A low pressure zone is crossing the coast near Chennai on 17th be very careful
சென்னைக்கு அருகே கரையை கடக்கிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம் 17ஆம் தேதி மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும்..!
வடகிழக்கு பருவமழை சரியாக இன்று தொடங்கியது தமிழகம் முழுவதிலும் மழை வெளுத்து வாங்குகிறது குறிப்பாக இந்த வருடம் இப்பொழுது கூடுதலாக 16 சதவீதம் மழை பொழிவு இருக்கிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மண்டலமாக வலுப்பெற்றுள்ளது இது வரும் 17ஆம் தேதி அதிகாலை சென்னை அருகே புதுச்சேரி நெல்லூர் இடையே கரைய கடக்கிறது இது குறித்து.
இந்தியா வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது இது இன்று மாலை 5:30 மணி அளவில் தென்மேற்கு வங்க கடலில் சென்னையிலிருந்து.
கிழக்கு தென்கிழக்கு 490 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழகம் தெற்கு ஆந்திரா பகுதிகளை கடக்கும்.
வரும் 17ஆம் தேதி காலை சென்னைக்கு அருகே புதுச்சேரி நெல்லூர் இடையே கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது இதனால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழைப்பொழிவு கணிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், கடலூர், வேலூர், திருவள்ளூர், போன்ற மாவட்டங்களில் மழை பொழிவு நிச்சயம் அதிகமாக இருக்கும்.
தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, நாமக்கல், போன்ற மாவட்டங்களும் மழை பொழிவால் பாதிக்கப்படும் எனவே பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம்.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |