திருச்செந்தூர் முருகன் கோவிலில் உள்ள பெண் தெய்வானை யானை அதனுடைய வளர்ப்பு பாகன்..!A female elephant in Tiruchendur temple has killed two persons

A female elephant in Tiruchendur temple has killed two persons

திருச்செந்தூர் முருகன் கோவிலில் உள்ள பெண் தெய்வானை யானை அதனுடைய வளர்ப்பு பாகன் உட்பட இரண்டு நபர்களை மிதித்து கொன்றுள்ளது இது பக்தர்களிடையே கடுமையான அதிர்ச்சியை இன்று ஏற்படுத்தி உள்ளது.

பொதுவாக பெண் யானைக்கு மதம் பிடிக்காது இந்த யானை அமைதியான சுபம் கொண்டது 25 வயது ஆன நிலையில் திடீரென்று ஆக்ரோஷமாக நடந்து இரண்டு நபர்களை ஏன் கொன்றுள்ளது என வன காவலர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோவில் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது திருமுருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான இந்த திருச்செந்தூர் கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள்.

அங்கு இருக்கக்கூடிய நாழி கிணற்றில், நீராடி விட்டு கடலில் நீராடி முருகனை வழிபாடு செய்கிறார்கள் இந்த கோவிலில் நீண்ட காலமாக 25 வயது மதிக்கத்தக்க தெய்வானை யானை வளர்க்கப்பட்டு வருகிறது கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு யானை ஆசி வழங்கும்.

இன்று வழக்கம் போல் கோவில் வளாகம் அருகே உள்ள கொட்டகையில் தெய்வானை யானை கட்டப்பட்டு இருந்தது சரியாக மதியம் 3:30  அளவில் யானைக்கு பழம் கொடுப்பதற்காக அதனுடைய வளர்ப்பு பாகம் என்பவர் சென்றுள்ளார்.

அப்போது அவருடன் குமரி மாவட்டத்தை சேர்ந்த சிசுபாலன் என்பவரும் சென்றுள்ளார் முதலில் சிசுபாலன் என்பவர் தான் யானைக்கு பழத்தை கொடுத்ததாக கூறப்படுகிறது அந்த நேரத்தில் திடீரென்று பெண் தெய்வானை யானை ஆக்ரோசமடைந்து பிளிரிட்டு சிசுபாலனை கீழே தள்ளி.

காலால் மிதித்து நசுக்கி உள்ளது இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பாகன் உதயகுமார் தெய்வானை யானையை தொடர்ந்து தாக்க விடாமல் தடுக்க முயற்சி செய்தார்.

ஆனால் ஆக்ரோஷம் அடைந்த யானை தும்பிக்கையால் தள்ளி சுவற்றில் தூக்கி எரிந்துள்ளது பிழறிக் கொண்டே இரண்டு நபர்களையும் இந்த யானை ஆக்ரோஷமாக தாக்கியுள்ளது இதில் இரண்டு நபர்களும் உடல் நசுங்கி உயிரிழந்து உள்ளார்கள்.

சம்பவ இடத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த சிசுபாலன் உயிரிழந்தார் யானை பாகன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

யானை மிதித்து இரண்டு நபர்கள் உயிரிழந்தது திருச்செந்தூர் கோவிலில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இது தொடர்பாக வன அலுவலர் ரேவதி ராமன் செய்தியாளருக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் தெரிவித்த கருத்துக்களில் திருச்செந்தூர் கோவில் யானை தெய்வானை அமைதியானது பெண் யானைகளுக்கு பொதுவாக மதம் பிடிக்காது இரண்டு நபர்களை இந்த யானை தாக்கியுள்ளது சரியான நேரத்திற்கு குளிப்பாட்டாமல் இருந்திருக்கலாம் அல்லது சரியான உணவை கொடுக்காமல் இருந்திருக்கலாம்.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையை புயலாக மாற்ற ஹோண்டா தயாராகி வருகிறது..!

மேல சத்தம் அல்லது வேறு ஏதேனும் இடையூறு ஏற்பட்டு இருந்தாலும் இந்த சம்பவம் நடந்திருக்கலாம் எனினும் இப்பொழுது ஏதும் தெரிவிக்க முடியாது இங்குள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த பிறகு தெரிவிக்க முடியும் என தெரிவித்துள்ளார்.

JOIN OUR GROUPS

WHATSAPP CLICK HERE
TELEGRAM CLICK HERE

Leave a Comment