TNPSC குரூப் 4 தேர்வில் 180 கட் ஆஃப் மதிப்பெண்கள் பெறுவது எப்படி..!How to get 180 cut off marks in TNPSC Group 4 Exam

How to get 180 cut off marks in TNPSC Group 4 Exam

TNPSC குரூப் 4 தேர்வில் 180 கட் ஆஃப் மதிப்பெண்கள் பெறுவது எப்படி..!

தமிழக அரசின் வேலைவாய்ப்பில் 10ம் வகுப்பு கல்வித் தகுதி அடிப்படையில் பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு சரியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

இந்த GROUP-4 தேர்வு மிக எளிமையானது ஆனால் போட்டியாளர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகம் இந்த தேர்வில் வெற்றி பெறுவதற்கு நீங்கள் 6ம் வகுப்பு முதல் 11 ஆம் வகுப்பு வரை உள்ள சமச்சீர் பாட புத்தகங்களையும் மற்றும் முந்தைய வினா விடைகளையும் நன்றாக படித்துக் கொண்டால் போதும் எளிமையாக வெற்றிபெற்று விடலாம்.

இந்தத் தேர்வு தமிழ் மற்றும் பொதுத்தாள் என இரண்டு தேர்வுகள் நடைபெறுகிறது இதில் நேர்முக தேர்வு இல்லை ஆவணங்கள் சரிபார்ப்பு மட்டும் இருக்கிறது இந்த தேர்வில் வெற்றி பெற்றாலும் அரசு வேலை வாய்ப்பு கிடைக்குமா என்பது நிச்சயமில்லை.

ஆனால் அதிகமான கட் ஆப் மதிப்பெண்கள் எடுத்தால் நிச்சயம் அரசு வேலை வாய்ப்பு கிடைக்கும் குறிப்பாக 180 மற்றும் அதற்கு மேல் கட் ஆப் மதிப்பெண்கள் பெற்றால் உங்களுக்கு நிச்சயம் அரசு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பதில் மாற்றங்கள் இல்லை.

180 கட் ஆப் மதிப்பெண்கள் பெறுவது அவ்வளவு எளிதல்ல அதற்கு நீங்கள் நன்றாக தயாராக வேண்டும் குறிப்பாக உங்களுக்கு சரியான வழிகாட்டி இருக்க வேண்டும் இந்த கட்டுரையில் 180 க்கு மேல் கட் ஆப் மதிப்பெண்கள் பெறுவது எப்படி என்பதை பற்றி முழுமையாக பார்க்கலாம்.

GROUP-4 தேர்வில் 180 கட் ஆப் மதிப்பெண்கள் பெறுவது எப்படி

Understand the selection process well (தேர்வு முறையை நன்றாக புரிந்து கொள்ளுங்கள்)

முதலில் உங்களுடைய தயாரிப்பை திறம்பட செய்வதற்கு நீங்கள் சில தகவல்களை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும், தேர்வின் மதிப்பெண் திட்டம், கேள்விகளின் முறை, பாட புத்தகங்களின் முறை இந்த ஆண்டு தேர்வுகளில்.

கொண்டு வரப்பட்டுள்ள மாற்றங்கள், தேர்வு நேரங்களில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்கள், பாட புத்தகங்களின் மாற்றங்கள், போன்றவற்றை பற்றி நன்றாக தெரிந்து கொண்டு அதற்கு ஏற்றது போல் திட்டமிட வேண்டும்.

Allocate time according to syllabus (பாடத்திட்டத்திற்கு ஏற்ப நேரத்தை ஒதுக்குங்கள்)

தேர்வில் சில நபர்கள் தொடர்ந்து தோல்வி அடைவதற்கு இரண்டு முக்கிய காரணம் ஒன்று கணிதம் மற்றொன்று திறன் அறிதல் சில நபர்கள் தமிழ், விலங்கியல், தாவரவியல், வேதியல், இயற்பியல், நடப்பு நிகழ்வுகள், போன்றவற்றில் நன்றாக மதிப்பெண்கள் பெறுவார்கள்.

ஆனால் கணிதம் மற்றும் மனதிறனறிவு போன்றவற்றில் குறைவான மதிப்பெண்கள் பெற்று விடுவார்கள் இதனால் அது போன்ற நபர்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்பு கிடைப்பதில் சிக்கல்கள் ஏற்படும் உங்களுக்கு எந்த பாடப்பகுதி மிகவும் கடினமாக இருக்கிறதோ அதற்கு தினமும் குறைந்தது இரண்டு மணி நேரமாவது ஒதுக்கி தயாராகுங்கள்.

ஒரு சிறந்த அட்டவணையை உருவாக்கிக் கொள்ளுங்கள் அதற்கேற்றார் போல் உங்களுடைய தயாராகும் விதத்தை ஒவ்வொரு விதமாக மாற்றிக் கொள்ளுங்கள் குறிப்பாக உங்களுடைய இலக்கு 180 கடக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருங்கள்.

New study materials

ஒவ்வொரு வருடம் அல்லது ஒவ்வொரு தேர்விற்கும் ஒரு முறை நீங்கள் உங்களுடைய New study materials மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஒவ்வொரு முறையும்.

தேர்வுக்குப் பின் அல்லது ஒவ்வொரு ஆண்டும் தேர்வில் மற்றும் பாடத்திட்டங்களில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வருகிறது அதனை நீங்கள் புரிந்து கொண்டு அதற்கேற்றார் போல் தயாராக வேண்டும்.

Focus on Basic (அடிப்படைகளில் கவனம் செலுத்துவது நன்று)

இயற்பியல் வேதியல் மற்றும் நடப்பு நிகழ்வுகள் போன்றவற்றில் எளிமையான கேள்விகள் கேட்கப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் குறிப்பாக நாம் தினமும் பயன்படுத்தப்படும் பொருட்கள் அல்லது விதிகளின் அடிப்படையில் கேள்விகள் கேட்கப்படும்.

நடப்பு நிகழ்வுகள் மிக எளிமையானது இதில் கேட்கப்படும் கேள்விகள் தினந்தோறும் நம் நாட்டில் நடக்கும் முக்கியமான நிகழ்வுகளை பற்றி கேள்விகள் கேட்கப்படுகிறது அதற்கு நீங்கள் செய்தித்தாள்கள் படித்து வந்தால் போதும்.

தொடர்ந்து பயிற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும் (Practice Regularly)

கணிதத்தில் தொடர்ந்து தோல்வியடைவதால் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் இந்த அரசு வேலைவாய்ப்பை இழக்கிறார்கள், கணிதத்தில் நல்ல மதிப்பெண்கள் பெறவேண்டும் என்றால் தொடர்ந்து பயிற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும்.

தினம்தோறும் கணிதத்திற்கு குறைந்தது 2 மணி நேரம் ஒதுக்கி கொள்ளுங்கள் முக்கியமான வினா விடைகள், பாடப்பகுதிகள், formula போன்றவற்றை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.

Regular Mock Test (தொடர்ந்து மாதிரி தேர்வுகள்)

தேர்வில் வெற்றி பெற்று வேலை கிடைக்கும் வரை நீங்கள் தொடர்ந்து மாதிரி தேர்வுகளில் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டே இருக்க வேண்டும், மாதத்திற்கு ஒரு முறையாவது மாநில அளவில் நடைபெறும் மாதிரி தேர்வுகளில் கலந்து கொள்ளுங்கள்.

TNPSC குரூப் 4 2024 வேலை வகைகளின் பட்டியல் எதிர்பார்க்கப்படும் கட் ஆஃப் மதிப்பெண்கள்..!

தனியார் பயிற்சி மையங்கள் மற்றும் சில நாளிதழ்கள் மாதத்திற்கு ஒருமுறை இலவசமாக இணையதளத்தில் பயிற்சிகளை நடத்துகிறது அதுபோன்ற தேர்வுகளில் கலந்து கொள்ளுங்கள் உங்களுடைய எவ்வளவு தயாராகி உள்ளீர்கள்.

மாதிரி தேர்வுகளில் எவ்வளவு கட் ஆப் மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் என்பதை முழுமையாக தெரிந்து கொண்டால் அதன் அடிப்படையில் மேலும் துல்லியமாக தயாராகி வேலை வாய்ப்பை பெற முடியும்.

JOIN OUR GROUPS

WHATSAPP CLICK HERE
TELEGRAM CLICK HERE

Leave a Comment