Can your children get PAN card before 18 years of age
உங்களுடைய குழந்தைகளுக்கு 18 வயதிற்கு முன்பே PAN card பெற முடியுமா அதற்கு என்ன செய்ய வேண்டும்..!
நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் கட்டாயம் சில ஆவணங்களை வைத்திருக்க வேண்டும் என்று மத்திய மாநில அரசுகள் தெரிவிக்கிறது.
பாஸ்போர்ட் விருப்பம் இருந்தால் பெற்றுக் கொள்ளலாம் வெளிநாடுகள் செல்வதற்கு கட்டாயம் தேவை பாஸ்போர்ட், வாகன ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, பள்ளி கல்லூரி சான்றிதழ்கள், பிறப்புச் சான்றிதழ், இறப்புச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், வறுமைக் கோட்டிற்கு கீழ் இருக்கும் சான்றிதழ், விவசாயி என்பதற்கான சான்றிதழ்.
இப்படி பல்வேறு விதமான ஆவணங்கள் ஒவ்வொரு குடிமக்களுக்கும் வழங்கப்படுகிறது இதில் சில ஆவணங்கள் கட்டாயம் தேவை அதில் பான் கார்டு,ஆதார் அட்டை.
18 வயது கீழ் உள்ள நபர் பெற முடியுமா?
உங்களுடைய 6மாத குழந்தைக்கு பான் கார்டு பெற முடியும், ஆனால் பெற்றோர் அல்லது பாதுகாப்பாளர் முகவரி உடன் பெற முடியும் குறிப்பாக குழந்தைகளுக்கு பான் கார்டு பெற வேண்டும் என்றால்.
நீங்கள் NSTL என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும் அங்கு விண்ணப்பங்களை பூர்த்தி செய்து பெற்றோர் அல்லது பாதுகாவலரின் டிரைவிங் லைசன்ஸ், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, பாஸ்போர்ட், இவற்றில் ஏதாவது ஒன்றை நீங்கள் ஆதார் சான்றிதழ் பயன்படுத்தலாம்.
தொலைபேசி ரசீது கட்டணம், கேஸ் பில், வீட்டு வரி ரசீது, ஆதார் கார்டு, இவைகளையும் நீங்கள் பயன்படுத்தலாம்.
எப்படி விண்ணப்பிப்பது பான் கார்டு பெறுவதற்கு
உங்களுடைய குழந்தைகளுக்கு பான் கார்டு பெறுவதற்கு இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் https://www.onlineservices.nsdl.com/paam/endUserRegisterContact.html என்கின்ற இணையதளத்திற்கு செல்லவும் இப்பொழுது ஸ்கிரீனில் தோன்றும் விண்ணப்பத்தை பிழையின்றி சரியாக பூர்த்தி செய்து.
பிறகு மைனர், வயது சான்றிதழ் பெற்றோரின் புகைப்படம் உள்ளிட்ட அங்கு திரையில் கேட்கும் அனைத்து ஆவணங்களையும் கட்டாயம் பதிவேற்றம் செய்ய வேண்டும் பிறகு பெற்றோரின் கையொப்பங்களை ஸ்கேன் செய்து தனியாக பதிவேற்றம் செய்ய வேண்டும்.
குழந்தைகளுக்கு இப்போது ஆதார் கட்டாயம் தேவை
உங்களுடைய குழந்தை பிறந்து ஒரு வருடம் ஆனால் நீங்கள் ஆதார் அட்டை பெறலாம் இதற்கு பால் ஆதார் அட்டை என்பார்கள் இந்த ஆதார் கார்டு பார்ப்பதற்கு நீல ஆதார் கார்டு இருக்கும் இதில் 12 இலக்க நம்பர்கள் கேட்கப்பட்டிருக்கும்.
நீல ஆதார் அட்டை பெற வேண்டும் என்றால் நீங்கள் நேரடியாக மக்கள் கணினி மையத்திற்கு அல்லது ஆதார் அட்டை வழங்கும் அலுவலகத்திற்கு செல்ல வேண்டும் குழந்தை மருத்துவமனையில் பிறப்புச் சான்றிதழ் அல்லது டிஸ்சார்ஜ் சீட்டு போன்றவற்றை ஆதார் அட்டை பயன்படுத்தும் போது கட்டாயம் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
SC ST மாணவர்களுக்கு 1000 ரூபாய் உதவித்தொகையுடன் இலவச போட்டித் தேர்வு பயிற்சி..!
நீங்கள் குழந்தைகளுக்கு ஆதார் அட்டை பூர்த்தி செய்து பதிவேற்றம் செய்யப்பட்டால் 60 நாட்களுக்குள் நீல நிற ஆதார் அட்டை வழங்கப்படும் பிறந்த குழந்தை நீல நிற ஆதார் அட்டை விண்ணப்பிக்கலாம்.
ஆனால் இதற்கு குழந்தை பிறந்த சான்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ரசீது போன்றவை கட்டாயம் தேவை இணையதளத்தில் பால் ஆதார் அட்டை விண்ணப்பித்து எளிமையாக பெற்றுக்கொள்ள முடியும், பெற்றோர்கள் இந்த ஆதார் அட்டையை பயன்படுத்தி உங்களுடைய குழந்தைகளுக்கு பான் கார்டு பெற முடியும்.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |