Any correction in the ration card can be done in 2 minutes
ரேஷன் கார்டில் ஏதாவது திருத்தம் செய்ய வேண்டுமா 2 நிமிடத்தில் செய்துவிடலாம் தமிழக அரசு செய்துள்ள புதிய மாற்றங்கள்..!
தமிழக அரசு ரேஷன் அட்டையில் ஏதாவது திருத்தம் செய்ய வேண்டும் என்றால் அதனை எளிமைப்படுத்தி உள்ளது,புதிதாக 2 லட்சம் நபர்கள் ரேஷன் கார்டு வேண்டும் என்று விண்ணப்பித்துள்ளார்கள் அவர்களுக்கு விரைவில் ரேஷன் கார்டு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
ரேஷன் அட்டையில் போலியான பெயர்கள் சேர்த்தல், பெயர்கள் நீக்குதல், முகவரி மாற்றம், உள்ளிட்டவைகள் ஆதாரம் இன்றி எதுவும் செய்ய முடியாது நீங்கள் ரேஷன் அட்டையில் ஏதாவது திருத்தம் செய்ய வேண்டும் என்றால் முதலில் https://tnpds.gov.in/ என்கின்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
அங்கு பயனாளர் உள்நுழை என்ற தேர்வை கிளிக் செய்ய வேண்டும் தற்போது நீங்கள் ரேஷன் அட்டையில் கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணை வழங்க வேண்டும்,அதன் பிறகு கேப்சா குறியீடு உள்ளீடு செய்து உள்ளே சென்றால் கொடுத்துள்ள தொலைபேசி எண்ணை அங்கு உள்ளீடு செய்ய வேண்டும்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள கேப்சைட் டைப் செய்து கிளிக் செய்தால் உங்களுடைய தொலைபேசி எண்ணுக்கு OTP அனுப்பப்படும் அந்த OTP யை சரியாக உள்ளீடு செய்தால் நீங்கள் அதிகார பூர்வ வலைதள பக்கத்திற்கு உள்ளே சென்று விடுவீர்கள்.
தற்போது அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் உங்களுக்கு தேவையான பெயர் நீக்குதல், பெயர் சேர்த்தல், ரேஷன் அட்டை கடை மாற்றம் செய்தல், குடும்ப தலைவர் மாற்றம் செய்ய, குடும்ப உறுப்பினர் நீக்க, அட்டை தொடர்பான சேவை நிலை அறிய.
நகல் மின்னணு குடும்ப அட்டை விண்ணப்பிக்க நிலை, நகல் மின்னணு குடும்ப அட்டை விண்ணப்பிக்க, புதிய மின்னணு அட்டை விண்ணப்பிக்க, மின்னணு அட்டை விண்ணப்பத்தின் நிலை மறு பரிசினை விண்ணப்பம் போன்ற அனைத்து வகையான தேர்வுகளும் இருக்கும்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் விண்ணப்பிக்க தொடங்கப்பட்டுள்ளது..!
அதில் உங்களுக்கு தேவையானதை தேர்வு செய்யலாம் எடுத்துக்காட்டாக புதிய குடும்ப உறுப்பினர் பெயர் சேர்க்க வேண்டும் என்றால் அந்த நபரின் ஆதார் அட்டை விவரங்களை உள்ளீடு செய்ய வேண்டும் அதற்கு பின்பு அந்த நபரின் ஏற்கனவே இருந்த குடும்ப அட்டையில் பெயர் நீக்கம் செய்யப்பட்டதற்கான ஆதார சான்றிதழை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
அதன் பிறகு உங்களுக்கு கோரிக்கையை சரிபார்த்துக் கொள்வதற்கு எண்கள் வழங்கப்படும் அதன் மூலம் நீங்கள் மறுபடியும் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்குச் சென்று அந்த எண் மூலம் உங்களுடைய கோரிக்கை நிலைமையை தெரிந்து கொள்ளலாம்.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |