Some changes may be brought in TNPSC Group 3 Exam
TNPSC குரூப் 3 தேர்வில் சில மாற்றங்கள் கொண்டு வரப்படலாம்..!
தேர்வில் பல்வேறு மாற்றங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தொடர்ந்து கொண்டுவருகிறது தற்போது நடந்து முடிந்துள்ள குரூப்-4 தேர்வு மற்றும் குரூப்-1 தேர்வுகளில் (invalid mark) முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
செப்டம்பர் 14ஆம் தேதி நடைபெற உள்ள குரூப் 2 தேர்வுகளிலும் இந்த (invalid mark) முறை கொண்டு வரப்படும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) அறிவித்துள்ளது மத்திய அரசு நடத்தும் குடிமை பணி தேர்வுகளில் நெகட்டிவ் மதிப்பெண்கள் முறை வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால் தமிழக அரசு நடத்தும் குடிமை பணி தேர்வுகளிலும் மற்றும் மற்ற தேர்வுகளிலும் இதுபோன்ற நெகட்டிவ் மதிப்பெண்கள் முறை கொண்டு வரப்படவில்லை ஆனால் இந்த (invalid mark) முறை கொண்டுவரப்பட்டுள்ளது.
இதனால் தேர்வலர்கள் சற்று பாதிக்கப்படுகிறார்கள் என்பது உண்மை இந்த (invalid mark) முறை கொண்டுவரப்பட்டுள்ளதால் விரைவாக (OMR) தாள்கள் கணினி மூலம் மதிப்பீடு செய்ய முடியும் என கணக்கிடப்பட்டுள்ளது.
தேர்வு எழுதும் நபர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது இதனால் விரைவாக முடிவுகள் வெளியிடப்பட வேண்டும் என தமிழக அரசு இந்த ஆண்டு தற்போது நடைபெற்ற உள்ள மற்றும் நடைபெற உள்ள தேர்வுகளில் இந்த (invalid mark) முறை கொண்டுவரப்பட்டுள்ளது.
Group-3 தேர்வுகளில் கொண்டு வரப்பட உள்ள மாற்றங்கள்
Group-3 தேர்வு இந்த ஆண்டு இறுதியில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது ஆனால் இன்னும் இது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளியிடப்படவில்லை தேர்விலும் சில மாற்றங்கள் கொண்டுவரப்படலாம் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
TNPSC குரூப் 4 தேர்வில் 180 கட் ஆஃப் மதிப்பெண்கள் பெறுவது எப்படி..!
குறிப்பாக இந்த (invalid mark) முறை கொண்டுவரப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது,செப்டம்பர் 14ஆம் தேதி நடைபெற உள்ள குரூப்-2 தேர்வில் பல்வேறு பணியிடங்களில் வயது வித்தியாசங்களில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது அது போன்ற மாற்றங்கள்.
இந்த குரூப்-3 தேர்வில் கொண்டுவரப்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது, இருந்தாலும் அதிகாரப்பூர்வமான இன்னும் அறிவிப்புகள் வெளியிடப்படவில்லை.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |