Answer key for TNPSC Group 1 exam has been published
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வாளர்களின் கவனத்திற்கு Answer key வெளியிடப்பட்டுள்ளது..!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) தமிழகத்தில் உள்ள குடிமைப் பணிகளுக்கான 90 காலிப்பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி GROUP-1 தேர்வு கடந்த ஜூலை 13ஆம் தேதி நடைபெற்றது.
இதில் 2.70 லட்சம் நபர்கள் தேர்வு எழுதி உள்ளார்கள் தற்போது இந்த தேர்வுக்கான விடைக்குறிப்பு (Answer Key) உத்தேசமாக வெளியிடப்பட்டுள்ளது,இதில் ஏதாவது ஆட்சேபனம் தெரிவிக்க விரும்பினால் தேர்வலர்கள் அவர்களுடைய தேர்வு எண் அடிப்படையில்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் தெரிவிக்கலாம் அவர்கள் தெரிவிக்கும் கருத்து போதிய அடிப்படை ஆதாரங்கள் இருக்க வேண்டும் அப்படி இருந்தால் நிச்சயம் ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காலிப்பணியிடங்களை தொடர்ந்து நிரப்பி வரும் டிஎன்பிஎஸ்சி
அரசுத் துறையில் உள்ள காலி பணியிடங்களை தற்போது வேகமாக நிரப்பி வருகிறது டிஎன்பிஎஸ்சி இந்த வருடத்தில் பல்வேறு தேர்வுகள் நடைபெற்று உள்ளது மற்றும் இனிவரும் மாதங்களில் நடைபெற உள்ளது.
கடந்த ஜூன் 9ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நடைபெற்றது, ஜூலை 13-ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு நடைபெற்றது மற்றும் செப்டம்பர் 14ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு நடைபெற உள்ளது, தற்போது 650 புதிய காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப சேவைகளுக்கான பணியிடங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த பணியிடங்களுக்கு தேர்வுகள் மட்டுமே நேர்முக தேர்வுகள் இல்லை இதற்கான அறிவிப்பு ஜூலை 26 ஆம் தேதி வெளியிடப்பட்டது அன்று முதல் செப்டம்பர் 24ஆம் தேதி வரை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விருப்பம் உடைய நபர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு டிஎன்பிஎஸ்சி சார்பாக தொடர்ந்து தேர்வுகள் குறித்து அறிவிப்புகள் வெளியிடப்பட்டு கொண்டே இருக்கிறது அரசு துறையில் பல்வேறு காலி பணியிடங்கள் இருக்கிறது என்று அரசு ஊழியர்களும் தெரிவிக்கிறார்கள்.
இந்த காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் எங்களுக்கு இருக்கின்ற பணி சுமைகளை குறைக்க வேண்டும் எனவும் அவர்கள் தொடர்ந்து அரசை வலியுறுத்தி வருகிறார்கள்.
TNPSC டெக்னிக்கல் சர்வீஸ் பணியிடங்களுக்கான 654 காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது..!
இனி வனத்துறை பணியிடங்களும் டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்படும் என கடந்த சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் தெரிவித்திருந்தார்,டிஎன்பிஎஸ்சி மூலம் அரசுத்துறையில் உள்ள பணியிடங்களை நிரப்புவது எளிமையாக இருக்கிறது என்று தமிழ்நாடு அரசும் தெரிவித்துள்ளது.
டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதிய குரூப் 1 தேர்வாளர்களின் கவனத்திற்கு நீங்கள் https://www.tnpsc.gov.in/Tentative/Document/2022_16_CCS1P_2022_TENTATIVE_ANSKEY.pdf என்கின்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்றால் அங்கு விடை குறிப்பு இருக்கிறது, அதை நீங்கள் பதிவிறக்கம் செய்து நீங்கள் வைத்துள்ள விடைக்குறிப்புடன் ஒப்பிட்டு பார்க்கலாம் உங்களுக்கு எவ்வளவு மதிப்பெண்கள் கிடைக்கும் என்பது தோராயமாக தெரிந்துவிடும்.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |