Aadhaar Arjuna comments on the Samsung protest
ஆதார் அர்ஜுனா சாம்சங் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்து திமுகவில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளார்..!
திமுக கூட்டணியில் மெல்ல மெல்ல விரிசல்கள் ஏற்படுகிறது குறிப்பாக வீசிக்காவின் பார்வை என்பது வேறுபடுகிறது இதற்கு முக்கிய காரணம் திமுகவின் ஆட்சி அதிகாரத்தில் உள்ள மக்களின் கோபம்.
ஒவ்வொரு திட்டத்திலும் அல்லது ஒவ்வொரு செயல்பாடுகளிலும் திமுக மக்களிடத்தில் அவப்பெயரை பெற்று வருகிறது குறிப்பாக அனைத்து திட்டங்களிலும் தோல்வியை சந்தித்துள்ளது சட்டம் ஒழுங்கு சீர்கேடு உச்ச கட்டத்தில் இருக்கிறது.
இந்த திமுக ஆட்சிக் காலத்தில் பாதிக்கப்படுவது தலித் மக்கள் மட்டுமே தற்போது சென்னை ஒரகடம் பகுதியில் செயல்பட்டு வரும் சாம்சங் தொழிற்சாலையில் கடந்த ஒரு மாதமாக தொழிலாளர்கள் போராட்டத்தில் இறங்கி உள்ளார்கள்.
சாம்சங் ஊழியர்கள் போராட்டம் நடத்த தடையில்லை என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது இந்த விவகாரத்தில் தற்போது வீசிக்க துணை பொதுச்செயலாளர் ஆதார் அர்ஜுனா கருத்து தெரிவித்துள்ளது திமுகவை உச்சகட்ட கோபத்திற்கு தள்ளி உள்ளது.
சாம்சங் பாராட்டம் குறித்து தமிழ்நாடு அரசு அளித்துள்ள விளக்கத்தில் அரசியல் கட்சிகள் உரிய அனுமதியின்றி திடீரென்று பொது இடத்தில் போராட்டம் நடக்கினால் காவல்துறை கைது செய்து அவர்களை திருமண மண்டபங்களில் மாலை வரை வைத்திருந்து விடுதலை செய்து விடுவார்கள்.
அதே போலத்தான் போராடிய தொழிலாளர்கள் கைது செய்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள் யார் மீதும் வழக்கு பதிவு செய்யப்படவில்லை சிஐடியு தொழிற்சங்கத்தை அரசு அங்கீகரிக்காது என எப்போதும் சொல்லவில்லை.
அப்பகுதியில் இயங்கும் பல தொழிற்சாலைகளில் இந்த சங்கத்தை அரசு உரிய அனுமதித்துள்ளது சாம்சங் நிறுவனம் தொழிற்சாலை சங்கத்தை அங்கீகரிக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளது நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் அரசு சரியான முடிவு எடுக்க முடியவில்லை.
உத்தரவு எப்படி வந்தாலும் அரசு அதனை செயல்படுத்தும் சாம்சங் நிறுவனம் தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை ஏற்க முன் வந்துள்ளதால் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என தெரிவித்துள்ளது.
ஆதார் அர்ஜுனா உள்ளே வந்து விட்டார் அவர் வெளியிட்டுள்ள கருத்துக்களில் சாம்சங் நிறுவனத்திற்கும் அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் தொழிற்சங்கத்திற்கு இடையே 30 நாட்களாக நீடித்து வரும் பிரச்சனை குறித்து.
அரசு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு எட்ட முடியவில்லை என்பது அரசின் தோல்வி வேதனை அளிக்கிறது அந்த நிறுவனம் செயல்பட்டு வரும் பகுதியில் பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களும் செயல்படுகிறது.
அரசு பன்னாட்டு நிறுவனங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை நம் தமிழ்நாட்டில் உள்ள தொழிலாளர்களுக்கும் கொடுக்கும் வேண்டும் தொழிலாளர்கள் விவகாரத்தில் அரசு எப்பொழுதும் சுமுகமான முடிவை எடுத்து விட வேண்டும்.
அதை விட்டுவிட்டு காவல்துறை வைத்து தொழிலாளர்களை அச்சுறுத்துவது என்பது அவர்களை கைது செய்வது என்பது அரசின் தோல்வியை காட்டுகிறது அரசு இரண்டு தரப்புகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி தொழிலாளர்கள் கோரிக்கைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
தமிழக மக்கள் நீங்கள் தான் இதற்கு சரியான பதிலை சொல்ல வேண்டும்..!
இதற்கு தீர்வு எட்டப்படவில்லை என்றால் தமிழ்நாட்டில் இருக்கும் பிற பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் நிலையும் இது பாதிப்பை ஏற்படுத்தும் ஏற்கனவே திமுக அரசின் மீது பல்வேறு விஷயங்களில் வீசிக்காவின் துணைப் பொதுச்செயலாளர் அர்ஜுனா கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.
இது குறித்து கட்சியின் மூத்த தலைவர் தொல் திருமாவளவன் கேட்டபோது அவருடைய கருத்து தான் என்னுடைய கருத்து அதில் மாற்றமில்லை என்று வெளிப்படையாகவே தெரிவித்துவிட்டார் இது திமுகவில் தற்போது புகைச்சலை ஏற்படுத்தி விட்டு உள்ளது.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |