Dal palm oil is now available in the TN ration without restriction
இனி தடையின்றி தமிழக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு பாமாயில் கிடைக்கும்..!
தமிழக ரேஷன் கடைகளில் கடந்த இரண்டு மாதங்களாக சரியாக துவரம் பருப்பு பாமாயில் மக்களுக்கு வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது இது பற்றிய செய்திகளும் தொடர்ந்து வெளி வருகிறது.
சமூக வலைத்தளங்களில் துவரம் பருப்பு, பாமாயில் வழங்கவில்லை என்பது குறித்து மீம்ஸ்கள் வெளியிடப்பட்டு வருகிறது எதிர்க்கட்சிகளும் மக்களுக்கு அரசு சுமை ஏற்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டை முன்வைத்தது.
கடந்த ஏப்ரல் மே போன்ற மாதங்களில் தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால் புதிதாக எதையும் தமிழக அரசால் செய்ய முடியவில்லை குறிப்பாக ரேஷன் கடையில் வழங்கும் உணவுப் பொருட்களுக்கு டெண்டர் விட முடியவில்லை தற்போது தேர்தல் விதிமுறைகள் விளக்கிக் கொள்ளப்பட்டது அதன் பிறகு.
தமிழகத்தில் இரண்டு கோடி பாமாயில் பாக்கெட்கள் மற்றும் தேவையான தூரம் பருப்பு ஆர்டர் செய்யப்பட்டு அனைத்து ரேஷன் கடைகளுக்கும் விநாயகம் செய்யப்பட்டுள்ளது என்று உணவு பாதுகாப்புத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு அறிவித்துள்ள டெண்டர்
தமிழக அரசு ரேஷன் கடையில் தடையின்றி பாமாயில் மற்றும் துவரம் பருப்பு மக்களுக்கு வழங்குவதற்கு அடுத்த இரண்டு மாதத்திற்கு தேவையான பாமாயில் துவரம் பருப்பு கொள்முதல் செய்ய தமிழ்நாடு நுகர்பொருள் வணிக கழகம் டெண்டர் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதில் 4 கோடி பாமாயில் பாக்கெட்டுகள் 40 ஆயிரம் மெட்ரிக் டன் துவரம் பருப்பு ஆகியவற்றை கொள்முதல் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
டெண்டருக்கான ஆவணங்களை சமர்ப்பிக்க வரும் 27ஆம் தேதி இறுதி நாள் என்று தமிழக அரசு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது, கடந்த ஜூன் மாதம் 2024 ரேஷன் கடையில் துவரம் பருப்பு பாமாயில் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது.
இந்த அடிப்படை தகவல்கள் தெரியாமல் TNPSC தேர்வு எழுத வேண்டாம்..!
எனவே ஜூன் 2024 மாதம் வழங்காமல் இருக்கும் ரேஷன் கார்டுகளுக்கு ஜூலை 2024 மாதம் துவரம் பருப்பு பாமாயில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனி ரேஷன் கடையில் அனைத்து பொருட்களும் தடையின்றி கிடைக்கும் மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் பொருட்களின் தரமும் உயர்வாக இருக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |