காவிரி ஆற்றை வேடிக்கை பார்க்க சென்ற கல்லூரி மாணவர் அடுத்து கொலை போதையின் உச்ச கட்டத்தில் என்ன நடந்தது..!A student from Pudukottai was beaten to death in Trichy

A student from Pudukottai was beaten to death in Trichy

காவிரி ஆற்றை வேடிக்கை பார்க்க சென்ற கல்லூரி மாணவர் அடுத்து கொலை போதையின் உச்ச கட்டத்தில் என்ன நடந்தது..!

திருச்சி காவேரி ஆற்றில் கரை புரண்டு ஓடும் வெள்ளத்தைப் பார்த்துச் சென்ற கல்லூரி மாணவர் போதை கும்பலால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு சட்டம் ஒழுங்கு பிரச்சனை உச்சகட்டத்தில் இருக்கிறது 2006 முதல் 2011 வரை முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை, நில அபகரிப்பு பிரச்சனை, மின்சார பிரச்சனை, என பல பிரச்சனைகள் இருந்தது.

தற்போது திரு. மு.க ஸ்டாலின் அவர்களுடைய ஆட்சிக்காலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை என்பது உச்ச கட்டத்தில் இருக்கிறது தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் பல்வேறு மாவட்டங்களில் கொலைகள் நடக்கிறது என செய்திகள் வெளி வருகிறது.

இதனை பார்க்கும் போது பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது என்பதை நன்றாக தெரிகிறது புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையை அடுத்த அன்பு நகரை சேர்ந்தவர் ரஞ்சித் கண்ணன் இவர் திருச்சி காஜாமாலையில் உள்ள கலை அறிவியல் கல்லூரியில் இளநிலை 3ம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்த நிலையில் ஸ்ரீரங்கம் கணபதி நகரில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றுள்ள ரஞ்சித் கண்ணன் அப்போது தனது அத்தை மகனுடன் காவிரி ஆற்றில் ஓடும் வெள்ளத்தைப் பார்க்க சென்றுள்ளார்.

அங்கு வெள்ளத்தைப் பார்த்துக் கொண்டிருந்தபோது அருகில் மது அருந்தி கொண்டிருந்த கும்பல் வெளியூர்க்காரனுக்கு இங்கு என்ன வேலை என்று மரக்கட்டையால் கடுமையாக தாக்கி உள்ளார்கள் இதில் ரத்த வெள்ளத்தில் படுகாயம் அடைந்துள்ள ரஞ்சித் கண்ணன்.

அவரை உடனடியாக ஹரி சந்தோஷ் மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்கள் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ரஞ்சித் கண்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பாக 5 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள் தமிழகத்தில் நிலவும் போதை பொருள் கலாச்சாரத்தால் தொடர்ந்து பல்வேறு குற்றங்கள் அரங்கேரி வருகிறது குறிப்பாக அப்பாவி இளைஞர்கள் உயிரிழப்பு என்பது மிகுந்த வேதனை அளிக்கிறது.

விஜயின் மாநாட்டிற்கு இடம் கொடுக்க மறுக்கும் உரிமையாளர்கள் உச்சகட்ட ஆத்திரத்தில்..!

போதைப் பொருளை கட்டுப்படுத்த இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை பல்வேறு குற்ற செயல்கள் நடக்கிறது இதனால் பாதிக்கப்படுவது பொதுமக்கள் மட்டுமே போதை பொருள் வீடியோக்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வெளிவருகிறேன்.

2022 ஆம் ஆண்டுக்கு பிறகு தமிழகத்தில் கஞ்சா நடமாட்டம் உச்சகட்டத்தில் இருக்கிறது தினமும் நடக்கும் கொலைகளை பார்க்கும் பொழுது தமிழக மக்கள் அச்சத்துடன் இருக்கிறார்கள் என்பது நன்றாக தெரிகிறது.

JOIN OUR GROUPS

WHATSAPP CLICK HERE
TELEGRAM CLICK HERE

Leave a Comment