TNPSC தேர்வில் வேதியியல் அதிக மதிப்பெண்கள் வழங்கக்கூடிய பகுதிகள் பட்டியல்கள்..!Areas where chemistry can score high in TNPSC exam

Areas where chemistry can score high in TNPSC exam

TNPSC தேர்வில் வேதியியல் அதிக மதிப்பெண்கள் வழங்கக்கூடிய பகுதிகள் பட்டியல்கள்..!

நீங்கள் போட்டி தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்தால் நிச்சயம் ஆழமாக அனைத்து பாடப்பகுதிகளையும் நன்றாக புரிந்து கொண்டு படிக்க வேண்டும் எளிமையான கேள்விகளாக இருக்கும் நீங்களும் அதை படித்திருப்பீர்கள் ஆனால் தேர்வு நேரத்தில் உங்களால் சரியாக நினைவு கொள்ள முடியாது.

தேர்வுகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது முடிவுகளும் வெளியிடப்படுகிறது அதிக மதிப்பெண்கள் பெற்ற நபர்களும் பணியிடத்திற்கு சென்று கொண்டே இருக்கிறார்கள்.

உங்களுக்கு தேர்வில் வெற்றி கிடைக்கலாம் ஆனால் வேலைவாய்ப்பு பெறக்கூடிய மதிப்பெண்கள் கிடைக்காமல் போனால் நிச்சயம் அது உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

கீழே வழங்கப்பட்டுள்ள வேதியலின் சில பகுதிகள் மிக முக்கியமானது அதை நினைவில் கொள்ளுங்கள் நிச்சயம் தேர்வில் கேட்கப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

பெட்ரோலிய பொருட்கள் வேதியல்கள்

இயற்கை வாய்வு

மீத்தேன், உயர் அல்கேன், கார்பன் டையாக்சைடு, நைட்ரஜன், ஹைட்ரஜன், சல்பைடு வாயுக்களை உள்ளடக்கிய இயற்கையில் காணப்படும் ஹைட்ரோ கார்பன் கலவை.

எரிபொருட்களாக பயன்படுத்தப்படுகிறது

மின்சாரம் உற்பத்தி செய்ய

செயற்கை இலைகள், பெயிண்ட், உற்பத்தி செய்ய

அழுத்தப்பட்ட இயற்கை வாய்வு

அதிக அழுத்தம் கொண்ட இயற்கை வாயுவை அழுத்தும் போது அழுத்தப்பட்ட இயற்கை வாய்வு கிடைக்கிறது

தானியங்கி வாகனங்களின் எரிபொருட்கள்

மீத்தேன் (88.5%) உள்ளது

நிலக்கரி

படிம எரிபொருள் இது தனித்த கார்பனம் கார்பனின் சேர்மங்களும் கலந்த கலவையாகும்.

வெப்பத்தையும் மின்சாரத்தையும் உற்பத்தி செய்ய

உயர்வு பொருட்கள், நீர் ஓட்ட ஆடைகள், ரெசின்கள், அழகு சாதன பொருட்கள், ஷாம்பு மற்றும் பற்பசை தயாரிக்க

காகிதம் தயாரிக்க

சிறுநீர் சுத்திகரிப்பு கழிவுகளில் பயன்படுத்தப்படுகிறது

பெட்ரோலியம்

பூமியின் மீது திட திரவ வாயு நிலையில் காணப்படும் ஹைட்ரோ கார்பன்களின் கலவையாகும்

LPG வீடுகளிலும் தொழிற்சாலைகளிலும் எரிபொருட்களாக பயன்படுத்தப்படுகிறது

பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கு எரிபொருட்கள்

சாலை அமைக்க தார், களிம்பு மருந்துகள், மெழுகுவர்த்தி எழுத பயன்படுத்தப்படும் மை, வண்ணம் தீட்டும் பென்சில் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.

TNPSC குரூப் 4 VAO தேர்வு இந்தியாவில் உள்ள 18 ரயில்வே மண்டலங்களின் பட்டியல்..!

ஸ்டவ் அடுப்புகளிலும், ஜெட் விமானங்களிலும் மண்ணெண்ணெய் எரிபொருட்களாக பயன்படுத்தப்படுகிறது

ஹைட்ரோகார்பன்கள்

ஹைட்ரஜன் மற்றும் கார்பன் அணுக்களை கொண்ட கரிம சேர்மங்கள் ஆகும்.

இவை எரியக்கூடியவை

இவை இயற்கையில் உருவாகிறது

JOIN OUR GROUPS

WHATSAPP CLICK HERE
TELEGRAM CLICK HERE

Leave a Comment