Cauvery River has more than 2 lakh cubic feet of Water is flowing
காவிரி கரையோரம் செல்ல வேண்டாம் தமிழக அரசு அறிவிப்பு 2 லட்சம் கன அடிக்கு மேல் நீர் வரத்து..!
கர்நாடகா மற்றும் கேரளாவில் பெய்து வரும் பருவமழை காரணமாக இரண்டு மாநிலங்களும் வெள்ளப்பெருக்கில் தவிக்கிறது கேரளாவில் வயநாடு பகுதியில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டு இதுவரை 240 நபர்கள் உயிரிழந்து உள்ளார்கள் மீட் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கேரள மாநிலத்தில் பல்வேறு இடங்களுக்கு (Red Alert) விடுக்கப்பட்டுள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம் மேலும் பருவமழை தொடர்ந்து பொழிந்து வருகிறது இதனால் நிலச்சரிவு ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயநாடு மட்டும் இல்லாமல் தமிழ்நாட்டிலும் ஊட்டி, மாஞ்சோலை, போன்ற பகுதிகளிலும் நிலச்சரிவு ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது கர்நாடகா காவிரி ஆற்றின் நீர் பிடிப்பு பகுதியில் கன மழை பொழிந்து வருகிறது.
இதுவரை காவிரி ஆற்றில் கர்நாடக அரசு 1 லட்சத்திற்கு அதிகமான கன அடி நீரை வெளியேற்றி வருகிறது தற்போது காவிரி ஆற்றில் 2.31 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது கே எஸ் ஆர் அணையிலிருந்து 1.70 லட்சம் கன அடி நீரும் கபினி அணையில் இருந்து 61 ஆயிரம் கன அடி நீளம் வெளியேற்றப்பட்டுள்ளது.
தமிழகத்தில் காவிரி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது தற்போது தமிழகத்தில் மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டிவிட்டது 120 அடி இதனால் மேட்டூர் அணையிலிருந்து இன்று மாலை முதல் 1.25 லட்சத்து ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது என தமிழக நீர்வளத்துறை தெரிவித்துள்ளது.
மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது
இதனால் 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது மேலும் இன்று மாலை முதல் 2 லட்சத்திற்கு அதிகமான கன அடி நீரை கர்நாடக அரசு திறந்து விடப்பட்டுள்ளதால் அவை இரண்டு நாட்களில் மேட்டூர் அணையை வந்து அடையும் அப்பொழுது தமிழ்நாடு நீர்வள துறையும் மேட்டூர் அணையில் இருந்து 2 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TNPSC குரூப் 4 தேர்வுக்கான அரசியல் அறிவியல் ஆளுநர்கள் பற்றிய தகவல்கள்..!
கர்நாடக அரசு திறந்து விடப்படும் நீரின் அளவை அப்படியே மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்படும் அணையின் பாதுகாப்பு காரணமாக என தெரிவிக்கப்பட்டுள்ளது இதனால் காவிரி கரையோர மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடத்திற்கு செல்லமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |