Are you applying to get a ration card Tamil Nadu Govt
ரேஷன் கார்டு பெறுவதற்கு விண்ணப்பம் செய்கிறீர்களா தமிழக அரசு வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி..!
இந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற்றது இதற்காக தேர்தல் விதிமுறைகள் சுமார் இரண்டு மாதங்களாக நடைமுறையில் இருந்தது இதனால் ரேஷன் கார்டு வேண்டி விண்ணப்பம் செய்தவர்களுக்கு ரேஷன் கார்டு வழங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது என்று தமிழக அரசு ஒரு செய்தியை வெளியிட்டது.
சுமார் 2.80 லட்சம் நபர்கள் ரேஷன் கார்டு பெறுவதற்கு காத்திருக்கிறார்கள் இவர்களுடைய விண்ணப்பங்கள் இன்னும் பரிசீலனை செய்யப்படவில்லை என தகவல்கள் கசிந்துள்ளது தற்போது இது பற்றி தமிழக அரசு அதிரடியான ஒரு முடிவை எடுத்துள்ளது.
அடுத்த மாதம் முதல் விண்ணப்பம் செய்த நபர்களுக்கு பரிசீலனை செய்து தொடர்ச்சியாக ரேஷன் கார்டு வழங்குவதற்கு தமிழக அரசு தயாராகி உள்ளது உங்களுக்கு புதிதாக திருமணம் நடைபெற்று இருந்தால் அல்லது கூட்டுக் குடும்பமாக இருந்து தனிக் குடும்பமாக பிரிந்தால் இருந்தால் நிச்சயம் ரேஷன் கார்டு தேவைப்படும்.
எனவே நீங்கள் இந்த நேரத்தில் விண்ணப்பம் செய்தால் உடனடியாக உங்களுடைய விண்ணப்பம் பரிசீலனை செய்து ரேஷன் கார்டு வழங்குவதற்கான நடைமுறைகள் எடுக்கப்படும் உங்களுக்கு ரேஷன் கார்டு வழங்கப் பட்டுவிட்டால் உடனடியாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு நீங்கள் விண்ணப்பம் செய்யலாம் அதற்கும் ஆங்காங்கே முகாம்கள் நடைபெற்று வருகிறது.
புதிய ரேஷன் கார்டு பெறுவதற்கான நடைமுறைகள்
உங்களுக்கு புதிதாக ரேஷன் கார்டு தேவைப்பட்டால் முதலில் உங்களுடைய பெயரை ஏற்கனவே இருக்கும் ரேஷன் கார்டில் நீக்க வேண்டும் அதற்கான சான்றிதழ்களையும் அல்லது ஆதாரங்களையும் நீங்கள் வழங்க வேண்டும்.
குறிப்பாக திருமணம் நடைபெற்று இருந்தால் கல்யாண பத்திரிக்கை அல்லது வேறு ஏதாவது நிகழ்வு நடைபெற்றிருந்தால் அதற்கான ஆவணங்கள் வழங்கினால் அரசு அலுவலர்கள் அதனை சோதனை செய்து அனைத்தும் சரியாக இருந்தால் உங்களுடைய பெயரை.
TNPSC குரூப் 4 பொருளாதாரம் முந்தைய வினா விடைகள் மற்றும் பாடப்பகுதிகள்..!
ஏற்கனவே இருக்கும் ரேஷன் கார்டில் இருந்து நீக்கிவிடுவார்கள் அதன் பிறகு நீங்கள் வசிக்கும் வீட்டிற்கு வீட்டு வரி ரசீது கட்டியதற்கான ரசீது உங்களுடைய இரண்டு புகைப்படம் ஆதார் அட்டை போன்றவற்றை நேரடியாகவே இணையதளத்தில் ரேஷன் கார்டு வேண்டி விண்ணப்பம் செய்து விடலாம்.
உங்களுடைய விண்ணப்பம் அரசு அலுவலர்களால் பரிசினை செய்து உங்களுடைய வீட்டிற்கு நேரடியாக வந்து சோதனை செய்து அனைத்தும் சரியாக இருந்தால் புதிய ரேஷன் கார்டு வழங்கி விடுவார்கள்.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |