அரசை நம்பிக்கை கொள்ளவில்லை என்பது தெளிவாக தெரிகிறது இதே போன்ற நிலைமை தான் தமிழக முழுவதிலும்.
திமுக என்ன தான் புதிய திட்டங்களை கொண்டு வருகிறோம் ஆளுநர்களுடன் சண்டை போடுகிறோம் என்றாலும் மக்கள் அதனை கடந்து செல்கிறார்கள் ஏனென்றால் மக்களை ஊக்கப்படுத்தும் மற்றும் சந்தோஷப்படுத்தும் எந்த ஒரு திட்டத்தையும் திமுக கொண்டு வரவில்லை.
ஏதோ வாழ்வாதாரம் செல்கிறது ஆனால் மக்களை அவ்வப்போது ஊக்கப்படுத்த வேண்டும் மகிழ்ச்சியாக படுத்த வேண்டும் அவர்களுக்கு புதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும் அப்போதுதான் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள் அரசை நம்புவார்கள்.
இதனை அதிமுக அரசு கடந்த 10 ஆண்டுகளாக சரியாக செய்தது விவசாயிகளுக்கு குடிமரத்து பணி கொண்டு வந்தது, பள்ளி குழந்தைகளுக்கு மடிக்கணினி திட்டம் சரியாக செய்தது இது அனைத்து தரப்பினராலும் வரவேற்கப்பட்டது.
அம்மா உணவகம் உண்மையில் மிகச்சிறந்த உணவகம் இதை அனைவரும் வரவேற்றார்கள், இலவச ஆடு மாடு கோழி வளர்க்கும் திட்டம் உண்மையில் கிராமப்புறங்களில் நல்ல வரவேற்பு பெற்றது.
பணிக்கு செல்லும் பெண்களுக்கு மானிய விலையில் இரண்டு சக்கர வாகனம் நகர்ப்புறங்களில் நல்ல வரவேற்பு பெற்றது, கொரோனா நோய் தொற்று காலங்களில் கல்லூரி மாணவர்களுக்கு இலவச ரீசார்ஜ் திட்டம்.
திருமணம் நடைபெறும் பெண்களுக்கு தாலிக்கு தங்கம் திட்டம்
குழந்தை பெறும் பெண்களுக்கு அம்மா உணவு பெட்டகம்
போன்ற பல்வேறு திட்டங்கள் உண்மையில் தமிழக மக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தது.
இந்த திட்டங்களை திராவிட மாடல அரசு தடுத்துவிட்டது குறிப்பாக பெற்றோர்கள் இப்போது அனைவரும் பயப்படுகிறார்கள் ஏனென்றால் தங்களுடைய குழந்தை எங்கு போதை பொருட்களுக்கு அடிமையாகி விடுவார்களோ என்று.
அந்த அளவிற்கு கஞ்சா பழக்கம் போதை மாத்திரை போன்ற பல்வேறு போதை பொருட்கள் தமிழகத்தில் சாதாரணமாக உலா வருகிறது நிச்சயம் திமுக 2026 ஆம் ஆண்டு கூட்டணி இருந்தாலும் தோல்வியை சந்திக்கும் என்பதை கூட்டணிக் கட்சிகளும் உணர்ந்து விட்டார்கள்.
கூட்டணிகள் இப்பொழுது திமுகவிடமிருந்து எப்படி வெளியில் வருவது என்பதை குறித்து யோசித்து வருகிறார்கள் கூட்டணி விலகினால் திமுக தனித்து நின்றால் 10 தொகுதிகளில் கூட வெற்றி பெறாது என்பதை உறுதியாக தெரிந்து கொள்ளலாம்.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |