TNPSC Group 4 exam கட் ஆஃப் மதிப்பெண்களில் மாற்றங்கள் வருகிறது இந்த வருடம்..!TNPSC Group 4 exam cut off marks changes coming this year

TNPSC Group 4 exam cut off marks changes coming this year

TNPSC Group 4 exam கட் ஆஃப் மதிப்பெண்களில் மாற்றங்கள் வருகிறது இந்த வருடம்..!

TNPSC Group 4 தேர்வு எழுதியவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி தற்போது கசிந்துள்ளது அதாவது இந்த ஆண்டு கட் ஆப் மதிப்பெண்களின் சில மாற்றங்கள் வருவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

கடந்த ஜூன் மாதம் 9ம் தேதி தமிழக முழுவதும் 7247 தேர்வு மையங்களில் 6244 காலி பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற்று முடிந்துள்ளது இதில் 15 லட்சத்திற்கு அதிகமான நபர்கள் தேர்வு எழுதி உள்ளார்கள்.

இந்த தேர்வு முடிவு 2025 ஜனவரி மாதம் வெளியிடப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது தேர்வு முடிந்த பிறகு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (Answer Key) மட்டுமே வெளியிட்டுள்ளது இது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

கட் ஆப் மதிப்பெண்கள் குறைவதற்கு அதிக வாய்ப்புகள்

வழக்கமாக எப்போதும் கேட்பதைவிட இந்த முறை கணிதத்தில் இரண்டு கேள்விகள் கூடுதலாக கேட்கப்பட்டிருந்தது, மேலும் பொது அறிவு கேள்விகள் மிகவும் கடினமாக இருந்தது 10 கேள்விகள் மிக கடினமாக இருந்தது என தேர்வாளர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

TNPSC Group 4 தேர்வு என்றாலும் அது குரூப் 2 க்கு இணையாக சில கேள்விகள் குரூப் 1க்கு தேர்வு இணையாக கேட்கப்பட்டுள்ளது என தெரிவிக்க தெரிவித்து வருகிறார்கள், இந்த தேர்வு முன்பை விட இப்பொழுது கடினமாக இருந்ததால் கட் ஆப் மதிப்பெண்கள் குறைவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது என கருதப்படுகிறது.

ஆனால் இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை ஆனால் இந்த முறை கடந்த முறையை விட 2 மதிப்பெண் குறைவாக வழங்கப்படலாம் என tnpsc வட்டாரங்களில் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத சில தகவல்கள் கசிந்துள்ளது.

TNPSC Group 4 தேர்வில் வரலாற்று பாடப் பகுதியில் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டுமா..!

தேர்வு முடிவுகள் வெளியிட்ட பிறகு எவ்வளவு கட் ஆப் மதிப்பெண்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று அதிகாரப்பூர்வமாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிக்கும், அதுவரைக்கும் சில அதிகாரப்பூர்வமில்லாத பல்வேறு தகவல்கள் வெளிவருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.

JOIN OUR GROUPS

WHATSAPP CLICK HERE
TELEGRAM CLICK HERE

Leave a Comment