Beware of Scams on the SMS as Power Disconnection TNEB Notice
மின் இணைப்பு துண்டிப்பு குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள முக்கியமான செய்தி கவனமாக இருங்கள்..!
தமிழ்நாடு மின்சார வாரியம் தற்போது புது தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது உங்களுடைய மின்சார கட்டணம் செலுத்தாததால் மின் இணைப்பு துண்டிக்கப்படுகிறது என்று குறுஞ்செய்தி ஒன்று அனுப்பப்படுகிறது.
அந்த குறுஞ்செய்தியில் இருக்கக்கூடிய லிங்க்கை (Links) கிளிக் செய்தால் உங்கள் வங்கி கணக்கில் இருக்கக்கூடிய பணம் திருடப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது மிகவும் ஜாக்கிரதையாக இருங்கள் என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது பற்றிய குறுஞ்செய்தி உங்களுக்கு வந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி முழுமையாக இந்த கட்டுரைகள் காணலாம் தற்போது இந்தியாவில் பணம் செலுத்துவது என்பது டிஜிட்டல் மையமாகி வருகிறது.
ஒவ்வொரு மாதமும் இணையதளத்தில் பணப் பரிவர்த்தனை என்பது பல மடங்கு உயர்ந்து வருகிறது பெட்டிக்கடை முதல் மருத்துவமனை வரை அனைத்து இடங்களிலும் பண பரிவர்த்தனை என்பது இணையதளம் மூலம் நடைபெறுகிறது.
தற்போது இங்குதான் மிகப்பெரிய மோசடிகளும் நடைபெறுகிறது குறிப்பாக இணையதளத்தில் உங்களுடைய செல்போன் எண், உங்களுடைய ஆதார் எண், பான் கார்டு எண், போன்றவற்றை தெரிந்து கொண்டால் மிக எளிமையாக உங்கள் வங்கி கணக்கில் இருந்து பணத்தை திருடிவிடுவார்கள்.
உங்களுடைய வங்கியில் இருந்து பேசுகிறோம் ATM அட்டை எண் நம்பர் சொல்லுங்கள் என்று பணத்தை திருடுவது இன்னும் தொடர்கிறது தற்போது புதிதாக தமிழ்நாடு மின்சார வாரியத்தின் குறுஞ்செய்தி மூலம் பணம் திருடுவது தொடங்கியுள்ளது.
மிக கவனமாக இருங்கள் தமிழ்நாடு மின்சார வாரியம்
உங்களுடைய மின்சார கட்டணம் செலுத்தவில்லை மின்சார இணைப்பு விரைவில் துண்டிக்கப்படும் என (SMS) குறுஞ்செய்தி வந்தால் அதை நீங்கள் பொருட்படுத்த கூடாது இப்படி (SMS) வந்தால் முதலில் உங்களுடைய கட்டண நிலையினை மின்வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நீங்கள் சரி பார்க்க வேண்டும்.
உங்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பின எண்ணை உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டாம் இந்த எண் பற்றி சைபர் குற்றப்பிரிவு காவல் துறைக்கு புகார் கொடுக்கவும் பாதுகாப்பாக இருங்கள் இதுபோன்ற தற்போது குறுஞ்செய்தி (SMS) மூலம் பணம் திருடப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வருகிறது.
ரேஷன் கார்டு பெறுவதற்கு விண்ணப்பம் செய்கிறீர்களா தமிழக அரசு வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி..!
இது போன்ற குறுஞ்செய்தி வந்தால் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் உடனடியாக அந்த குறுஞ்செய்தியை டெலிட் செய்யுங்கள் எந்த ஒரு போலியான தொலைபேசி எண்ணுக்கும் பதில் அளிக்க வேண்டாம் உங்களுடைய குறுஞ்செய்தியில் (SMS) வரும் லிங்கை தொட வேண்டாம் இப்படி என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |