TNPSC குரூப் 4 2024 வேலை வகைகளின் பட்டியல் எதிர்பார்க்கப்படும் கட் ஆஃப் மதிப்பெண்கள்..!TNPSC group 4 2024 Job categories list expected cutoff

TNPSC group 4 2024 Job categories list expected cutoff

TNPSC குரூப் 4 2024 வேலை வகைகளின் பட்டியல் எதிர்பார்க்கப்படும் கட் ஆஃப் மதிப்பெண்கள்..!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தியுள்ள GROUP-4 தேர்வு குறித்து பல்வேறு தகவல்கள் இணையதளத்தில் வருகிறது குறிப்பாக கட் ஆப் மதிப்பெண்கள் (Cut off marks) எவ்வளவு என்று இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்படவில்லை.

இருந்தாலும் முந்தைய தேர்வு உடன் ஒப்பிட்டு தனியார் பயிற்சி மையங்கள் மற்றும் தேர்வாளர்கள் சில கட் ஆப் (Cut off marks) மதிப்பெண்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்கள் இந்த மதிப்பெண்கள் பெற்றால் நிச்சயம் இந்த பணியிடம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது குறித்து முழுமையாக இந்த கட்டுரையில் பார்க்கலாம் ஒவ்வொரு வருடமும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் GROUP-4 தேர்வு எழுதும் நபர்களின் எண்ணிக்கை பல மடங்கு உயர்கிறது இளைஞர்கள் தனியார் வேலைவாய்ப்பிற்கு.

செல்வதை விட அரசு வேலைக்கு ஆர்வம் காட்டுகிறார்கள் குறிப்பாக கிராமப்புற இளைஞர்கள், இந்த GROUP-4 தேர்வில் எளிதாக வெற்றி பெற்று விடலாம் ஆனால் வேலை வாய்ப்பு கிடைப்பது மிகக் கடினம் போட்டியாளர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகம்.

ஒவ்வொரு முறையும் தேர்வு அறிவிக்கப்படும் போது குறைந்தது 20 லட்சம் நபர்கள் விண்ணப்பம் செய்கிறார்கள் ஆனால் தேர்வு எழுதும் நபர்களின் எண்ணிக்கை 15 லட்சத்திற்கு அதிகமாக இருக்கிறது இந்த GROUP-4 தேர்வு மூலம் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் 10ம் வகுப்பு கல்வித் தகுதி அடிப்படை பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது.

குறிப்பாக இந்த ஆண்டு கிட்டத்தட்ட 10க்கும் மேற்பட்ட துறைகளில் இந்த பணியிடங்களை நிரப்புவதற்கு தேர்வுகள் நடந்து முடிந்துள்ளது இதனுடைய அறிவிப்பு 2025 ஆம் ஆண்டு வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

தேர்வு முடிவுகள் வெளியிட்ட பிறகு எவ்வளவு கட் ஆப் மதிப்பெண்கள் (Cut off marks) பெற்றால் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்ற அறிவிப்பினை வெளியிடும் அதுவரைக்கும் எந்த ஒரு தகவலையும் வெளியிட மாட்டோம் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இருந்தாலும் தேர்வு எழுதி காத்திருக்கும் இளைஞர்களின் நேரம் வீணாகிறது குறிப்பாக தேர்வில் வெற்றி பெறுவதற்கு 60% மதிப்பெண்கள் பெற்றால் போதும் ஆனால் வேலைவாய்ப்பு கிடைப்பதற்கு அதிகமான மதிப்பெண்கள் தேவை போட்டியாளர்கள் எண்ணிக்கை அதிகம்.

TNPSC Exam இந்திய புவியியல் பகுதி கால்நடைகள் பற்றிய சில அடிப்படை தகவல்கள்..!

இதனால் கட் ஆப் மதிப்பெண்கள் (Cut off marks) எவ்வளவு எந்த பணியிடத்திற்கு என்று தெரிந்தால் தேர்வெழுதிய நபர்கள் தொடர்ந்து அடுத்த ஆண்டு தேர்வுக்கு தயாராகலாம் இல்லையெனில் நிச்சயம் வேலை கிடைக்கும் என்ற உறுதியுடன் மற்ற வேலையை தொடரலாம் அவர்களுடைய வாழ்க்கையில் நேரத்தை சரியாக பயன்படுத்துவதற்கு.

Expected cut off marks as per eligibility for placement

Post Cut off marks
Village Administrative Officer 180 – 183
Typist 170 – 175
Steno Typist 140 – 144
Junior Assistant 178 – 182

JOIN OUR GROUPS

WHATSAPP CLICK HERE
TELEGRAM CLICK HERE

Leave a Comment