Can I get TNPSC Group 4 Job if I pass typewriting exam
Typing தேர்வில் தேர்ச்சி பெற்றால் TNPSC குரூப் 4 வேலை கிடைக்குமா..!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) பல்வேறு வேலைவாய்ப்பிற்கு தேர்வுகளை நடத்துகிறது இங்கு குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகள் மூலம் டைப்பிங் செய்வதற்கு சில பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
இந்த பணியிடத்திற்கு விண்ணப்பம் செய்யும் நபர்கள் தமிழ்நாடு அரசு நடத்தும் டைப்பிங் தேர்வில் தேர்ச்சி பெற்று அதற்கான ஆவணத்தை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் அப்பொழுதுதான் குரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெற்றாலும்.
கிராம நிர்வாக அலுவலர் பணியிடம் கிடைக்கவில்லை என்றால் இந்த டைப்பிங் ஆவணத்தை வைத்து வேறொரு பணியிடத்திற்கு நீங்கள் முயற்சி செய்யலாம் இதைப் பற்றிய முழுமையான தகவல்களை இங்கு காணலாம்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை குரூப் 2 மற்றும் குரூப் 4 பதிவிகளுக்கு குறைந்தபட்சம் 5000 காலி பணியிடங்களை அறிவிக்கிறது இந்த பணியிடங்களில் ஜூனியர் அசிஸ்டன்ட், தட்டச்சர்,ஸ்டெனோ டைப்பிங் என பல்வேறு பதிவிகள் பட்டியலிடப்படுகிறது.
டைப்பிங் தேர்வு எப்பொழுது நடத்தப்படுகிறது
இந்த டைப்பிங் தேர்வு ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடத்தப்படுகிறது தொழில்நுட்ப கல்வித்துறை (DoT) நடத்தும் இந்த தேர்வில் தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளிலும் டைப்பிங் தேர்வில் கலந்து கொள்ளலாம்.
முதுநிலை தரத்தில் தட்டச்சு சான்றிதழை பெற வேண்டும், தட்டச்சு தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு TNPSC மூலம் GROUP-4 தேர்வில் அறிவிக்கப்பட்டுள்ள தட்டச்சர் பதிவிகளுக்கு நீங்கள் விண்ணப்பிக்கலாம்.
நீங்கள் டைப்பிங் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்றால் குறைந்தது 6 மாதமாவது பயிற்சி பெற வேண்டும் இதற்கான பயிற்சி மையங்கள் ஆங்காங்கே இருக்கிறது இதற்கான கட்டணம் மாதத்திற்கு குறைந்தது 500 ரூபாய் முதல் 1,000/- ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்படுகிறது.
தமிழ்நாட்டில் TNPSC தேர்வுக்கு சிறந்த பயிற்சி மையங்கள் பட்டியல்கள்..!
இந்த டைப்பிங் தேர்வில் நீங்கள் தேர்ச்சி பெற்று ஆவணங்கள் பெற்று வைத்தால் டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம் உங்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை எனில் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உங்களுக்கு வேலை வாய்ப்பு இருக்கிறது.
For Typist
By Higher / Senior Grade in Tamil and English (or)
Higher / Senior Grade in Tamil and Lower Junior Grade in English (or)
By Higher / Senior Grade in English and Lower Junior Grade in Tamil
For Steno Typist Grade-III
By Higher / Senior Grade in Tamil and English (or)
Higher / Senior Grade in Tamil and Lower Junior Grade in English (or)
By Higher / Senior Grade in English and Lower Junior Grade in Tamil
Candidates of intermediate grade should choose junior grade column as it has been declared that intermediate grade will not be treated as equivalent to senior grade.
Computer Qualification for Typist and Steno Typist Grade-III
விண்ணப்பதாரர்கள் தொழில்நுட்பக் கல்வித் துறையால் வழங்கப்படும் கணினி மற்றும் அலுவலக ஆட்டோமேஷனில் சான்றிதழ் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். (Candidates Should Have Passed the Certificate Course in Computer and Office Automation Awarded by the Technical Education Department)
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |