TNPSC Group 4 VAO Job Economics Previous Question Papers
TNPSC Group 4 VAO பொருளாதார பாடப்பிரிவின் முந்தைய வினாக்கள் மற்றும் பதில்கள்..!
நீங்கள் group 4 தேர்வில் அதிக கட் ஆப் மதிப்பெண்கள் பெற வேண்டும் என்றால் அனைத்து பாடப்பகுதிகளிலும் நன்றாக தயாராக வேண்டும் குறிப்பாக பொது அறிவு நடப்பு, நிகழ்வுகள், கணிதம், போன்ற பாடப்பகுதி உங்களை குழப்பம் வகையில் இருக்கும்.
தொடர்ந்து இதற்காக நீங்கள் தயாராகிக் கொண்டே இருக்க வேண்டும் தற்போது ஒவ்வொரு ஆண்டும் பாடப்பகுதிகள் மற்றும் தேர்வில் பல்வேறு மாற்றங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கொண்டு வருகிறது.
அதனை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் குறிப்பாக நீங்கள் மத்திய அரசு தேர்வு எழுதினாலும் சரி மாநில அரசு தேர்வு எழுதினாலும் சரி அதில் இந்தியாவின் பொருளாதாரம் பற்றிய பல்வேறு முக்கிய கேள்விகள் கேட்கப்படுகிறது இந்தப் பகுதி இல்லாமல் எந்த ஒரு போட்டித் தேர்வுகளும் நடைபெறுவதில்லை.
மிக முக்கியமான பகுதி என்பதால் நீங்கள் இந்த பகுதியில் அதிகமாக படிக்க வேண்டும் குறிப்பாக இந்தியாவின் பொருளாதாரத்திற்கான ஆதாரம், பொருளாதாரம் எப்படி கையாளப்படுகிறது, அதற்கான நிறுவனங்கள் என்ன, போன்ற பல்வேறு முக்கிய பகுதிகள் இருக்கிறது.
இதில் நீங்கள் நன்றாக தயாராகிக் கொண்டால் மட்டுமே தேர்வில் அதிகமான மதிப்பெண்கள் பெற முடியும் நீங்கள் group 4 தேர்வில் வெற்றி பெற்றாலும் நீங்கள் நினைத்த வேலை கிடைக்க வாய்ப்புகள் இல்லை அதற்கு ஒரே வழி நீங்கள் அதிகமான கட் ஆப் மதிப்பெண்கள் பெற வேண்டும்.
அதிகமான கட் ஆப் மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே உங்களுக்கு பிடித்தமான கிராம நிர்வாக அலுவலர் பணியிடத்தை பெற முடியும் தற்போது கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தின் முக்கிய நிறுவனங்கள் மற்றும் அதற்கான ஆண்டுகள் பற்றி நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
முக்கிய நிறுவனங்கள் மற்றும் அதற்கான ஆண்டுகள்
இந்தியன் இம்பீரியல் வங்கி – ஜனவரி 27 1921
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) – ஏப்ரல் 1 1935
இந்தியா தொழில்துறை நிதி நிறுவனம் (IFCI) – ஜூலை 1 1948
இந்திய ரிசர்வ் வங்கி நாட்டு உடமையாக்கம் – ஜனவரி 1 1949
இந்தியா ஸ்டேட் வங்கி நாட்டு உடமையாக்கம் – ஜூலை 1 1955
இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (LIC) – செப்டம்பர் 1 1956
யூனிட் டிரஸ்ட் ஆப் இந்தியா (UTI) -பிப்ரவரி 1 1964
இந்திய தொழில்துறை வளர்ச்சி வங்கி (IDBI) -ஜூலை 1 1964
பொது காப்பீட்டு கழகம் (GIC) – நவம்பர் 1972
வீட்டு வசதி மேம்பாட்டு நிதி கழகம் (HDFC) – அக்டோபர் 17 1977
எக்ஸிஸ் பேங்க் (EXIM BANK) -ஜனவரி 1 1982
நபார்டு வங்கி (NABARD) – ஜூலை 12 1982
தேசிய வீட்டு வசதி வங்கி (NHB) -ஜூலை 12 1982
உள்கட்டமைப்பு குத்தகை மற்றும் நிதி சேவைகள் லிமிடெட் -1988
இந்திய தொழில் நுட்ப மேம்பாடு மற்றும் தகவல் கம்பெனி லிமிடெட் – 1989
இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி (SIDBI) -ஏப்ரல் 2 1990
யூனிட் டிரஸ்ட் ஆப் இந்தியா பிரிப்பு – பிப்ரவரி 2003
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |