Actor Vijay speech has created a storm in Tamil Nadu politics
நடிகர் விஜய்யின் பேச்சு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..!
தமிழக வெற்றிக் கழக மாநாடு நேற்று விக்கிரவாண்டியில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது இதில் நடிகர் விஜய் 46 நிமிடங்கள் தனது உரையாற்றினார் இதில் பாஜக மற்றும் திமுகவை கடுமையாக விமர்சனம் செய்தார்.
பெரியார் அண்ணா போன்ற சிறந்த தலைவர்கள் உருவாக்கிய கட்சியை இன்று ஒரு குடும்பம் தனது கட்டுப்பாட்டில் வைத்து தமிழ்நாட்டை கொள்ளையடிக்கிறது கேட்டால் திராவிட மாடல் என்று மக்கள் விரோத ஆட்சியை நடத்துகிறது என்று வெளிப்படையாகவே திமுகவை தாக்கினார்.
என்னுடைய எதிரி யார் என்று வெளிப்படையாக அறிவித்தார் இது திமுகவிற்கு மிகுந்த தலைவலியை ஏற்படுத்தியது 2026 ஆம் ஆண்டு தன்னுடன் கூட்டணி அமைக்கும் கட்சிகளுக்கும் ஆட்சியில் சரிசம பங்கு என ஒரு செய்தியை வெளியிட்டார்.
இது திருமாவளவன் உள்ளிட்ட நபர்களுக்கு மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது தற்போது 2026 தேர்தலில் அதிமுகவும் திருமாவளவனுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது 20 தொகுதிகளுக்கு மேல் மற்றும் அமைச்சர் அவையில் இடம் என்று தெரிவித்து வருகிறது விஜய்யும் இப்படி தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தனித்து நிற்கிறேன் என தெரிவித்துள்ளார் இது ஆரோக்கியமான அரசியலாக இருக்கிறது. திமுக 200 தொகுதிகளில் நாங்கள் வென்றே தீருவோம் 200 தொகுதிகளில் திமுக கட்டாயம் களமிறங்கும் என தெரிவிக்கிறது அதனால் மீதமுள்ள 34 தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு பிரித்துக் கொடுக்கும்.
இரண்டு மூன்று என 6 கூட்டணிகள் கட்சிகள் இருக்கும் அவைகளுக்கு பிரித்துக் கொடுக்கும் திமுக கூட்டணி உடைவது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது திமுக கூட்டணியில் வீசிக மட்டுமே வெளியில் வந்தால் போதும் திமுக தோல்வி என்பதை தேர்தலுக்கு முன்பே நாம் தெரிந்து கொள்ளலாம்.
இன்று தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் வரும் 2026 ஆம் ஆண்டில் நடைபெற இருக்கிறது சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள கடந்த சில மாதங்களாகவே திமுக தயாராகி வருகிறது இதற்காக தேர்தல் பணிகளை முன்னெடுக்கும் முன்பாக மூத்த நிர்வாகிகளை உள்ளடக்கிய.
தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவை திமுக உருவாக்கியது விஜய் நடத்திய மாநாட்டில் அதிர்ந்து போன திமுக உடனடியாக அண்ணா அறிவாலயத்தில் தேர்தல் சம்பந்தமாக விவாதம் நடைபெற்றதாக தெரிகிறது இந்த கூட்டத்தில் பேசிய ஸ்டாலின் தொகுதி பார்வையாளராக நியமிக்கப்பட்டு விட்டதால்.
தேர்தலில் சீட் கிடைக்காது என்று யாரும் வருத்தப்பட வேண்டும் உங்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படும் கட்சிப் பணிகளை செய்யுங்கள் தமிழக மக்களிடத்தில் நம்மளுடைய சாதனைகளைப் பற்றி தெரிவியுங்கள் உங்கள் தொகுதியில் வேறு ஏதாவது பிரச்சனைகள் இருந்தால் உடனடியாக கட்சி தலைமைக்கு தெரியப்படுத்துங்கள் என தெரிவித்துள்ளார்.
நேற்று வந்தவர்களை பற்றி கவலைப்பட வேண்டாம் கடந்த 30 ஆண்டுகளாக இதுபோன்று எத்தனையோ நபர்களை பார்த்து விட்டோம் அவர்கள் பின்னாளில் நம்மிடம் வந்து ஒரு சீட்டுக்கு கெஞ்சியுள்ளார்கள் என்றும் கூறியுள்ளார்.
குறிப்பாக 1992 ஆம் ஆண்டு வைகோ அவர்கள் திமுகவின் கட்சியை உடைத்து சென்ற போது 18 நபர்கள் தீக்குளித்து இறந்தார்கள் வைகோ திமுகவில் ஏற்படுத்திய தாக்கம் என்பது மிகப்பெரியது அதன் பிறகு 2005 ஆம் ஆண்டு திரு விஜயகாந்த் அவர்கள் மதுரையில் மிகப்பெரிய மாநாடு நடத்தினார்.
அதுவும் திமுகவுக்கு மிகப்பெரிய அடியை கொடுத்தது தற்போது சீமான் தொடர்ந்து திமுகவை தாக்கி வருகிறார் இப்படி இருக்கும் சூழ்நிலையில் திமுகவிற்கு விஜயை எப்படி கையாள்வது என்பது நன்றாக தெரியும்.
விஜய் மாநாட்டிற்கு கூடிய அனைத்து நபர்களும் விஜய்க்கு வாக்களிப்பார்களா என்றால் நிச்சயம் இல்லை திமுக தேர்தல் நேரத்தில் விஜய் கட்சியை உடைக்கும் என்பதிலும் மாற்றங்கள் இல்லை ஆனால் நடிகர் விஜய்.
அதற்கேற்றார் போல் தனது கட்சியை வலுப்படுத்த வேண்டும் தனியாக களம் இறங்கினால் நிச்சயம் தோல்வி என்பது அவருக்கும் தெரியும் 2026 ஆம் ஆண்டு கூட்டணியில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும்.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |